52% இந்தியர்கள் குறைந்த நேரமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 டிச
2015
00:00

அண்மையில், எரிக்சன் நிறுவனத்தின், நுகர்வோர் சோதனை மையம், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரிடையே ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், இணையம் பயன்படுத்துபவர்கள், எவ்வளவு நேரம் அதில் செலவிடுகின்றனர் என்று கணக்கிட்டது. ஆய்வின் முடிவில், இணையத்தைப் பயன்படுத்தும் மொத்த நபர்களில், 52% பேர், மிகக் குறைந்த நேரமே, இணையத்தில் செலவிடுகின்றனர் என்பதைக் கண்டறிந்தது. இவர்கள் அனைவரும், தங்களை எந்த வலைப் பின்னலிலும் சேர்த்துக் கொள்ளாமல், (un-networked group) தனி நபர்களாகவே, இணையத்தை அணுகுகின்றனர். இவர்களில் ஐந்தில் ஒருவர் தான், இணையத்தைப் பயன்படுத்துகிறார். அவரும், வாரம் ஒருமுறையே பயன்படுத்துகிறார்.
உலக அளவில், இது போல, எந்த வலைப் பின்னலிலும் உறுப்பினர் ஆகாமல், தனியே இணையத்தைப் பயன்படுத்துவோர், 18% பேர் உள்ளனர். இவர்களிலும் பெண்களே அதிகம் உள்ளனர். இவர்களின் வயது 40 முதல் 59 வரை உள்ளது. இவர்களிடம் உள்ள சாதனத்தின் எண்ணிக்கையும் ஒன்றே ஒன்றுதான்.
ஆனால், இந்தியாவில் தனி நபர்களாக இணையத்தைப் பயன்படுத்துவோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் காட்டிலும், இணையம் வழி தங்களுக்கு வேண்டியதைப் பெறுவது எளிது எனத் தெரிவித்துள்ளனர்.
பன்னாட்டளவில், 82% பேர் ஏதேனும் ஒரு வலைப்பின்னலில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இத்தகையோர் 48% மட்டுமே உள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. (http://www.dnaindia.com/topic/netizens)
இந்த ஆய்வினை, எரிக்சன் நிறுவனம், 45,290 பேரை நேரடியாகப் பேட்டி கண்டு எடுத்துள்ளது. இவர்களின் வயது வரம்பு 15 முதல் 69 ஆக இருந்தது. இணையம் பயன்படுத்தும் 120 கோடி மக்களின் பிரதிபலிக்கும் வகையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இந்தியா உட்பட, 24 நாடுகளில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இணைய வலைப்பின்னலில் இருந்து கொண்டு இணையத்தைப் பயன்படுத்துவோர், சராசரியாக, மூன்று சாதனங்களைக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி, இணையத்தை அணுகுகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாகக் குறைந்தது ஒரு மணி நேரம் பயன்படுத்துகின்றனர். இணையம் பயன்படுத்தத் தங்கள் சொந்த சாதனங்களுடன், ஏழு சாதனங்களை நம்பி உள்ளனர்.
இந்த 24 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கலந்து கொண்டவர்களில், 43% பேர், இணையம் தங்கள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவது தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் 41% பேர், தொழில் நுட்பமானது, உலகில் பலரின் நட்பினைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கூறியுள்ளனர். உலக அளவில் ஏற்படும் வளர்ச்சியினை அறிந்து உணர முடிகிறது. நாட்டின் எல்லைகள் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 31% பேர், கடந்த ஐந்து ஆண்டுகளில்,இணையத்தின் காரணமாக, தங்களின் பொருட்கள் வாங்கும் பழக்கத்தில் பெருத்த மாறுதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். பெரும்பாலான பொருட்களை இணையம் வழியாகவே வாங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X