நூறு கோடியைத் தொட்ட வாட்ஸ் அப் மற்றும் ஜிமெயில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 பிப்
2016
00:00

பன்னாட்டளவில், ஒரு சில சேவை நிறுவனங்களே, தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக, நூறு கோடிப் பேரைக் கொண்டுள்ளன. அவற்றில், வாட்ஸ் அப் மற்றும் ஜிமெயில் தற்போது சேர்ந்துள்ளன.
மொபைல் மெசஞ்சர் சேவையில், பன்னாட்டளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ் அப் (WhatsApp) மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் ஆகிய இரண்டின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, நூறு கோடியைத் தாண்டியுள்ளது. இந்த இரண்டு சேவைகளின் புதிய சாதனை மைல்கற்கள் இவை. நூறு கோடி வாடிக்கையாளர் எண்ணிக்கை என்பது, இந்த இரண்டு சேவைகளையும் தொடர்ந்து பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களைக் குறிப்பதாகும்.
வாட்ஸ் அப், பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமாக மாற்றப்பட்டது. பேஸ்புக் சேவைத் தளத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 144 கோடியாகத் தற்போது உள்ளது. ஜிமெயில் சேவையைப் பொறுத்தவரை, கூகுள் நிறுவனத்தின் தனிப்பெரும் சேவை ஆகும். கூகுள் நிறுவனத்தின் கூகுள் சர்ச், யு ட்யூப், கூகுள் மேப்ஸ், ஆண்ட்ராய்ட் மற்றும் கூகுள் ப்ளே (Google search, YouTube, Google Maps, Android and Google Play) ஆகியவை ஏற்கனவே 100 கோடி வாடிக்கையாளர்கள் என்ற இலக்கினை ஏற்கனவே கடந்துவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் குறித்த வாடிக்கையாளர் எண்ணிக்கையை, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தன் பேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், “வாட்ஸ் அப், பேஸ்புக்குடன் இணைந்த பின்னர், அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், உங்கள் அன்பிற்குரியவர்களை அழைத்துப் பேசும் வசதியை நாங்கள் அளித்தோம். இதற்கான கட்டணத்தையும் இல்லாமல் செய்து, மொத்த வாட்ஸ் அப் சேவையையும் இலவசமாக்கி உள்ளோம்” எனப் பெருமை பட்டுள்ளார். தற்போது அவர் நிறுவனம், வர்த்தக நிறுவனங்களுக்கிடையே தொடர்பினை எளிதாக அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.
வாட்ஸ் அப் செயலி குறித்த வேறு சில தகவல்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வாட்ஸ் அப் மூலம், ஒரு நாளில், 4,200 கோடி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. 160 கோடி போட்டோக்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இதில் 100 கோடி குழுக்கள் இயங்குகின்றன. 53 மொழிகளை இந்த செயலி சப்போர்ட் செய்கிறது. 25 கோடி விடியோ பைல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்த செயலியை 57 பொறியியல் வல்லுநர்கள் இயக்குகின்றனர். இன்னும் பலரை வாட்ஸ் அப் பணிக்கு எடுக்க உள்ளது.
வாட்ஸ் அப், 2009ல் யாஹூ வல்லுநர்களான ப்ரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கெளம் ஆகியோரால் நிறுவப் பட்டது. பின்னர், 2014 பிப்ரவரியில், இதுவரை வேறு எவரும் செலவழிக்காத வகையில், 1900 கோடி டாலர் கொடுத்து மார்க் இதனை வாங்கி இயக்கத் தொடங்கினார்.
இந்தியாவைப் பொறுத்த வரை, வாட்ஸ் அப் செயலி, LINE, Viber மற்றும் Hike ஆகியவற்றுடன் கடும் போட்டியில் உள்ளது. இந்தியாவில் உடனடி செய்திகளை அனுப்பும் வாடிக்கையாளர்களில், 56% பேர் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்ததாக, பேஸ்புக் நிறுவனம் 51% பேரைக் கொண்டுள்ளது. சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும், தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகின்றன.
ஜிமெயில் நூறு கோடி வாடிக்கையாளர் என்ற எண்ணிக்கையைக் கடந்த தகவலை, அதன் தலைமை அதிகாரி, சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். சென்ற மே மாத அறிவிப்பிற்குப் பின்னர், ஜிமெயில் சேவையைப் புதியதாக 10 கோடி பேர் பெற்றுள்ளனர். 2004 ஆம் ஆண்டு, சோதனை முறையில், ஜிமெயில் அறிமுகமானது. 2014ல், கூகுள் ஜிமெயில் இன்பாக்ஸ் (Inbox) என்ற வசதியை வழங்கியது. இதில் அடங்கியதாக Smart Reply என்ற டூலும் தரப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, பயனாளர்கள், எளிதாகவும் விரைவாகவும் தங்கள் பதில்களைத் தயார் செய்திடலாம். தானாகவே பதில் அனுப்பும் வசதியும் இதில் உண்டு.
ஜிமெயில், அவுட்லுக் மற்றும் யாஹு மெயில் தளங்களுடன் போட்டியிடுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X