பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
00:00

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 இயக்கத் திணிப்பை எப்படியும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பது, அதன் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைக் கைவிடும் அறிவிப்பில் அடங்கியுள்ளது. நம் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தேவை, வைரஸ் எதிர்ப்பு பைல்கள் தருதல், பிரவுசர் பயன்பாடு ஆகியவற்றின் மூலம், தன் இலக்கை எப்படியும் மைக்ரோசாப்ட் நிறைவேற்றிக் கொள்ளும். ஹார்ட்வேர் புதியதாக வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பவர்களுக்குத்தான் இது சோதனையாக அமையும். தங்களின் “விண்டோஸ் 8 இனி வேண்டாம்” என்ற தங்களின் கட்டுரையில் தரப்பட்டுள்ள எச்சரிக்கை தகவல்கள் இதனையே அறிவிக்கின்றன.
எஸ்.ஜெயச்சந்திரன், கோவை.

ஆண்ட்ராய்ட் போன் பயன்பாடு பெருகி வரும் நிலையில், அதன் டிக்ஷனரி பைல்களில் நம் சொந்த பயன்பாட்டுச் சொற்களை இணைப்பது குறித்த தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளது. கட்டுரையாளருக்கு நன்றி.
என். ஜோசபைன், திருச்சி.

சொற்களை ஆண்ட்ராய்ட் போனில் இணைப்பது குறித்த தகவல்கள் மிக எளிமையாகவும் தேவையான படங்களுடன் சிறப்பாக தரப்பட்டுள்ளன. மிக அருமை. எழுதியவருக்கு பாராட்டுதல்கள்.
கா. சுந்தரேஸ்வரன், சிதம்பரம்.

''மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்கங்கள்” என நீங்கள் தந்துள்ள எச்சரிக்கைகள், பல காலமாகச் சொல்லி வருவதுதான் என்றாலும், அவ்வப்போது பெற்றோர்களின் அறிவுரைகள் போல எடுத்துச் சொல்லப்பட வேண்டியுள்ளது.
எல். ஸ்ரீதரன், மும்பை.

புதிய மொபைல் போன்கள் குறித்து தந்துள்ள தகவல்கள் ஆர்வமூட்டுவதாய் உள்ளன. இந்த மாடல்கள் நிச்சயம் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும். உலக அளவில், இரண்டாவது இடத்தில், மொபைல் போன் பயன்பாட்டில், இந்தியா இருப்பதால், இது சாத்தியமே. தகவல்களை முன்னதாகவே தந்தமைக்கு நன்றி.
எஸ். பரமசிவம், பழநி.

பி.எஸ்.என்.எல். ஹாட் ஸ்பாட் அமைக்கிறதா? வரவேற்கத்தக்க ஒரு விஷயம் தான். அதே நேரத்தில், ஏற்கனவே அமைத்து இயக்கும் தொலை தொடர்பு பணிகள், தொய்வில்லாமல் மக்களுக்கு கிடைப்பதனை உறுதி செய்திட வேண்டும்.
எஸ். பரந்தாமன், செய்யாறு.

மோனோ ஸ்பேஸ் மற்றும் ப்ரபோர்ஷனல் ஸ்பேஸ் ஆகியன குறித்து, கேள்வி ~ பதில் பகுதியில் விளக்கம் அளித்திருப்பது அருமை. டி.டி.பி. தொழிலில், கடந்த ஐந்து வருஷங்கள் இருந்தும், இது குறித்து அறியாமல் தான் இருந்துள்ளேன். தகவலுக்கு மிக்க நன்றி.
ஆர்.கே. சாகுல் அமீது, நாகப்பட்டினம்.

பேஸ்புக் தரும் பழைய நாள் பதிவுகளை, இன்றைய பதிவுகள் என எண்ணி, சிலர் இயந்திரத்தனமாக பதில் அளித்து வருகின்றனர். இவர்களுக்கு, இவற்றை நிறுத்த தாங்கள் தந்துள்ள வழி உதவிடும். எனக்கும் தான்.
எல். ஜெகதீசன், சென்னை.

ஸ்மார்ட் போன்கள் இனி நமக்கு மூன்றாவது முக்கிய கரமாகச் செயல்படும். எனவே, இதில் அதி வேக முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நீங்கள் தந்துள்ள கட்டுரையில், சேவைகளின் தன்மை மற்றும் அவற்றின் வளர்ச்சி குறித்து கூறியுள்ளீர்கள். நன்றி. தொழில் நுட்ப ரீதியாக என்ன முன்னேற்றம் ஏற்படும் என்று எழுதினால், அடுத்து வாங்க இருக்கும் ஸ்மார்ட் போன்களில் அவை சரியாக உள்ளனவா என்று பார்த்து வாங்குவதற்குப் பயனுள்ளதாக இருக்கும். தங்களிடமிருந்து அத்தகைய கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
பேரா. ஆ. சிற்றம்பலம், சென்னை.

“மறைக்கப்படும் பைல்கள்” என்ற தொழில் நுட்ப ரீதியான கட்டுரை இதுவரை நாங்கள் அறியாத தகவல்களைத் தந்துள்ளது. இந்த பைல்கள் குறித்து எச்சரிக்கை செய்திகள் கிடைக்கும்போது, இவை என்னவென்றே அறியாமல் இருந்தோம். உங்கள் விளக்கம் மிக அருமை. நன்றி.
ஆர். ஷ்யாமளா, புதுச்சேரி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rangrajan srinivasan - சென்னை,இந்தியா
01-பிப்-201613:40:58 IST Report Abuse
rangrajan srinivasan இந்த வாரம் 0 -01-2016. நிறைய விஷயங்களை வெளியிட்டு எங்களை திருப்தி செய்து விட்டீர்கள் இது போன்ற பயனுள்ள விஷயங்களை மேலும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X