கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2016
00:00

கேள்வி: வேர்ட் புரோகிராம் பயன்படுத்தும் போது, முன்பு நீங்கள் கொடுத்த குறிப்புகளின் படி, நானாகச் சில ஷார்ட் கட் கீகளைத் தற்காலிகமாக ஏற்படுத்தி பயன்படுத்தினேன். அவை தற்போது தேவையில்லை. நானாக ஏற்படுத்தியது எங்காவது தனியாக இருக்குமா? மொத்தமாக இவற்றை நீக்க முடியுமா?
ஆ. செல்வராஜ், சிதம்பரம்.
பதில்:
நல்ல கேள்வி. உங்களுக்கான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்துவதைப் பாராட்டுகிறேன். இவை தனியாக சேமித்து வைக்கப்பட மாட்டாது. கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றினால், அவை மொத்தமாக நீக்கப்படும். புரோகிராமுடன் வடிவைத்துத் தரப்பட்ட ஷார்ட் கட் கீகள் மட்டுமே இருக்கும். அதற்கான வழிமுறைகள்:
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டன் அழுத்தி, கீழே தரப்படும் Word Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010ல், ரிப்பனில் உள்ள File டேப் அழுத்தி, பின்னர், ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும்)
2. டயலாக் பாக்ஸின் இடது புறத்தில் உள்ள Customize என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து, Customize (வேர்ட் 2007ல்) அல்லது Customize Ribbon (வேர்ட் 2010) பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் கஸ்டமைஸ் கீ போர்ட் என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Reset All என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். (இந்த பட்டன், நீங்களாக ஏதேனும் ஷார்ட் கட் கீகளை ஏற்கனவே உருவாக்கி இருந்தால் தான் காட்டப்படும்). இந்த நேரத்தில், வேர்ட் “நீங்களாக அமைத்துள்ள அனைத்து ஷார்ட் கட் கீகள் அனைத்தையும் நீக்கவா?” என்று கேள்வி கேட்கும். அப்போது “Yes” என்பதில் கிளிக் செய்தால், வேர்ட் செயலி, நாமாக உருவாக்கிய ஷார்ட் கட் கீகள் அனைத்தையும் நீக்கி, மாறா நிலையில் தரப்பட்ட ஷார்ட் கட் கீகளை மட்டும் நிலையாக வைத்திருக்கும். தொடர்ந்து Close அழுத்தி வெளியே வரவும்.

கேள்வி: என் தோழி ஒருத்தியின் பெயரில், (மிகச் சிறிய மாற்றங்களுடன்) பொய்யான பேஸ்புக் அக்கவுண்ட் ஒன்று தொடங்கப்பட்டு, அதில் மிக மோசமான படங்கள் அவ்வப்போது வருகின்றன. இதனைப் பார்த்த சில நண்பர்கள், தோழியின் உண்மையான பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக் காட்டி வருகின்றனர். ”ரிபோர்ட் செய்திடுங்கள்” என்று கூறுகின்றனர். எப்படி ரிபோர்ட் செய்வது?
என். மலர்க்கொடி, சேலம்.
பதில்:
போலியான அக்கவுண்ட் என நீங்கள் கண்டு கொண்டுள்ள பக்கத்திற்குச் சென்று, அதன் profile பக்கத்தில், மூன்று புள்ளிகள் உள்ள ஐகானில் கிளிக் செய்திடவும். அப்போது ஒரு கீழ்விரி மெனு கிடைக்கும். இதில் Report என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் கட்டத்தில், Report this account என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பேஸ்புக் நிறுவனம் தங்களின் இந்த செய்தியை எடுத்துக் கொள்ளும். அந்த அக்கவுண்ட் குறித்து விசாரணை நடத்தும். நடவடிக்கை எடுக்க சிறிது காலம் ஆகும். அந்த பக்கத்தைத் தொடங்கியவருக்கு விசாரணை அஞ்சல் செல்லும். அவர் உஷாராகி, அந்தப் பக்கத்தினைப் பயன்படுத்துவதை நிறுத்தி விடுவார். அல்லது, விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததினால், பேஸ்புக் நிறுவனமே நிறுத்திவிடும். நீங்கள் காவல் துறையையும் நாடி, ஒரு புகார் அளிக்கலாம். சைபர் கிரைம் பிரிவினர், இந்தக் குற்றச்சாட்டு குறித்து, நீங்கள் புகார் செய்த, உங்கள் பகுதி காவல் நிலையத்திற்கு தகவலைத் தருவார்கள்.

