வாட்ஸ் அப் குழுவில் 256 பேர் இயங்கலாம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
00:00

வாட்ஸ் அப் செயலியில், நாம் நம் நண்பர்களை ஒரு குழுவில் இணைத்து, தகவல்களை குழுவிற்குள்ளாக பகிர்ந்து கொள்ளலாம். இதுவரை, அதிக பட்சம் 100 பேர் வரை மட்டுமே, ஒரு குழுவில் இணைந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, இந்த அதிக பட்ச வரையறை 256 பேர் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மட்டுமின்றி, ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தின் வாட்ஸ் அப் பதிகை 2.12.13 பயன்படுத்துபவர்களுக்கும் இந்த தகவல் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் பதிகை v2.12.367 மற்றும் அதன் பின் வந்தவற்றில், இந்த வசதி தரப்படுகிறது. விரைவில், இது விண்டோஸ் மற்றும் பிளாக் பெரி போன்களுக்கான செயலிகளிலும் தரப்படும். ஒரு சில வாடிக்கையாளர்களிடம் மட்டும் வாட்ஸ் அப், ஆண்டுக்கு ஒரு டாலர் எனக் கட்டணம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டது. இதனைச் சில வாரங்களுக்கு முன்னர் நீக்கியது. மேலும், தன் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து அறிவித்தது.
இதன்படி, தன் வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்துடனும், நிறுவன நிர்வாகிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கு வழி தருவது அதில் ஒன்றாகும்.
சென்ற மாதத் தொடக்கத்தில், வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நூறு கோடியை எட்டியது. இந்த வகையில், கூகுள் இலவச அஞ்சல் சேவையின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை இது எட்டியது. வாட்ஸ் அப் செயலியில் நூறு கோடி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 4,200 கோடி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 160 கோடி போட்டோக்கள் பதிந்து பகிரப்பட்டன. நாளொன்றுக்கு 25 கோடி விடியோக்கள் பதியப்பட்டன.
விரைவில் உடனடி தகவல் பரிமாற்றத்துடன், அழைப்பு வசதிகளும் அமைக்கப்படும் வகையில், வசதிகளை வாட்ஸ் அப் தர உள்ளது. வாட்ஸ் அப் பதிகை 2.12.413 மூலம் பயனாளர்கள் தங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டுடன் இணைத்துக் கொள்ளவும் விரைவில் வழி தரப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X