லெனோவா கே4 நோட் ரூ.11,999
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2016
00:00

லெனோவா நிறுவனம், தான் ஏற்கனவே அறிவித்தபடி, Vibe K4 Note ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.11,999. இதன் திரை 5.5.அங்குல அளவில், 1920 x 1080 பிக்ஸெல் திறனுடன் உள்ளது. 178 கோணத்தில் இதன் காட்சி தோற்றம் அமைந்துள்ளது. கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. இதன் கே3 நோட் போனில் உள்ளபடி இந்த திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கே 4 மாடல், ஆக்டா கோர் 64 MediaTek MT6753 பிட் ப்ராசசரைக் கொண்டு 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப். இதன் பின்புறக் கேமரா 13 மெகா பிக்ஸெல் திறனுடனும், ISOCELL சென்சார் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது. டூயல் டோன் ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறக் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டதாக உள்ளது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 4ஜி திறனுடன், இந்தியாவில் இயங்கும் எல்.டி.இ. அலைவரிசைகளையும் இயக்கும் திறன் கொண்டுள்ளது.
பின்புறமாக, இதில் விரல் ரேகை சென்சார் இயங்குகிறது. இரண்டு ஸ்பீக்கர்கள் முன்புறமாக அமைக்கப்பட்டுள்ளது. தெளிவாக ஆடியோ பதிவு செய்திட, மூன்று மைக்குகள் உள்ளன. இதன் ராம் மெமரி 3 ஜி.பி DDR3 வகையைச் சேர்ந்தது. முந்தைய மாடல்களில் இது 2 ஜி.பி. ஆக மட்டுமே இருந்தன. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்தலாம். இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். எப்.எம்.ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி,3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ்., என்.எப்.சி., மற்றும் ஓ.டி.ஜி. யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் உள்ளாகவே அமைக்கப்பட்டுள்ள பேட்டரி 3,300 mAh திறன் கொண்டது.கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் அமேஸான் தளம் மூலம் கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X