மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் புதிய ஸ்மார்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
00:00

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சென்ற மாதம், தன் கேன்வாஸ் வரிசையில், இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. இதன் பெயர்கள் Canvas Mega E353 மற்றும் Canvas Mega 4G Q417. இவை இரண்டும் 4ஜி ஸ்மார்ட் போன்களாகும். இவற்றின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

மெகா இ 353 மாடல்: திரை 5.5 அங்குலம். பிக்ஸெல் திறன் 1280 x 720 . எச்.டி. டிஸ்பிளே கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர், மீடியா டெக் MT6592M ப்ராசசராகும். இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் 5.1. லாலி பாப் சிஸ்டம் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு, 13 எம்.பி. திறனுடன் பின்புறக் கேமராவும், 5 எம்.பி. திறன் கொண்ட முன்புற செல்பி கேமராவும் செயல்படுகின்றன. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 154×78.7×8.9 மிமீ. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,820 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,999.

கேன்வாஸ் மெகா 4G Q417 மாடலின் சிறப்பம்சங்கள்: திரை 5.5 அங்குலம். பிக்ஸெல் திறன் 1280 x 720 . எச்.டி. டிஸ்பிளே கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர், மீடியா டெக் MT6735 ப்ராசசராகும். இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு உயர்த்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் 5.1. லாலி பாப் சிஸ்டம் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு, 13 எம்.பி. திறனுடன் பின்புறக் கேமராவும், 5 எம்.பி. திறன் கொண்ட முன்புற செல்பி கேமராவும் செயல்படுகின்றன. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,500 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச விலை ரூ. 10,999.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X