புதிய கூடுதல் வசதிகளுடன் எச்.டி.சி. டிசையர் 626
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 பிப்
2016
00:00

எச்.டி.சி. நிறுவனம், சென்ற ஆண்டு தன் டிசையர் வரிசையில், டிசையர் 626 மாடல் போனை, அறிமுகம் செய்தது. தற்போது அதன் இரண்டு சிம் மாடலை, மத்திய நிலை அளவில் வடிவமைத்து விலையிட்டு வழங்கியுள்ளது. இதில் மாற்றம் பெற்றுள்ளவை, அதன் ப்ராசசர் (Snapdragon 410 SoC க்குப் பதிலாக, Octa-Core MediaTek MT6752 ப்ராசசர், 1 ஜி.பி. ராம் மெமரியின் இடத்தில் 2 ஜி.பி. ராம்) மற்றும் ராம் நினைவகம் ஆகும். இதில் இரண்டு சிம் பயன்பாடும் கூடுதல் அப்டேட் ஆகும். இதன் மற்ற சிறப்பம்சங்கள்: எச்.டி. ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட 5 அங்குல அளவிலான திரை. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், எச்.டி.சி. சென்ஸ் 6, பயனர் இடைமுகம் இயங்குகிறது. பின்புறக் கேமரா 13 எம்.பி. திறனுடன், எல்.இ.டி. ப்ளாஷ் இணைத்துத் தரப்பட்டுள்ளது. செல்பி கேமரா 5 எம்,பி. திறனுடன், பி.எச்.ஐ. சென்சாருடன் இயங்குகிறது. 1080p திறன் விடியோ பதிவு கிடைக்கிறது. இந்த போனின் பரிமாணம் 146.9 x 70.9 x 8.19 மிமீ. எடை 135 கிராம்.
இதில் முன்புறமாக இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2000 mAh திறனுடன் உள்ளது. ஊதா மற்றும் வெள்ளை வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த மாடல் போனின் அதிக பட்ச விலை ரூ.14,990 ஆகும். தற்போது அனைத்து மொபைல் போன் விற்பனை மையங்களிலும் கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X