இந்தியாவில் பேஸ்புக் வருமானம் ரூ.123.5 கோடி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
00:00

சென்ற நிதியாண்டில், இந்தியாவின் பேஸ்புக் நிறுவனப் பிரிவு ரூ.123.5 கோடி வருமானம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் பெற்ற ரூ.97.6 கோடியைக் காட்டிலும் 27% கூடுதலாகச் சென்ற நிதி ஆண்டில் ஈட்டியுள்ளது. சராசரியாக, ஒரு பேஸ்புக் வாடிக்கையாளர் மூலம் பெற்ற வருமானம் ரூ.9 ஆகும். இந்த வகையில், இந்தியாவைக் காட்டிலும் அதிகமாக வாடிக்கையாளர்களைப் பெற்ற அமெரிக்காவில், வாடிக்கையாளர் ஒருவர் மூலம் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.630 கிடைத்துள்ளது. எனவே, பேஸ்புக் நிறுவனத்திற்கு, இந்திய வாடிக்கையாளர்கள் அளித்துள்ள வருமானம் மிகவும் குறைவு என்றும், கவனத்தில் கொள்ள வேண்டியதல்ல என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பன்னாட்டளவில், தன் விற்பனை மூலம் பேஸ்புக் நிறுவனம் பெற்றது (1250 கோடி டாலர்) ரூ.84,000 கோடி.
இதற்குக் காரணம், இணைய தளத்தில் விளம்பரம் செய்திடும் நிறுவனங்களில், பேஸ்புக் தளங்களில் விளம்பரம் செய்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள், 70%, கூகுள் தளத்தினையே நாடுகிறார்கள். தன் பத்தாண்டு கால சேவைக்குப் பின், கூகுள் தற்போது, ஆண்டுக்கு ரூ. 4,000 கோடி வருமானமாக ஈட்டி வருகிறது.
விளம்பரங்களில் செலவு செய்வதில், சமூக இணைய தளங்கள் மற்றும் மொபைல் போன் புரோகிராம்களில், இந்திய நிறுவனங்கள் தற்போது முனைப்பாகவே உள்ளன. நடப்பு நிதி ஆண்டில், பேஸ்புக் நிறுவனத்தின் Free Basics திட்டம், விளம்பரங்கள் வழி வருமானத்தைப் பெருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த திட்டம் “எல்லாருக்கும் சமமான இணைய சேவை” என்பதிலிருந்து பலத்த எதிர்ப்பினைப் பெற்று வருவதால், வருமானம் உயர்வது சாத்தியம் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் இயக்கத்தைப் பொறுத்த வரை, மத்திய நிலை வர்த்தகத்தில் இயங்குவோருக்கு, குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்களை இலக்காகக் கொண்டு சென்றடைய நல்ல கருவியாக உள்ளது. இன்னும் 2ஜி சேவையினைப் பயன்படுத்தும், இந்திய வாடிக்கையாளர்களை எளிதாகவும் விரைவாகவும் சென்றடைய, பேஸ்புக் நிறுவனம், 'பேஸ்புக் லைட்' என்னும் வசதியைத் தற்போது அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 2ஜி சேவைக்கு அதன் வாடிக்கையாளர்கள் குறைவாகவே கட்டணம் செலுத்துவதால், பேஸ்புக் லைட் போன்ற சேவைகள் மூலம், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை அடையலாம் என்று பேஸ்புக் எண்ணுகிறது.
தற்போதைக்கு இந்தியாவில் வர்த்தக நிறுவனங்கள் விளம்பரத்திற்கென செலவழிக்கப்படும் பணத்தில், 14.2% மட்டுமே டிஜிட்டல் மீடியா வகையில் செலவிடப்பட்டு வருகிறது. ஆனால், இது தொடர்ந்து உயர்ந்து, வரும் 2019 ஆம் ஆண்டில், 25% ஐத் தாண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
130 கோடிக்கும் மேல் மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில், இன்னும் நூறு கோடிக்கும் அதிகமானவர்கள், இணைய இணைப்பினைப் பெற முடியாமல் தான் உள்ளனர். ஆனால், உலக அளவில், இணையத்தோடு தொடர்புடைய மக்களின் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, விளம்பரங்களை, இணையம் வழி இன்னும் எளிதாகக் கொண்டு சென்று, வருமானம் ஈட்ட வேண்டும் என அனைத்து இணைய நிறுவனங்களும் போட்டியிடுகின்றன. வருங்காலத்தில் ஏதேனும் புதிய வழிகளில் பேஸ்புக் பெரும் அளவில் இதனை ஈட்டிவிடும் என இந்தப் பிரிவில் இயங்குவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X