சராசரியாக 32 அப்ளிகேஷன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
00:00

இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், தங்கள் போன்களில், சராசரியாக 32 அப்ளிகேஷன்களைப் பதிந்து வைத்துப் பயன்படுத்துவதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. புதிதாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் போனை வாங்குகின்றனர். இவை குறைவான மெமரி இடத்தைக் கொண்டிருப்பதால், இதில் பதிந்து பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், பெரும்பாலான பயனாளர்கள், 2ஜி நெட்வொர்க் அமைந்த போன்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். இணைய வேகம் குறைவாகக் கிடைப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். எனவே தான், பதிந்து பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.
பன்னாட்டளவில், மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், சராசரியாக 42 அப்ளிகேஷன்களைப் பதிந்து வைத்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. தரவிறக்கம் செய்து பதிந்த அப்ளிகேஷன்களில், பெரும்பாலான போன்களில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் அப்ளிகேஷன்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், இவற்றில் பெரும்பாலானவை ஆங்கில மொழியில் அமைந்த அப்ளிகேஷன்களாகும். இந்தி மொழியில் அமைந்த அப்ளிகேஷன்கள் 26% ஆக உள்ளன.
சென்ற ஆண்டில், தரவிறக்கம் செய்து பயன்படுத்தப்படும் வர்த்த ரீதியான இணைய தளங்கள் பட்டியலில், ப்ளிப் கார்ட், ஸ்நாப் டீல், அமேஸான், பே டி.எம். ஆகியவை முதலிடம் கொண்டுள்ளன. தினந்தோறும் தரவிறக்கம் செய்யப்படும் அப்ளிகேஷன்களில், கேம்ஸ் சார்ந்தவையே முதலிடம் பெறுகின்றன. இவற்றிலும், கார் பந்தயம், ஆக்ஷன் கேம்ஸ் ஆகியவையே அதிகம். இந்த விபரங்களை, அதிக எண்ணிக்கையில் இத்தகைய அப்ளிகேஷன்களை வழங்கும் 9App என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X