பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 பிப்
2016
00:00

விண்டோஸ் சிஸ்டம் தரும் செயலிகள் பல குறித்து இதுவரை அறியாமல் இருந்துள்ளோம் என்பது உங்கள் கட்டுரையைப் (விண்டோஸ் தரும் அறியாத செயலிகள்) படித்த பின்னரே தெரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக, கால்குலேட்டர் பயன்பாடு அற்புதம். நீங்கள் குறிப்பிட்டது போல, செல் போன் அல்லது கால்குலேட்டர் பயன்படுத்தித்தான், பல நேரங்களில், கணக்கிட்டு டாகுமெண்ட்களைத் தயாரித்து வந்தேன். அனைத்து குறிப்புகளும் அருமை.
என். ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி.

விண்டோஸ் சிஸ்டத்தில் மற்றவர் நம் கம்ப்யூட்டரில் நுழைந்து, நம் கம்ப்யூட்டரில் உள்ள பழுதினை நீக்கலாம் என்பது வியப்புக்குரிய தகவல். இனி எனக்குக் கவலை இல்லை. ஏதேனும் சிக்கல் இருந்தால், வெளிநாட்டில் வாழும் என் மகளிடம் கம்ப்யூட்டரை விர்ச்சுவல் ஆக ஒப்படைத்து பழுது நீக்கிக் கொள்வேன். தகவலுக்கு நன்றி.
ஆர். இயேசுதாஸ், கும்பகோணம்.

விண்டோஸ் 10ன் செயல்பாடுகள் குறித்த அரையாண்டு அறிக்கை என்றவுடன் வர்த்தக லாபம் குறித்து என எண்ணினேன். சிஸ்டம் தரும் முக்கியமான வசதிகளின் பட்டியல், எனக்கு இந்த சிஸ்டத்தின் மீது இருந்த பயத்தை நீக்கி, ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.கே. உலகநாதன், திருச்சி.

ஆண்ட்ராய்ட் போனில், அழைப்பினை மறுக்கும் செய்திகளை நாமே அமைக்கலாம் என்பது மிகவும் பயனுள்ள டிப்ஸ். பலவற்றை மாற்றிவிட்டேன். இன்னும் இது போல பல டிப்ஸை நான் எதிர்பார்க்கிறேன்.
கா. சுப்ரமணியம், விருதுநகர்.

ஜிமெயில் குறித்த பாதுகாப்பு வழியினை விளக்கமாக அளித்தது, எங்களின் பயத்தை போக்கியது. இருப்பினும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தையும் இது உணர்த்தியது. நன்றி.
தே. அய்யம்பெருமாள், விருதுநகர்.

பேஸ்புக் தளத்தில் ரிப்போர்ட் செய்வதற்கான குறிப்பைக் காட்டிலும், அதனைப் படம் கொண்டு விளக்கியது அருமை.
டி.எஸ். மாணிக்க ராஜன், தஞ்சாவூர்.

தொடர்ந்து குரோம் பிரவுசரைப் பயன்படுத்தி வந்தாலும், நீங்கள் தந்துள்ள குறிப்புகளில் பெரும்பாலானவை, புதியனவாகவே எனக்குத் தோன்றுகின்றன. இதிலிருந்து பயனாளர்கள், பெரும்பாலான வசதிகளைப் பயன்படுத்துவது இல்லை என்று தோன்றுகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ! கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.
சே. பாக்யராஜ், விழுப்புரம்.

டார்க் பாட் வைரஸ் நம் கம்ப்யூட்டரில் வந்துவிட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதற்கான குறிப்புகளையும் தரவும்.
ஆர். ஜோஸப்பின் நிர்மலா தேவி, திருச்சி.

இரட்டை அடுக்கு பாதுகாப்பினை ஜிமெயிலில் அமைப்பது பல வேளைகளில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. என் மொபைல் போன் ரிப்பேர் ஆகி, புதிய போன் வாங்கும் வரை எந்த மெயிலையும் படிக்க இயலவில்லை. இதனையும் தாங்கள் குறிப்பிட்டது பலரைக் காப்பாற்றும்.
எஸ். உதயகுமார், நாகர்கோவில்.

குரோம் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில் பலவற்றை, உங்கள் அறிவுரைப்படி நீக்கிய பின்னர், கம்ப்யூட்டர் இயக்கத்தின் வேகம் அதிகரிப்பதைக் கண்டேன். மிக்க நன்றி. இனி, இந்த செயல்பாட்டினை அடிக்கடி மேற்கொள்வேன்.
எம். சுப்ரமணியம், கோவை.

நாம் அறியாத விண்டோஸ் செயலிகள் இன்னும் பல உள்ளன என்று கட்டுரையை முடித்திருக்கிறீர்கள். அவை குறித்தும் நீங்களே தொடர் கட்டுரை ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். அருமை நாயகம், தேனி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X