பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
00:00

ஹேக்கர்கள் மொபைல் போன்களையே இனி அதிகம் தங்கள் இலக்காக வைப்பார்கள் என்பதனைத் தெளிவாகக் காட்டியுள்ளீர்கள். போனுக்கான ஆண்ட்டி வைரஸ் செயலிகள், பல வகைகளில் வசதிகளையும் பாதுகாப்பினையும் தருவதையும் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். கிராமங்களில் எல்லாம், மொபைல் போன் பயன்பாடு பெருகி வரும் இந்த நேரத்தில், இது போன்ற எச்சரிக்கைகள் மிகவும் அவசியமே. இது அச்சில் வந்தால், இன்னும் பலரை அடையும். பயன் விளையும்.
பேரா. இரா. சுந்தரமூர்த்தி, மதுரை.

மொபைல் போன் பயன்படுத்தி, வங்கி நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்கையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகளைத் தனியே ஒரு கட்டுரையாகத் தந்தால், பலருக்கு அது பாடமாக அமையும். ஆண்ட்டி வைரஸ் தேவை எனத் தந்துள்ள உங்கள் கட்டுரை அந்த வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. எழுதியவருக்கு பாராட்டுகள்.
டாக்டர் பேரா. ஜே. மொஹைதீன், கோவை.

ஆகாயத்தில் விமானத்தை ஆளில்லாமல் பறக்க வைத்து, இணைய இணைப்பினை வழங்குவது என்பது, அறிவியலின் உச்சகட்டமாக உள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் தொழில் நுட்ப எல்லை, விண்ணையும் தாண்டிச் சென்று சேவைகளை வழங்க திட்டமிடுவது, மனித இன வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் தான். நாம் நன்றியையும் பாராட்டுகளையும் அந்நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
ஆர். அமனுல்லா, சென்னை.

வாட்ஸ் அப் மற்றும் ஜிமெயில் எல்லாம், இன்று நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட அங்கங்களாகும். இவை இல்லாமல் வாழும் மக்கள், தங்கள் வாழ்வில் முக்கிய பயன்களை அனுபவிக்காமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. எனவே, நூறு கோடி பயனாளர்களை எட்டியது, ஓர் இயற்கையான வளர்ச்சி ஆகும்.
மா. சுந்தர ஈஸ்வரன், திருப்பூர்.

இறுதியாக ட்ராய் நியாயமான ஒரு முடிவினை எடுத்துள்ளது அனைவரும் பாராட்ட வேண்டிய ஒன்றாகும். எந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தகவல் தொடர்பு பிரிவில் இயங்கும் பெரிய நிறுவனங்களுக்கும் அஞ்சாமல், மக்கள் பக்கமாக, நியாயமான ஒரு முடிவை எடுத்து அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறையில் இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை ஆகும்.
எஸ். பிரஹதீஸ்வரன், சென்னை.

பேஸ்புக் ஆண்டு தோறும் தன் வாடிக்கையாளர்களுக்குத் தன் ஆண்டு விழாவில் ஏதேனும் ஒரு புதுமையைத் தருவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டில், சென்ற ஆண்டின் “கணக்கெடுப்பினைத்” தனக்கே உரிய முறையில் தந்து வியப்பினை அளித்தது. இது குறித்த குறிப்புகளோடு, பேஸ்புக் இயங்கும் தன்மை சார்ந்தும் பல தகவல்களைத் தந்தது முழுமையாக அதைப்பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.
எஸ். ஆறுமுகசாமி, கும்பகோணம்.

தேர்தல் வர இருக்கிறது. இதற்கு நமக்குப் பயன்படும் இணைய தளங்கள் குறித்து ஒரு கட்டுரை கொடுத்தால், தேர்தல் நேரத்தில் மிகவும் உதவியாக இருக்குமே.
ஆ. சிதம்பரம், திருச்சி.

படங்களை எப்படி டாகுமெண்ட்டில் அமைப்பது என்பது குறித்து நீங்கள் படத்துடன் அளித்த பதில் சிறப்பாக உள்ளது. எனக்கு மிகவும் உதவியது. நன்றி.
என். சாமிநாதன், தஞ்சாவூர்.

பொதுவான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை வெகு நாட்களாக வெளியிடாமல் இருக்கிறீர்கள். இது அடிக்கடி வெளியிட்டால், எங்களுக்குக் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் உதவியாக இருக்கும். அடுத்த இதழில் எதிர்பார்க்கிறேன்.
ஜெ. இம்மானுவேல், திருநெல்வேலி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X