கேள்வி: என் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு, பாஸ்வேர்ட் உடன் இன்னொரு வகையான பாதுகாப்பும் ஏற்படுத்தலாம் என்று என் நண்பர் கூறுகிறார். அதுவும் மொபைல் போன் வழி என்கிறார். அவருக்கும் எப்படி என்று தெரியவில்லை. இது நல்லதா? அறிவுரை கூறவும்.
ஆர். சரிதா, திருப்பதி.
பதில்
: நீங்கள் கேட்பது, ஜிமெயில் தளத்தில் அத்தளம் தரும் 2-factor authentication என்னும், இருவழிப் பாதுகாப்பு ஆகும். உங்கள் பாஸ்வேர்டுடன் இன்னொரு வகையான பாதுகாப்பும் ஏற்படுத்திக் கொள்வதுதான். சில நிறுவனங்களில் நாம் பொருள் வாங்குகையில், ரூ.10,000க்கு மேல் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்த, நம்முடைய இன்னொரு போட்டோ அடையாள அட்டை கேட்பது போலத்தான். கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் தான் உள்ளதே என்று அவர்களிடம் கேள்வி கேட்க முடியாது. அந்த அட்டையை யாரேனும் திருடிப் பயன்படுத்துவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு. அது போலத்தான் இதுவும்.
நீங்கள் இருவழிப் பாதுகாப்பு கேட்டு, ஜிமெயில் தளத்தில் அதற்கான பிரிவில் செல்கையில், அது உங்களிடம் கூடுதலான தகவல் ஒன்றைக் கேட்கும். முதலில் https://accounts.google.com/SmsAuthConfig என்ற தளப் பக்கம் செல்லவும். அடுத்து Start Setup என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, கூகுள் உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து வழக்கம் போல லாக் இன் செய்திடக் கேட்டுக் கொள்ளும். அடுத்து எந்த போன் வழியாக நீங்கள், உங்களுக்கான அதிகாரப் பூர்வ குறியீட்டினைப் பெற விரும்புகிறீர்கள் என்று கேட்கப்படும். உங்கள் போனைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து, டெக்ஸ்ட் மெசேஜ் ஆக வேண்டுமா அல்லது வாய்ஸ் மெயிலாக வேண்டுமா என்று கேட்கும். இதன் பின்னர், இந்த அதிகார பூர்வ குறியீட்டினைக் கொடுத்து லாக் இன் செய்திட வேண்டும். கூடுதல் பாதுகாப்பு வேண்டுமாயின், லாக் அவுட் செய்து, பின்னர் ஒவ்வொரு முறை லாக் இன் செய்திடுகையில், உங்கள் போனில் கிடைக்கும் குறியீட்டினயும், பாஸ்வேர்ட் தந்த பிறகு தர வேண்டும்.
இதில் என்ன பிரச்னை என்றால், உங்கள் மொபைல் போன் ஏதேனும் ஒரு பிரச்னையினால், இயங்காமல் போனால், அல்லது அதனைப் பெற இயலாத ஓர் இடத்திற்கு நீங்கள் சென்று விட்டால், ஜிமெயில் தளத்தினை அணுக முடியாது. முன்னதாகவே, அல்லது ஏதாவது ஒரு வகையில், இந்த கூடுதல் பாதுகாப்பினை எடுத்துவிட வேண்டும்.

கேள்வி: விஸ்டாவிற்கான சப்போர்ட் இன்னும் ஒரு வருடத்தில் முடிந்துவிடும் என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால், விண்டோஸ் 7க்கு எப்போது சாவு மணி அடிக்கப்படும். எனக்கு விண்டோஸ் 10க்குச் செல்ல பயமாயுள்ளது. இதற்கான பதிலையும் தீர்வினையும் தரவும்.
எ.நாராயணன், விருதுநகர்.
பதில்:
'விண்டோஸ் 8 அவ்வளவுதான்' என்ற தகவலுடன் கட்டுரை வெளியான பின்னர் பல வாசகர்களிடமிருந்து இது போன்ற கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன. விஸ்டா 2007ல் வெளியானது. ஏப்ரல் 11, 2017 வரை இதற்கு சப்போர்ட் பைல்கள் தரப்படும். விண்டோஸ் 7, 2010 ஆம் ஆண்டில் வெளியானது. இதற்கான சப்போர்ட் ஜனவரி 14, 2020 வரை தரப்படும். ஆனால், அதற்கான சர்வீஸ் பேக் 1ஐ நீங்கள் பதிந்து இயக்க வேண்டும். விண்டோஸ் 8க்கான பைல்கள் இனி கிடைக்காது என்றாலும், விண்டோஸ் 8.1க்கு மேம்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சப்போர்ட் பைல்கள் ஜனவரி 10, 2023 வரை கிடைக்கும். ஆனால், இலவசமாகக் கிடைக்கும் விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக் கொண்டால், அக்டோபர் 2025 வரை நிம்மதியாக இருக்கலாம். விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்வதில் தயக்கம் காட்ட வேண்டாம். உங்களை எளிதாக வழி நடத்தி, அதனை உங்கள் கம்ப்யூட்டரில், மைக்ரோசாப்ட் பதிந்து கொடுக்கும். எனவே மாறிக் கொள்ளவும்.

