ரூ.4,999 விலையில் 4ஜி ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
00:00

இண்டெக்ஸ் நிறுவனம், சென்ற வாரத்தில், தன்னுடைய Cloud 4G Smart என்னும் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 4ஜி சேவை வேகமாகப் பரவி வரும் நிலையில், பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட் போன் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.4,999 மட்டுமே. இதில் 5 அங்குல அளவிலான FWVGA TFT டிஸ்பிளே (854 x 480 பிக்ஸெல்கள்) கொண்ட திரை உள்ளது. இதில், 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்பெக்ட்ரம் SC9830, 64 பிட் ப்ராசசர் தரப்பட்டுள்ளது.
எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, ஆட்டோ போகஸ் வசதியுடன் கூடிய 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. இதில் Omnivision OV5670 சென்சார் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப். முன்புறமாக, 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம்.
இதன் ராம் மெமரி 1 ஜி.பி. டி.டி.ஆர் ஆகும். இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். இந்த மாடல் போனின் பரிமாணம் 144.4×73.2×9.75 மிமீ. எடை 156 கிராம்.
நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது.
இந்த மாடல் போன் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளத்தில் மூலமாக இதனை வாங்கிக் கொள்ளலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.4,999.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X