பேஸ்புக் இமெயில் சேவை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 நவ
2010
00:00

சென்ற வாரம் பேஸ்புக் இணையதளம், தன் 50 கோடி நேயர்களுக்காக, இமெயில் சேவையினைத் தொடங்குவதாக அறிவித்தது, இணைய உலகில் பெரிய செய்தியாக வலம் வருகிறது.  இன்னும் இரண்டொரு மாதங்களில் இது கிடைக்கும் என இதன் தலைமை நிர்வாகி ஸக்கர் பெர்க் அறிவித்துள்ளார். 
இதில் இமெயில் என்பது பேஸ்புக் மெசேஜஸ் (Facebook Messages) என்பதின் ஒரு பகுதியாகத் தான் இருக்கும். இந்த சிஸ்டத்தில் இமெயில், பேஸ்புக் மெசேஜ், எஸ்.எம்.எஸ். மற்றும் சேட் எனப்படும் அரட்டை வசதி ஆகிய அனைத்தும் கொண்டதாக அமையும். இவற்றின் மூலம் தங்களுக்குப் பிடித்த வகையில், தகவல்களையும் கோப்புகளையும் வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.  இமெயில் கணக்கு வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு, அவர்கள் பயனாளர் பெயர் இணைந்த  @Facebook.com  என்ற இமெயில் முகவரி தரப்படும்.  இதனைப் பயன்படுத்தி, பேஸ்புக் மட்டுமின்றி வேறு எந்த இமெயில் நெட்வொர்க் அக்கவுண்ட்டிற்கும், மெயில் அனுப்பிப் பெறலாம். விரைவில் ஐ-போனிலும் இது அமல்படுத்தப்படும் என்றும், அதற்கென 15 தகவல் தொழில் நுட்ப பொறியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த இமெயில் பிரிவில் கீழ்க்காணும் வசதிகள் தரப்படும்.
1. இமெயில் மூலம் பேஸ்புக் மற்றும் வெளி நெட்வொர்க்குகளில் உள்ளோருடன் தொடர்பு மற்றும் தகவல், கோப்புகள் பரிமாற்றம்.
2. இருவருக்கு இடையே உள்ள அனைத்து தொடர்புகளும், ஒரே உரையாடலாக அமைக்கப்படும். இவை வெவ்வேறு தலைப்பில் இருந்தாலும், ஒரே உரையாடலாகவே கிடைக்கும்.
3. மற்ற இமெயில் தளங்களில் இல்லாத ஒரு வசதி இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. உங்கள் இமெயில்களில் அதிக முக்கியத்துவம் கொண்டவை அனைத்தும் தனியே முன்னுரிமை தொகுப்பாக வைக்கப்படும். இவற்றிற்கு சிறப்பு போல்டர்கள் தரப்படும்.  அதே போல முக்கியமானவர்கள் என நீங்கள் கருதும் ஒருவரின் மெயில்களும் பாதுகாக்கப்பட்டு தனியே போல்டரில் கிடைக்கும்.
பேஸ்புக் மெயில் வசதி, வரும் சில மாதங்களில் இன்விடேஷன் மூலம் தரப்படும். தற்போது நீங்கள் உங்களுக்கான இமெயில் முகவரியினை, முன்கூட்டியே பதிவு செய்து வைத்திட வசதி தரப்பட்டுள்ளது. பேஸ்புக்  மெசேஜ் பக்கத்தில் இதற்கான அறிவிப்பினைக் காணலாம்.
இந்த வசதி, பேஸ்புக், கூகுள் நிறுவனத்தை நோக்கி எறியும் புதிய அம்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் ஒரே இரவில், அனைத்து ஜிமெயில் பயன்படுத்துபவர்களும், அதனை விட்டுவிட்டு பேஸ்புக் இமெயிலுக்கு மாறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சில மாதங்களுக்குப் பின், இமெயில் சேவை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என அனைவரும் குறிப்பிடும் வகையில், எங்கள் சேவை இருக்கும் என பேஸ்புக்  தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.  கூகுள் தன் தேடும் வசதிகளுடன் தரும் பிற வசதிகள் அனைத்தையும், பேஸ்புக் தர முயற்சிக்கிறது. போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வது, உடனடி மெசேஜ் விண்டோ, ஸ்கைப் உடன் இணைந்து வீடியோ அழைப்பு அமைத்தல் ஆகியவையும் கிடைக்கின்றன.  இப்படி இலவச சேவைகளை இந்த முன்னணி நிறுவனங்கள் தருவது நமக்கு நல்லதுதானே. நம்ம காட்ல மழைதான் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X