எல்.ஜி.யின் வர்த்தகம் உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
00:00

சென்ற 2015 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாகத் தன் வர்த்தகத்தினை முடித்துள்ளது எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். இதன் இறுதி மூன்று மாதங்களில், ஒரு கோடியே 53 லட்சம் ஸ்மார்ட் போன்களையும், ஆண்டு முழுவதும், 5 கோடியே 97 லட்சம் ஸ்மார்ட் போன்களையும் விற்பனை செய்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும்.
நடப்பு ஆண்டில், 2016ல், ஸ்மார்ட் போன் விற்பனையில், நிறுவனங்களுக்கிடையே, உயர் ரக மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் விற்பனையில் பலத்த போட்டி இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதற்கான மாடல்களைத் தயார் செய்து, விற்பனையில் இறங்க இருப்பதாகவும் எல்.ஜி. அறிவித்துள்ளது. வழக்கம்போல, இந்த ஆண்டும் இரண்டு உயர்நிலை ஸ்மார்ட் போன்களை எல்.ஜி. அறிமுகம் செய்திடலாம்.
அண்மையில் நடந்த நுகர்வோர் மின்னணு சாதனக் கண்காட்சியில், எல்.ஜி. கே7 மற்றும் கே 10 ஸ்மார்ட்போன்கள் குறித்து அறிவிப்புகள் வந்தன. தற்போது, இந்நிறுவனத் தளத்தில், பட்ஜெட் விலையிலான கே4 ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 4.5 அங்குல அளவில் 480×854 பிக்ஸெல் அடர்த்தியுடன், ஐ.பி.எஸ்.டிஸ்பிளே கொண்ட திரை இருக்கும். மீடியா டெக் MT6735M ப்ராசசர் மற்றும் 1 ஜி.பி. ராம் மெமரியுடன் இது வடிவமைக்கப்படும். இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. ஆகத் தரப்படும். இதன் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதில் 1940 mAH திறன் கொண்ட பேட்டரி தரப்படும். இதில் 4ஜி அலைவரிசையில் இயங்கும் இரண்டு சிம்களை இயக்கலாம். 5 மெகா பிக்ஸெல் மற்றும் 2 மெகா பிக்ஸெல் திறனில் இயங்கும் இரண்டு கேமராக்கள் இணைக்கப்படும். ஆண்ட்ராய்ட் 5.1.1. லாலி பாப் சிஸ்டம் இயங்கும்.
தற்போது விற்பனையில் இருக்க்கும் கே 7, கே 10 ஸ்மார்ட் போன்களுடன், கே5 மற்றும் கே8 போன்களுடன், இந்த மாடல் போனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X