ஆண்ட்ராய்ட் போனுக்கான கூடுதல் குறிப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2016
00:00

சில வாரங்களுக்கு முன், ஆண்ட்ராய்ட் போனில் நாம் அமைத்து இயக்கக் கூடிய சில செயல்பாடுகள் குறித்து குறிப்புகள் தரப்பட்டன. இங்கு இன்னும் சில கூடுதல் குறிப்புகளைக் காணலாம்.

ஷார்ட் கட் பதியாமல் தடுக்க: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஒவ்வொரு முறை ஓர் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து பதியும் போது, அந்த செயலிக்கான ஷார்ட் கட் ஐகான், திரையில் பதியப்படும். அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, இவை நமக்கு வேண்டாதவையாகத் தென்படும். இந்த ஷார்ட் கட் இல்லாமல், அப்ளிகேஷன் ஒன்றை அமைக்க முடியாதா என்ற ஆவல் ஏற்படும். அதற்கான வழி உள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் திறக்கவும். மேலாக இடது புறத்தில், மூன்று சிறிய கோடுகள் உள்ள ஐகானில் தட்டவும். பின்னர் Settings திறக்கவும். இதில் 'Add icon to Home Screen' என ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது, தானாக ஷார்ட் கட் அமைவதனைத் தடுத்துவிடும்.

அழைப்பினை மறுக்கும் செய்திகளைத் திருத்த: நமக்கு வரும் அழைப்புகளை, நம்மால் இணைத்துப் பேச இயலாத சூழ்நிலையில் (வேறு ஒரு வேலை, வாகனம் ஓட்டுதல், இன்னொரு போனில் பேசுதல் போன்றவை), ஒரு செய்தியுடன் அதனை மறுக்கலாம். ஸ்மார்ட் போனில், ஏற்கனவே, நாம் சந்திக்கும் சூழ்நிலைகளுக்கேற்ப செய்திகள் வடிவமைக்கப்பட்டு நமக்குத் தரப்பட்டுள்ளன. இவற்றில் சிறிய அளவில் நீங்கள் மாற்றம் செய்திட ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வழி தருகிறது. Settings > Phone எனச் செல்லவும். அல்லது டயலர் திறந்து, போன் செட்டிங்ஸ் அணுகவும். இங்கு கிடைக்கும் மெனுவில் Reject with SMS என்று ஓரு ஆப்ஷன் காட்டப்படும். இந்த அமைப்பில் சென்று, ஏற்கனவே இருப்பதனை நீக்கலாம் மற்றும் எடிட் செய்து மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

போன் ஒலிப்பதை நீக்கியபின் போனைக் கண்டறிய: போன் ஒலிப்பதை ஏதேனும் ஒரு காரணத்திற்காக, முடக்கியிருப்போம். அதிர்வின் மூலம் அழைப்பினைக் கண்டறிந்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருப்போம். இந்த நிலையில், போனை பத்திரமாக ஓர் இடத்தில் வைத்துவிட்டு, வைத்த இடம் எதுவெனத் தெரியாமல் தேடுவோம். மற்ற நேரங்களில், வேறு ஒரு போன் மூலம், தேடும் போனில் உள்ள எண்ணுக்கு அழைப்பு கொடுத்து போன் இருக்கும் இடத்தினை அறியலாம்.
ஆனால், அதன் ஒலியை முடக்கிய பின்னர் என்ன செய்வது? இதற்கு கூகுள் ஒரு வழி தருகிறது. www.google.com/android/devicemanager என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று, கூகுள் ஐ.டி. மூலம் நுழையவும். உங்கள் போன் குறித்த தகவல்களை ஏதேனும் ஒரு கூகுள் அப்ளிகேஷனில் கொடுத்திருந்தால், போன் தேடப்பட்டு அது எங்கு உள்ளது எனக் காட்டும்.
அதற்கு ரிங் கொடுக்கும்படி கட்டளை அமைத்தால், தொடர்ந்து அதன் மணி நல்ல சத்தத்துடன் ஒலிக்கும். அதனைக் கொண்டு அது இருக்கும் இடத்தினை அறிந்து கொள்ளலாம்.

எழுத்துக்களைத் தெளிவாகக் காண: பார்வைத் தெளிவு திறன் குறைந்தவர்களுக்கு, ஸ்மார்ட் போனில் தெரியும் டெக்ஸ்ட்டினைப் பார்ப்பது சற்று சிரமமாக இருக்கலாம். மிகவும் லேசான வண்ணத்தில் எழுத்துகள் இருந்தால், அவை திரை ஒளியோடு ஒன்றிப்போய் தெளிவாக இருக்காது.
இந்த குறையை செட்டிங்ஸ் அமைப்பின் மூலம் சரி செய்திடலாம். Settings > Accessibility என்று சென்று, high contrast text என்பதனை இயக்கி வைக்க வேண்டும். இதன் மூலம் டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X