தொடங்கியது கூகுள் இலவச வை பி சேவை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
00:00

சென்ற செப்டம்பர் மாதம், இந்தியாவின் 400 இரயில் நிலையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வை பி இணைப்பினை ஏற்பாடு செய்து வழங்க இருப்பதாக, கூகுள் அறிவித்தது.
அதன்படி, ஜனவரி 22ல், இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர், இந்த சேவை 'உலகத்தரத்திலானது' என்று புகழ்ந்துள்ளார். இந்திய ரயில்வே மற்றும் ரெய்ல்டெல் நிறுவனமும் இணைந்து இதனை ஏற்படுத்தி வழங்குகின்றன.
இந்த ஆண்டுக்குள், போக்குவரத்து அதிகம் உள்ள 100 இந்திய ரயில் நிலையங்களில் இது வழங்கப்படும். அப்போது ஒரு கோடி பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். எதிர்காலத்தில், இந்த திட்டத்தில் இன்னும் சில தொலை தொடர்பு நிறுவனங்கள் இணைய வாய்ப்புள்ளது. இந்த சேவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டம், பிரதமர் மோடி அமெரிக்காவில் இயங்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு விருந்தினராகச் சென்ற போது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை நகரை அடுத்து, அலஹாபாத், பாட்னா, ஜெய்பூர் மற்றும் ராஞ்சி ஸ்டேஷன்களில் இந்த வசதி அளிக்கப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X