டாகுமெண்ட்டில் கூட்டல் கணக்கு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 நவ
2010
00:00

வேர்டில் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில், பல எண்களைக் குறிப்பிடும் சூழ்நிலை இருக்கும். எடுத்துக் காட்டாக, பல வகை பொருட்கள் வாங்கியது பற்றி அதில் எழுதலாம். பின்னர் ஓரிடத்தில், இவற்றின் மொத்த கூட்டுத் தொகையைக் குறிப்பிட எண்ணலாம். அப்போது அவற்றை ஒவ்வொன்றாக மீண்டும் அமைத்து கூட்டலாம். அல்லது வேர்டுக்கு வெளியே சென்று கால்குலேட்டரை இயக்கி, கூட்டல் பார்த்து, பின்னர் அந்த மதிப்பை ஆவணத்தில் டைப் செய்திடலாம். பின்னாளில், ஏதேனும் ஒரு மதிப்பை மாற்றினால், மீண்டும் இதே கூட்டல் முறையை மேற்கொள்ள வேண்டும்.  இந்த பிரச்னைகள் எதுவுமின்றி, வேர்ட் தொகுப்பே இந்த கூட்டலை மேற்கொள்ள வழி உள்ளது. அது மட்டுமின்றி, பின்னொரு நாளில், ஏதேனும் ஒரு மதிப்பை மாற்றுகையில், கூட்டல் தானாகவே மாறிக் கொள்ளும் வகையிலும் பார்முலா அமைக்கலாம். இந்த  வழிகளை இங்கு காண்போம்.
ஆவணம் ஒன்றில் பண மதிப்பினைப் பல இடத்தில் குறிப்பிட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம்.
1.எந்த மதிப்பினை எல்லாம் கூட்டி அறிய வேண்டும் எனக் குறித்துக் கொண்டு, முதல் மதிப்பிற்குச் செல்லவும்.
2.அதனை செலக்ட் செய்திடவும். இதற்கு ஒரு புக்மார்க் இணைக்கவும். இந்த புக்மார்க்கிற்கு Amount1  என்று பெயரிடவும். (புக்மார்க் அமைப்பது குறித்த தகவலுக்கு உள் கட்டத்தினைப் பார்க்கவும்)
3. இப்படியே ஒவ்வொரு மதிப்புக்கும் ஒரு புக்மார்க் ஏற்படுத்தி, ஒவ்வொரு பெயர் தரவும்.
4. அடுத்து இவற்றின் மொத்த டோட்டல் கூட்டல் எங்கு கிடைக்க வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு செல்லவும்.    
5. இங்கு Ctrl+F9  கீகளை அழுத்தவும்.  இதனால், பீல்டு ஒன்று அமைப்பதற்கான அடைப்புக் குறிகள் கிடைக்கும். கர்சர் இந்த அடைப்புக் குறிகளுக்குள் இருக்க வேண்டும்.
6. இங்கு எத்தனை மதிப்புகளைக் கூட்டி கூட்டல் மதிப்பு தெரிய வேண்டுமோ, அவற்றின் புக்மார்க் பெயர்களைப் பயன்படுத்தி  =Amount1 + Amount2 + Amount3  என டைப் செய்திடவும்.
7. அடுத்து F9 அழுத்தவும். இனி ஆவணத்தில் நீங்கள் டைப் செய்த புக்மார்க்குகள் இருக்கும் இடத்தில், எந்த மதிப்பினை மாற்றினாலும், இந்த கூட்டல் தொகை தானாகவே மாறும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ரூபாய் அல்லது டாலர் அடையாளம் இணைந்த எண்கள் இருந்தால், இந்த கூட்டல் பார்முலா செயல்படாது. எனவே எண்களை மட்டும் வைத்து இயக்க வேண்டும்.

புக் மார்க் அமைக்கலாம்
புக்மார்க் அமைப்பது எப்படி, எதற்கு என்று இங்கு பார்ப்போமா! புக்மார்க் என்பது ஒரு டெக்ஸ்ட்டில் ஓர் இடத்தைச் சுட்டிக்  காட்டும் அடையாளம் ஆகும். பின்னாளில் டெக்ஸ்ட்டை மீண்டும் மாற்றி அமைக்கப் பார்க்க எண்ணுகையில் இது உதவிடும். டாகுமெண்ட் முழுவதும் தேடாமல், புக்மார்க் டயலாக் பாக்ஸ் மூலம் எளிதாக இந்த இடங்களுக்குச் செல்லலாம். புக்மார்க்கை அமைக்க, முதலில் எந்த இடத்தில் புக்மார்க் அமைக்க வேண்டுமோ,அல்லது எந்த டெக்ஸ்ட்டிற்கு புக்மார்க் அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின்னர், Insert  மெனு சென்று Bookmark  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.  Bookmark name  என்பதில் இதற்கு ஒரு பெயர் தரவும். இந்த பெயர் எழுத்தில் தான் தொடங்க வேண்டும். உள்ளாக, எண்கள் இருக்கலாம். அண்டர் ஸ்கோர் கேரக்டர் இருக்கலாம். பின்னர் Add  என்பதில் கிளிக் செய்திடவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mariappan - thanjavur,இந்தியா
04-டிச-201015:25:00 IST Report Abuse
Mariappan நன்றி
Rate this:
Share this comment
Cancel
Kumar - Thirupur,இந்தியா
02-டிச-201011:22:53 IST Report Abuse
Kumar Superb Information
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X