எல்.ஜி,யின் புதிய ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 நவ
2010
00:00

சில வாரங்களுக்கு முன், எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்  ஆப்டிமஸ் ஒன் என்ற பெயரில், தன் புதிய ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.  அதி நவீன அம்சங்கள் பலவற்றை இந்த ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் அண்மையில் வந்த பதிப்பு 2.2. இதில் பயன்படுத்தப் படுகிறது.   மேலும் பல நவீன  40 அப்ளிகேஷன் தொகுப்புகள், இதனுடன் தரப்படுகின்றன. போனின்  உள் நினைவகம் 170 எம்.பி.. 2ஜிபி மெமரி கார்ட் தரப்படுகிறது. இதன் நினைவகத்தினை 32 ஜிபி வரை மெமரி கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம்.  திரை 3.2 அங்குல தொடு திரை; பிக்ஸெல்கள் 320 x 480. பார்ம் வடிவில் அழகான ஸ்லிம்மான தோற்றம். ஜி.எஸ்.எம். நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இந்த போன் செயல்படுகிறது.  பல பார்மட் பைல்களை இயக்கும் மியூசிக் பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, கேம்ஸ், எம்பி3 ரிங் டோன் ஆகியவை இயங்குகின்றன.  இதன் ஸும் வசதி கொண்ட கேமரா 3  மெகா பிக்ஸெல்  திறன் கொண்டது. 2048 x 1536 ரெசல்யூசனில் படம் எடுக்கிறது.  வீடியோ படப் பதிவிலும், இயக்கத்திலும் பல பார்மட்கள் சப்போர்ட் செய்யப்படுகின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன.  நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது.  இதன் பேட்டரி 1500  mAh திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 700 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. தொடர்ந்து 8 மணி நேரம் பேச முடியும். இதன் பரிமாணம் 113.5 x 99 x 13.3 மிமீ. எடை 129 கிராம். இதன் அதிகபட்ச விலை ரூ. 13,500.  3ஜி சேவையை முன்னிட்டு, இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், எல்.ஜி. நிறுவனம், இந்திய வாடிக்கை யாளர்களின் எதிர்பார்ப் பினைக் கணித்து, பல ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. இந்த பிரிவில் 15% சந்தையைப் பிடிக்க எல்.ஜி. முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆப்டிமஸ் வரிசையில் ரூ.8,000 முதல் ரூ.30,000 விலையிலான மொபைல் போன்களை விரைவில் வெளியிட இருக்கிறது. விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 25,000 ஆகவும், தனிப்பட்ட வகையில்  எல்.ஜி. நிறுவன  ÷ஷா ரூம்களின்  எண்ணிக்கையை 500 ஆகவும் உயர்த்த இருக்கிறது.  மொபைல் போன் விற்பனை மூலம், அடுத்த ஆண்டின் வருமானத்தை ரூ.2,500 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக, இந்நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் மூன் பி ஷின் தெரிவித்துள்ளார்.·

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
durairajan - villupuram,இந்தியா
04-டிச-201017:46:29 IST Report Abuse
durairajan கம்ப்யூட்டர் மலர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் விரும்பி படிக்கும் மலர் அதிக செய்திகளை கொடுக்கும்படி கேட்டு கொள்கிறான்
Rate this:
Share this comment
Cancel
Selvaraju G - oklahoma,யூ.எஸ்.ஏ
02-டிச-201007:06:37 IST Report Abuse
Selvaraju  G மிகவும் உபயோகமான பகுதி. புதிய போன்கள் பற்றியும், வாங்குவது பற்றியும் நல்ல யோசனைகளும் கிடைக்கிறது. தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Manoj - Tirunelveli,இந்தியா
29-நவ-201016:20:44 IST Report Abuse
Manoj Nice Mobile
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X