பேஸ்புக் கொண்டாடிய 'நண்பர்கள் தினம்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 பிப்
2016
00:00

பேஸ்புக் நிறுவனம் தன் 12 ஆவது ஆண்டுவிழாவினை, வழக்கம் போல வித்தியாசமாக, தன் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடியது. முதலில், மார்க், பேஸ்புக் 12 ஆம் ஆண்டுவிழா நாளை, பிப்ரவரி 4, 'நண்பர்கள் தினமாகக்' கொண்டாடும் படி அழைப்பு விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தன் 150 கோடி வாடிக்கையாளர்களுக்கும், அவர்களின் தளங்களிலிருந்து படங்களை எடுத்து, சிறிய விடியோவில், உங்களின் நண்பர்களையும் நிகழ்வுகளையும் பாருங்கள் என்று அனைவருக்கும் அவரவர் பக்கங்களுக்கு, பிப்ரவரி 4 அன்று அனுப்பியது. (கிடைக்காத ஒரு சிலர், பேஸ்புக் தளம் சென்று முயற்சித்த போது, 'இந்த விடியோ தயாரிக்கும் அளவிற்கு, உங்களிடம் படங்களோ, பதிவுகளோ இல்லை' எனத் தகவல் தந்தது.)
உங்கள் நண்பருக்கான பக்கத்தில் இந்த விடியோ படம் பதியப்பட்டு, உங்களுக்கு அந்த தகவல் வந்தது என்றால், அதன் கீழாக, “Watch Yours” என்பதில் கிளிக் செய்தால், உங்களுக்கான படம் காட்டப்படும். News Feed பிரிவின் மேலாக, இந்த விடியோவினை அனைவரும் பெற்று பார்க்கலாம். இதனை எடிட் செய்திடலாம்; பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த நண்பர்கள் தின விடியோவுடன் இன்னொரு சேவையையும் பேஸ்புக் வழங்குகிறது. இரண்டு ஸ்டிக்கர் தொகுப்பினை, “Best Friends” மற்றும் “Friendship” என்ற பெயரில் வடிவமைத்துத் தருகிறது. பேஸ்புக் மெசஞ்சர் வழியாக, Sticker Store சென்று, அங்கே இவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உலக அளவில், மிக அதிகமான எண்ணிக்கையில், தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைக் கொண்டது பேஸ்புக் சமூக இணைய தளம். ஏறத்தாழ, 155 கோடி பேர் இதில் பதிவுகளைப் பதிந்து, பகிர்ந்து வருகின்றனர். சென்ற வாரம், வாட்ஸ் அப் தளத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 100 கோடியைத் தாண்டியதும் இங்கு நினைவு கூறத்தக்கது. (இதற்கான தனிக் கட்டுரையினைப் பார்க்கவும்) அதன் உரிமையாளரும் பேஸ்புக் தான்.
சீனாவின் மக்கள் தொகையினைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம் குறித்து மேலும் சில ஆர்வமூட்டும் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பேஸ்புக் தளத்தை, இன்றைய அளவில், 160 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற 2015 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 104 கோடியாக இருந்தது. 2015 மூன்றாவது காலாண்டில், நூறு கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டது பேஸ்புக். சென்ற ஆண்டின் மத்தியில், இந்திய பேஸ்புக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 12.5 கோடியாக இருந்தது. நடப்பு 2-016ல் இது 16.1 கோடியாக உயரும்.
2030 ஆம் ஆண்டில், பேஸ்புக் தளத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை 500 கோடியாக உயர்த்த, இதன் நிறுவனர் மார்க் இலக்கு நிர்ணயித்துள்ளார். (தற்போதைய உலக ஜனத்தொகை 700 கோடி. பேஸ்புக் தளப் பயனாளர் எண்ணிக்கை 159 கோடி.)
ஆனால், பேஸ்புக் நிறுவனத்தின் வருமானத்தில் பெரும் பங்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டில் இருந்தே கிடைக்கிறது. மொத்த வருமானத்தில், இந்த நாடுகள் 75% அளிக்கின்றன. மொத்த வருமானத்தில் பெரும்பங்கு, விளம்பரங்கள் வழியாகவே கிடைக்கின்றன.
2010 ஆம் ஆண்டில், "The Social Network," என்ற ஒரு திரைப்படம் பேஸ்புக் நிறுவனத்தின் தொடக்கம் முதல் இன்றைய நிலை வரை எடுத்துரைத்தது. சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான “தங்க உலக” விருதினைப் பெற்றது. மூன்று ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது.
ஜூன் 2009ல், அதுவரை சிறந்த சமூக இணைய தளம் என்று பெயர் பெற்றிருந்த MySpace தளத்தின் முதல் இடத்தை, பேஸ்புக் பெற்று, இன்று வரை அதைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
பேஸ்புக் இணைய தளத்திற்கான முதல் பெரும் முதலீட்டாக, 5,00,000 டாலரை ”பே பால்” நிறுவனத்தின் துணை நிறுவனர் பீட்டர் என்பவரிடம் பெற்றது.
2007 ஆம் ஆண்டில், பேஸ்புக் தன் பங்குகளில் 1.6 சதவீதப் பங்குகளை, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 24 கோடி டாலருக்கு அளித்தது. அதே நேரத்தில், கூகுள் முன் வந்து அளிப்பதாக கொடுத்த வாய்ப்பினை மறுத்தது. கூகுள் பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு கூட்டாளியாகவும் செயல்பட முன் வந்தபோது, பேஸ்புக் அதனை மறுத்து ஒதுக்கியது. பேஸ்புக் நிதி அளித்து வாங்கிய பெரும் நிறுவனம் வாட்ஸ் அப் ஆகும். அளித்த நிதி 1900 கோடி டாலர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X