வர இருக்கும் புதிய போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜன
2016
00:00

ஆண்டு தோறும் உலக அளவில் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கண்காட்சி, அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 6 முதல் 9 வரை நடைபெற்றது. இதில் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் மொபைல் போன்கள் சில குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

ஹூவே ஹானர் 5 எக்ஸ்: இந்த கண்காட்சிக்கு வந்த பலராலும், தகவல் வெளியிட்ட பத்திரிக்கைகளாலும், சிறந்த போன்களில் ஒன்றாகக் கருதப்பட்டது ஹுவே ஹானர் 5 எக்ஸ். முழுவதுமாக உலோகக் காப்பு, எல்.இ.டி. ப்ளாஷ் இணைக்கப்பட்டு, 13 எம்.பி. திறனுடன் மிகத் துல்லியமாக படம் எடுக்கும் கேமரா, 5.5 அங்குல அளவிலான, 1080x1920 பிக்ஸெல் அடர்த்தியுடன் திரை, விரல் ரேகை சென்சார் மற்றும் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். 2 மற்றும் 3 ஜி.பி. ராம் மெமரி, 16 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி. 128ஜி.பி. வரை உயர்த்திக்கொள்ளும் வசதி ஆகியவற்றையும் இங்கு குறிப்பிடலாம். இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டது. விலை மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 200 டாலர் (கட்டுப்பாடு எதுவும் இன்றி) என இதன் விலை இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியது.
சற்றுப் பெரிதாக, 6 அங்குல அளவிலான திரையுடன் Huawei Mate 8 என்ற மாடல் போனும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இது ஒரு பேப்லெட் ~ போன் மற்றும் டேப்ளட் பயன்பாடு கொண்டது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மார்ஷ்மலாய். இதன் ப்ராசசர் அதிவேகத்தில் இயங்கும் Kirin 950. 3 மற்றும் 4 ஜி.பி. ராம் மெமரியுடன் இரு வகை மாடல்கள் வெளியாகின்றன. ஸ்டோரேஜ் மெமரி 128 ஜி.பி. என்பது இன்னொரு மாடலின் தனிச் சிறப்பு. இதன் விலை குறித்து எதுவும் தெரியவில்லை.

எல்.ஜி. கே 10: இதன் திரை 5.3 அங்குலம். பிக்ஸெல் அடர்த்தி 1280x720. 2,300mAh திறன் பேட்டரி, குவாட் கோர், ஆக்டா கோர் என மாடலுக்கேற்ற ப்ராசசர், 1,1.5 மற்றும் 2 ஜி.பி. என ராம் மெமரி, 8 / 16 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, 8 / 5 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா எனப் பல மாடல்களில் வெளிவருகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பது எது என அந்நேரத்தில் தெரியவரும். இதே நிறுவனத்தின் 5 அங்குல அளவிலான திரை கொண்ட இன்னொரு மாடல் எல்.ஜி. கே7 என்ற பெயரிலும், இக்கண்காட்சியில் பார்வைக்குக் காட்டப்பட்டது.

அல்காடெல் மொபைல் போன்கள்: பெரிய திரையாக, 6 அங்குல அகலத்தில் 720x1280 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடிய பல மாடல் மொபைல் போன்களை, அல்காடெல் அறிமுகம் செய்தது. Alcatel OneTouch Pixi 4 என்ற 4ஜி ஸ்மார்ட் போன் இதில் குறிப்பிடத்தக்கது. இதன் பேட்டரி திறன் 2,580mAh. ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய் சிஸ்டத்துடன் OneTouch Pixi 4 (4), ஒரு மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 4 அங்குல அளவில் மட்டுமே உள்ளது. இவை பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராண்ட் எக்ஸ் 3: சீன நிறுவனமான ZTE நிறுவனம் காட்சிக்குத் தந்த மொபைல் போன்களில், அனைவரின் கவனத்தைக் கவர்ந்தது, Grand X3 ஸ்மார்ட்போன். இதன் 5.5 அங்குல அளவிலான திரை 1280x720 பிக்ஸெல் அடர்த்தி கொண்டது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப்ட்ரேகன் ப்ராசசர், 2 ஜி.பி. ராம் மெமரியில் இயங்குகிறது. பேட்டரி 3,080mAh திறன் கொண்டது. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. ஆண்ட்ராய்ட் லாலி பாப் 5.1 சிஸ்டம் பதியப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. டைப் சி போர்ட் இதன் இன்னொரு சிறப்பாகும். இரண்டு கேமராக்கள் மற்றும் அனைத்து மல்ட்டி மீடியா வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன. இது பட்ஜெட் விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

லீ மாக்ஸ் ப்ரோ: தொழில் நுட்ப ரீதியாகப் பலராலும் பேசப்பட்டது, சீன நிறுவனமான Letv நிறுவனத்தின் Letv's Le Max Pro என்னும் ஸ்மார்ட் போன் ஆகும். பல வகைகளில் இது முதல் போனாக உள்ளது. குவால்காம் நிறுவனத்தின், நவீன Snapdragon 820 சிப்செட் கொண்டு வடிவமைக்கப்பட்டது இந்த மாடல். 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதில் புதிய வகையான விரல் ரேகை சென்சார் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இந்த விரல் ரேகை உணர்தல், புதிய வகை அல்ட்ரா சோனிக் தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதன் திரை 6.33 அங்குல அளவில், 1440 x 2560 பிக்ஸெல் அடர்த்தியுடன் அமைந்துள்ளது இதன் தனிச் சிறப்பு. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் புதிய பதிப்பான மார்ஷ் மலாய் இயங்குகிறது. 3400 mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது.
4 ஜி.பி. ராம் மெமரியும், ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி.யுமாக உள்ளது. இதன் கேமரா 21 எம்.பி. திறன் கொண்டது. குவால்காம் நிறுவனத்தின், சார்ஜ் செய்வதில் அதிவேக தொழில் நுட்பத் திறன் கொண்ட Quick Charge 2.0 திறன் இதில் தரப்பட்டுள்ளது. விலை குறித்து எதுவும் தகவல் இல்லை என்றாலும், சீன நிறுவனம் என்பதால், கட்டுப்படியாகும் விலையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அதிவேக தொழில் நுட்பத்தினை விரும்புவோர், இதனை உடனடியாக வாங்கலாம். இந்தியாவில் இது எப்போது அறிமுகமாகும் எனவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் கிடைக்கும் 4ஜி சேவையினை இதில் இயக்கலாம்.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X