பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
00:00

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிச்சயம் அதன் இலக்கினை எட்டிவிடும். இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. ஒரு சில எதிர்பார்ப்புகளை நாம் எதிர்பார்க்கும் அளவில் இந்த சிஸ்டம் தரவில்லை என்றாலும், முந்தைய இயக்கங்களைக் காட்டிலும் விரைவாகவும், எளிமையுடனும் இந்த சிஸ்டம் செயல்படுவது, இதனைத் தொடர்ந்து பயன்படுத்திப் பார்த்தால் தெரியவரும். குறிப்பாக இதனுடன் வரும் எட்ஜ் பிரவுசரின் வேகம் நமக்கு அதிகம் பயன்படுகிறது என்பது உண்மை.
என். காஞ்சனமாலா, தென்காசி.

90% கிராமங்களில் மொபைல் இணைப்பு என்பது மிகப் பெரிய சாதனை தான். ஆனாலும், மக்களிடம் இது இன்னும் பரவலாகச் சென்றடைய வேண்டும். மொபைல் சேவையுடன் சேர்த்தே, இணைய சேவையும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், பயனாளர்கள் முழுப் பயனையும் அடைய முடியும்.
என். கார்த்திகேயன், ராஜபாளையம்.

தன் பிரவுசர் சந்தையை, ஒரு நிலைப்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் மைக்ரோசாப்ட் ஈடுபடுவதை, அதன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை முடிவிற்குக் கொண்டுவருவதில் காணலாம். உதவி கோப்புகள் நிறுத்தப்பட்டால் தான், எல்லாரும் எட்ஜ் பிரவுசருக்கும், அதற்காக, விண்டோஸ் 10க்கும் மாறுவார்கள் என்பதனை, மைக்ரோசாப்ட் நன்கு உணர்ந்துள்ளது.
கே.மதியழகன், சிவகாசி.

ஹைக் செயலியில் மேற்கொள்ளப்படும் மாநில மொழிகள் பயன்பாடு தான், அதன் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த வழியை, செயலிகள், ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைத் தருபவர்களும் பின்பற்ற வேண்டும். விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் முழுமையாகத் தமிழில் வரும் காலம் எப்போதோ?
எஸ். தீபா, மதுரை.

குரோம் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில் பலவற்றை, உங்கள் அறிவுரைப்படி நீக்கிய பின்னர், கம்ப்யூட்டர் இயக்கத்தின் வேகம் அதிகரிப்பதைக் கண்டேன். மிக்க நன்றி. இனி, இந்த செயல்பாட்டினை அடிக்கடி மேற்கொள்வேன்.
எம். சுப்ரமணியம், கோவை.

தொடு உணர்திரை தரும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பட்டை ஓர் அருமையான காலத்திற்கேற்ற கண்டுபிடிப்பு. வர்த்தக ரீதியாக இந்தியாவில் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கா. சிக்கந்தர், காரைக்கால்.

Seized Domain குறித்த குறிப்புகள் அடங்கிய பதில் மிகவும் பயனுள்ள ஒன்று. இனி இந்த எச்சரிக்கையின் போது நாங்கள் கவனமாக இருக்க உதவுகிறது.
ஆர். பசுபதி, தேவாரம்.

பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தவரை, இந்தியாவை மிகச் சிறந்த சந்தையாகக் கருதுகின்றன. இந்த வகையிலேயே, கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை, இந்தியாவை மையமாகக் கொண்டு தருவதில் முனைந்துள்ளது. விளம்பரங்கள் அதிக வருமானத்தினைத் தருவதால், சேவைகள் குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ வழங்கப்படும். இதனை இந்திய நிறுவனங்களே மேற்கொள்ளலாம். அல்லது அரசாங்கத்தின் பொதுத் துறை நிறுவனங்கள் மேற்கொள்ளலாம். அதற்கான வசதி வாய்ப்புகளை அரசு பெற்றுத் தரலாம்.
பேரா. டாக்டர் கி.இராமமூர்த்தி, கோவை

யாஹூ அக்கவுண்டு மூடுவதனால் ஏற்படும் விளைவுகள், அதனை எப்படி மூடுவது என்ற ஐயங்களுக்கு தெளிவாக விளக்கப் பதில் அளித்துள்ளீர்கள். சற்று யோசித்துத்தான் எந்த அஞ்சல் அக்கவுண்ட்டினையும் மூட வேண்டும் போல் தெரிகிறது.
கா. சூரிய நாராயணன், பல்லடம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X