பாதுகாப்பற்ற இணைப்பா? கூகுள் எச்சரிக்கை தரும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
00:00

கூகுள் பிப்ரவரி தொடக்கத்தில், “பாதுகாப்பான இணைய நாள்” என்று கொண்டாடியது. புதிய பாதுகாப்பு வழிகள் சிலவற்றை அறிமுகப்படுத்தியது. TLS encryption என்ற தொழில் நுட்பத்தினைப் பின்பற்றாத அஞ்சல்களை, ஆபத்தானவை என்று கூகுள் கருதுகிறது. அப்படிப்பட்ட அஞ்சல்கள் கிடைக்கப் பெற்றால், அவை குறித்து எச்சரிக்கை விடுக்கிறது. பொதுவாக, பாதுகாப்பானவை என்று அறியப்படும் இணைய தளங்களிலும், பக்கங்களிலும், அவற்றின் முகவரிகள் அருகே, பூட்டு போடப்படும் ”பேட்லாக்” எனப்படும் தாழ்ப்பாள் அடையாளம் காட்டப்படும். ஆபத்தானவை என்று அறியப்பட்ட அஞ்சல்கள் உள்ள தளங்களில், இந்த தாழ்ப்பாள் உடைந்த நிலையில் காட்டப்படுகிறது.
சென்ற ஆண்டு இறுதியிலேயே, இது குறித்து கூகுள் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது. குறிப்பிட்ட வகை என்கிரிப்ஷன் வழி முறையைப் பின்பற்றாத அஞ்சல்களைப் பாதுகாப்பற்றவை என்றும், அது குறித்து பயனாளர்களை எச்சரிக்கும் வழிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பினை தற்போது நடைமுறைப் படுத்தியுள்ளது.
கூகுள் ஏற்கனவே HTTPS என்பதனைக் காட்டி, சுருக்கி அனுப்பி, பின்னர் விரிக்கும் தொழில் நுட்பத்தினைப் பின்பற்றி வந்தது. இது பிரவுசருக்கும், சர்வருக்குமான இணைப்பினைப் பாதுகாத்தது. அதன் பின்னர், பயனாளர்கள் பயன்படுத்தும் முறைகளில் பாதுகாப்பு இல்லாதபோது, கூகுள் எந்த எச்சரிக்கையையும் இதுவரை தராமல் இருந்தது. தற்போது, எச்சரிக்கும் வகையில் சுட்டிக் காட்டப்படுகிறது.
இந்த சுருக்குமுறை எச்சரிக்கைகளுடன், இன்னொரு குறியீடும் காட்டப்படுகிறது. சோதனை செய்து அறியமுடியாத, அஞ்சல் தொடர்புகளை, அவற்றின் தன் அமைப்பு (Profile) படத்தின் அருகே, சிறிய கேள்விக் குறியை அமைக்கிறது. அந்த தொடர்புடன், தொடர்ந்து அஞ்சல் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் போது, எச்சரிக்கையாக இருக்க இந்த ஏற்பாடு.
தங்கள் கூகுள் அக்கவுண்ட்டில், இந்த பாதுகாப்பு வழிகளை முழுமையாக மேற்கொள்பவர் களுக்கு, கூடுதல் சலுகையாக, அவர்களின் கூகுள் ட்ரைவ் அக்கவுண்ட்டில், மேலும் 2 ஜி.பி. இடம் அளிக்கிறது.
இது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு https://googleblog.blogspot.com/2016/02/building-safer-web-for-everyone.html என்ற முகவரியில் உள்ள இணையதளத்தினைப் பார்க்கவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X