200 கோடி உலக மொபைல் இணையப் பயனாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
00:00

உலக அளவில், தகவல் தொடர்பு சாதனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் International Data Corporation என்னும் ஆய்வு அமைப்பு, நடப்பு ஆண்டில், 2016ல், மொபைல் போன்கள் வழியே இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியாக உயரும் என்று அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியா, சீனா, மற்றும் இந்தோனேஷியா நாடுகள், இந்த வகையில் முன்னணி இடங்களைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைப்பார்கள் என்றும் அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில், மொத்தத்தில், 320 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 44% பேர், இணையத்துடன் தொடர்பில் இருப்பார்கள் என்றும் இந்த மையம் அறிவித்துள்ளது. உலக அளவில் அனைத்து நாடுகளிலும், இணைய இணைப்பினை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளில், இணையப் பயன்பாடு பல இலக்குகளை முன்னிறுத்து உயர்ந்து வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட இந்த மூன்று நாடுகளிலும், அனைவரும் பயன்படுத்தும் வகையில், குறைந்த இணையக் கட்டணமும், அனைவரும் தேர்ந்தெடுக்கும் வகையில், பலவகையான டேட்டா பயன்பாடு திட்டங்களும் கிடைக்கின்றன. 2020 ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு 2% வளர்ச்சி இந்த வகையில் இருக்கும். ஆனால், ஏதேனும் புதிய வகையில் மாற்றங்கள் ஏற்பட்டால், இது இன்னும் உயரும்.
மேலும் நூறு கோடிக்கும் மேற்பட்டவர்கள், இணைய வழி வங்கிப் பயன்பாடு, இசை ரசித்துக் கேட்டல் மற்றும் வேலை தேடுதல் ஆகியவற்றிற்கு இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இருநூறு கோடிக்கும் மேலானவர்கள், மின் அஞ்சல் மற்றும் செய்திகளை அறிய இணையத்தையே நாடுகின்றனர். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையினை ஒப்பிடுகையில், இணையம் வழியாக, பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்து வருகிறது என்றும் ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X