கேள்வி: முன்பு ஒருமுறை பிரவுசர்களில் உள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை எப்படி நீக்குவது என கட்டுரை வெளியிட்டிருந்தீர்கள். நான் ஆப்பிள் சபாரி பிரவுசர் பயன்படுத்துகிறேன். இதில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்குவது குறித்தும் டிப்ஸ் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். ஆப்ரஹாம், புதுச்சேரி.
பதில்:
சபாரி பிரவுசரை மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வருகிறீர்கள், இல்லையா? இதில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்குவது குறித்த குறிப்பினை இங்கு தருகிறேன். உங்களுடைய மேக் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப்பில் மேலாக உள்ள “Safari” மெனுவில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில், “Preferences” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். “Safari Extensions” என்பதில் கிளிக் செய்திட வேண்டாம். இது உங்களை ஆப்பிள் நிறுவனத்தின், சபாரி எக்ஸ்டன்ஷன்ஸ் காலரி இணைய தளத்திற்கு இட்டுச் செல்லும். அங்கிருந்து நீங்கள் உங்களுக்கு வேண்டிய எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். “Preferences” விண்டோவில் “Extensions” என்ற ஐகானில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள அனைத்து எக்ஸ்டன்ஷன்களையும் பார்க்கலாம். இதில் நீங்கள் நீக்க விரும்பும் எக்ஸ்டன்ஷன் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, அருகே உள்ள “uninstall” என்னும் பட்டனில் கிளிக் செய்தால், அது கம்ப்யூட்டரிலிருந்து நீக்கப்படும். அல்லது “Enable [Extension Name]” என்பதற்கு அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

கேள்வி: ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பது ஒரு தொழில் நுட்பமா? இதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும், பயன்கள் குறித்தும் படித்திருக்கிறேன். ஆனால், தெளிவாக அறியமுடியவில்லை. குறிப்புகளுடன் பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். மாடசாமி, போடி.
பதில்:
கம்ப்யூட்டருக்கு அறிமுகமாகும் அனைவரும், அதனைப் பாடமாகப் படிப்போரும் அறிய வேண்டிய ஒன்று. “ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்கள்” என்பவை, விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் சிறிய புரோகிராம்களாகும். இவை சில புரோகிராம்களைக் கட்டுப்படுத்தும் புரோகிராம்கள் என அறியலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் பிரவுசர்கள் ஆகியவை, அப்ளிகேஷன்களை அவற்றின் எல்லைக்குள்ளேயே இயங்கிட, இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் உதவுகின்றன. இவற்றை இயக்குவதன் மூலம் சிலவற்றின் இயக்கத்தில், சின்ன அளவில், மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்கள், ஆக்டிவ் எக்ஸ் புரோகிராம்களை அணுகி இயக்க, இதற்கென ஆட் ஆன் தொகுப்பினைக் கொண்டுள்ளது.
இவை இயங்குவதில் என்ன பிரச்னை என்றால், இவை இயங்கும்போது, அவற்றின் வழியாக மால்வேர் புரோகிராம்கள், கம்ப்யூட்டருக்குள் நுழைவது எளிதாகிறது. இந்த வழிகளை “drive-bys” என அழைக்கின்றனர். மேலும், நம் கம்ப்யூட்டர்களை, நெட்வொர்க்கில் நுழைந்து, தங்கள் இடத்தில் இருந்தவாறே கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கும் இது வழி அமைத்துக் கொடுக்கிறது. இவ்வாறு மோசமான விளைவுகளுக்கு இடம் தருபவற்றை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும் என நாம் எண்ணலாம். அதற்கான வழியும் நமக்குத் தரப்
பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று, அங்கு Internet Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இடையே Network and Internet என்ற விண்டோவினைப் பெறவும். இங்கு Internet Options என்ற பிரிவில், Manage Browser Add-ons” என்ற ஆப்ஷனைப் பார்க்கலாம். இந்த விண்டோவிற்குச் சென்றவுடன், “Security” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு நம் பாதுகாப்பு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திட, ஒரு ஸ்லைடர் பார் ஒன்று தரப்பட்டிருக்கும். இதில் High என்பதில் செட் செய்தால், ஆக்டிவ் எக்ஸ் கண்ட்
ரோல் புரோகிராம்கள் அனைத்தும் தடுக்கப்படும். இதில் என்ன பிரச்னை ஏற்படும் என்றால், சில இணைய தளங்கள், இவற்றைத் தடை செய்துவிட்டால், சரியாக இயங்காது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rangrajan srinivasan - சென்னை,இந்தியா
10-பிப்-201612:59:06 IST Report Abuse
rangrajan srinivasan விண்டோஸ் 10 க்கு மாறிக்கொள்ள சொல்கிறீர்களே... டிவிடி ரைட்டர் இல்லாத விண்டோச்சுக்கு கட்டாயம் மாறி ஆக வேண்டுமா. எல்லாவற்றையும் விண்டோஸ் கார்ட்டில் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறதே. இப்படிப்பட்ட விண்டோஸ் 10 தேவையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X