கூகுள் லூன் திட்டத்திற்குத் தடை வருமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
00:00

கூகுள் நிறுவனத்தின் 'லூன் பலூன் இணைய திட்டம்', உலகெங்கும் இணைய இணைப்பினை, அணுக இயலாத இடத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
தரை மட்டத்திலிருந்து, 20 கிமீ உயரத்தில், இந்த லூன் பலூன்கள் பறந்தவாறே, கீழே வாழும் மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும். அமெரிக்கா, நியுசிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளில் இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இந்தியாவில், இணையம் பயன்படுத்தும் மக்கள், உலக அளவில் மூன்றாவது (இரண்டாவது!) இடத்தில் இருந்தாலும், இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், இணையப் பயன்பாடு மிகவும் குறைவுதான். ஏனென்றால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள், தொலை தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தர இயலாத இடங்களில் வசிப்பதே இதற்குக் காரணம் ஆகும். எனவே தான், இந்த திட்டத்தினை, இந்தியாவில் அமல்படுத்த கூகுள் முன் வந்த போது, இந்திய அரசு, முதல் கட்டமாக, சோதனை முறையில் செயல்படுத்த அனுமதி தந்தது. இந்த தகவலை கம்ப்யூட்டர் மலர் இதழில், இரு வாரத்திற்கு முன்னர் தந்திருந்தோம். தற்போது அதனால் ஏற்படும் சில சிரமங்களை, தொலை தொடர்பு நிறுவனங்களும், மத்திய அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் தொலை தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், லூன் திட்டம் பயன்படுத்தும் அலை வரிசை, இந்தியாவில் தொலை தொடர்பு துறையில் இயங்கி வரும் நிறுவனங்களின் அலை வரிசை மற்றும் வலைப்பின்னலில் குறுக்கீடு செய்திடும் வகையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கூகுள் திட்டமிடும் அலைவரிசையில், ஏற்கனவே, தொலை தொடர்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எனவே, அவற்றின் செயல்பாட்டிற்கு, லூன் திட்டம் இடையூறாக அமையும்.
தற்போது புழக்கத்தில் இருக்கும் அலைவரிசையின் திறனைக் காட்டிலும் கூடுதல் திறனுள்ள அலைவரிசை கிடைக்கும் நிலையில், இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம் என்று தெரிகிறது.
டவர்களும் வயர்களும் இல்லாமல், நேரடியாக ஆகாயத்திலிருந்து, தொலை தொடர்பு நிறுவனங்கள் வழியாக, ஸ்மார்ட் போன்களுக்கு இணைப்பு கிடைத்தால், அது இணைய தொடர்பில் புரட்சிகரமானதாகவே அமையும். விரைவில் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, லூன் திட்டத்தின் பயன் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X