இன்டெல் ஸ்கைலேக் ப்ராசசர் தேவையா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
00:00

கம்ப்யூட்டருக்கான ப்ராசசர் என்றாலே, நம் நினைவுக்கு வருவது, இன்டெல் நிறுவனத்தின் ப்ராசசர் தான். ஏனென்றால், ப்ராசசர் தயாரிப்பில், பல்லாண்டு செயல்பாட்டுப் பாரம்பரியம் கொண்டது, இன்டெல் நிறுவனம். முதன் முதலாக, 1971 ஆம் ஆண்டு, தன் இன்டெல் 4004, 4 பிட் ப்ராசசருடன் தன் பயணத்தினைத் தொடங்கியது இன்டெல் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூர் (Gordon Moore) என்பவரின் கணிப்பே 'மூர் விதி' என ப்ராசசரின் கட்டமைப்பு குறித்துத் தற்போது பேசப்பட்டு வருகிறது. “ஒவ்வொரு இரண்டு ஆண்டிலும், செறிந்த சர்க்யூட்டில் இணைக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும்” என்று தெரிவித்தார். இந்த வகையில் இன்டெல் நிறுவனத்தின் ப்ராசசர்கள் தொடர்ந்து தங்கள் திறனை அதிகரித்து வருகின்றன. அவை, அளவில் சிறியதாவது மட்டுமில்லாமல், செயல் திறனிலும், அதிக சக்தியினைக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. 2007 ஆம் ஆண்டு, இன்டெல் தன் Core வரிசை மைக்ரோ ப்ராசசர்களை உருவாக்கி அளிக்கத் தொடங்கியது. இவை பயனாளர்கள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வல்லுநர்களிடமிருந்தும் பாராட்டினைப் பெற்றன. கம்ப்யூட்டர்களில் இயங்கும் ப்ராசசர்களைக் கணித்திட, இவையே அடிப்படையாகவும் இடம் பெற்றன.
இன்டெல் தன் ப்ராசசர்களை உருவாக்குகையில் தான் மேற்கொள்ளும் மாற்றத்திற்கு “Tick-Tock” என்று ஒரு வழியைக் கையாள்கிறது. முதல் சொல்லான 'tick' என்பது, அதன் முந்தைய மைக்ரோ ப்ராசசரில் இயங்கும், மைக்ரோ ஆர்க்கிடெக்சர் தொழில் நுட்பம் சுருங்குவதனைக் குறிக்கிறது. “Tock” என்பது புதிய கட்டமைப்பினைக் குறிக்கிறது.
சென்ற ஆண்டு, 2015 ஆகஸ்ட் மாதம் இன்டெல் தன் 'கோர்' வரிசையில், ஆறாவது நிலை ப்ராசசர்களை அறிமுகப்படுத்தியது. இதன் குறியீட்டுப் பெயர் Skylake. இது முந்தைய ஐந்தாம் நிலை ப்ராசசரான, Broadwell கட்டமைப்பினை அடுத்து உருவாக்கப்பட்டது. இதன் கணித்திறன் மற்றும் கிராபிக்ஸ் திறன் ஆகிய இரண்டும் மிக மேம்படுத்தப் பட்ட நிலையில் இருந்தன. அது மட்டுமின்றி, இவை பயன்படுத்தும் மின் சக்தியும் குறைவானதாக இருந்தது. இன்டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளில், மைக்ரோ ப்ராசசர் வடிவமைப்பில், 'ஸ்கைலேக்' ஒரு புதிய மைல்கல் ஆகும். இந்த ப்ராசசர் பல்வேறு கட்டமைப்புகளில், தேவைகளின் அடிப்படையில் கிடைக்கின்றன. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த இரு பயன் தரும் கம்ப்யூட்டர்கள் என அனைத்து வகைகளுக்கும் இவை உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. வேறு எந்த ப்ராசசருடனும் ஒத்துப் பார்க்க முடியாத வகையில், இவற்றின் திறனும் செயல்பாடுகளும் உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் முப்பரிமாண காட்சிகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான கம்ப்யூட்டர்களில் காணப்படுவதனைக் காட்டிலும் 30 மடங்கு திறன் செறிந்ததாக உள்ளது. இதனால், பேட்டரியின் வாழ்நாளும் கூடுதலாக உள்ளது.
இதில் உள்ள, Instant On என்னும் வசதி, கம்ப்யூட்டரை அரை நொடியில் இயக்கத்திற்குக் கொண்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டமான, விண்டோஸ் 10 உடன் இணைந்து, எளிதாகவும், விரைவாகவும் செயல்படுகிறது. இந்த வசதிகளினால், நாம் நம் நேரத்தினைப் பயனுள்ள வகையில் மிச்சப்படுத்திப் பணியாற்ற முடிகிறது.
இந்த சிறப்புகளுடனும் வெற்றியுடனும், இன்டெல் நிறுவனம் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் சிறிய அளவில், அதிக எண்ணிக்கையிலான ட்ரான்சிஸ்டர்களுடனும் ப்ராசசர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. பயனாளர்களின் செயல் வேகம் மற்றும் மன நிறைவினையே இன்டெல் தன் இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது தொழில் நுட்ப உலகம், இதுவரை இல்லாத வேகத்தில் இயங்குகிறது. இந்த ஓட்டத்தில், அடுத்த நிலை ப்ராசசர்களைத் தயாரித்து வழங்குவதில், இன்டெல் முன்னணியில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
எனவே, நீங்கள் புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்குவதாக இருந்தால், கூடுதல் வசதிகள் கொண்ட ஸ்கைலேப் ப்ராசசர் கொண்ட கம்ப்யூட்டரைப் பரிசீலனை செய்திடலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X