கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவோருக்கு, விண் 10 இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான சீரியல் எண் குறித்து எந்த உறுதியான தகவல் இல்லை. நான் என்னுடைய ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்து பயன்படுத்த வேண்டுமாயின், விண் 10 சிஸ்டம் மீண்டும் அமைத்து இயக்க, ப்ராடக்ட் கீ க்கு எங்கு செல்வது?
ஆர். நரேன், சென்னை.
பதில்:
நீங்கள் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 10க்கு முன்னர் பயன்படுத்தி வந்தீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்கு மீண்டும் இன்ஸ்டால் செய்திட, ப்ராடக்ட் கீ தேவைப்படாது. விண்டோஸ் 10 பதிப்பு 1511 (சென்ற நவம்பரில் வெளியிடப்பட்ட அப்டேட்) இதனை உறுதி செய்கிறது. மைக்ரோசாப்ட் இதனை “digital entitlement” எனப் பெயரிட்டுள்ளது. பழைய சிஸ்டங்களுக்கான ப்ராடக்ட் கீயே போதும். ஆனால், வர்த்தக நிறுவனங்களுக்கென மொத்தமாக வாங்கப்பட்ட ப்ராடக்ட் கீ செல்லுபடியாகாது. மேலும், பைரசி தொகுப்புகள் என அழைக்கப்படும், திருட்டு நகல் சிஸ்டங்களிலும், பழைய சிஸ்டங்களின் ப்ராடக்ட் கீ இணைந்து செயல்படாது.
அதே போல, உங்கள் கம்ப்யூட்டரில், பெரிய அளவிலான ஹார்ட்வேர் மாற்றங்களை மேற்கொண்டிருந்தால், மதர் போர்ட் மாற்றம் போன்றவை, ப்ராடக்ட் கீ உதவிக்கு, மைக்ரோசாப்ட் நிறுவன உதவி எண்ணை அழைத்துப் பேசலாம்.
ரீ இன்ஸ்டால் செய்திடும் முன்னர், Start menu>Settings >Update & Security >Activation எனச் செல்லவும். பின்னர், ரீ இன்ஸ்டால் செய்திடுகையில், ப்ராடக்ட்கீ கேட்கப்படுகையில், Skip என்ற பட்டனில் தட்டினால், விண்டோஸ் 10 தானாகவே, ரீ இன்ஸ்டால் செய்து கொள்ளும். இது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு https://www.microsoft.com/en-us/software-download/faq என்ற மைக்ரோசாப்ட் தளத்தினை முதலில் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

கேள்வி: நான் தற்போது விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இதனை விண்டோஸ் 8.1க்கு மாற்றிக் கொள்ள எண்ணுகிறேன். என்னிடம் உள்ள பைல்கள் எவையேனும் அழிக்கப்படுமா? அப்ளிகேஷன் புரோகிராம்கள் அப்படியே இருக்குமா?
என். சிங்கராஜா, தேனி.
பதில்
: விண்டோஸ் 8.1 உங்கள் கம்ப்யூட்டரைப் புதிய சிஸ்டமாகத்தான் அடையும். இதனை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டும். ஏறத்தாழ ரூ. 6,000 இருக்கும். புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பதால், அனைத்து அப்ளிகேஷன்களும் அழிக்கப்படும். அனைத்தையும் புதியதாக இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அதற்கான டிஸ்க் மற்றும் அவற்றின் ப்ராடக்ட் கீ தேவைப்படும். உங்கள் டேட்டா பைல்களை எங்கு வைத்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து, சி ட்ரைவ் இல்லாமல் வேறு ட்ரைவில் இருந்தால், அவை மீண்டும் கிடைக்கலாம். அல்லது பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்டோஸ் 7 க்கும் விண்டோஸ் 8.1க்கும் அதிக வேறுபாடு இருப்பதால், நிறைய புதியதாகக் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும்.
இதற்குப் பதிலாக, உங்களுக்கு இலவசமாகத் தரப்படும் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டால், செலவில்லை. அதிகம் கற்றுக் கொள்ளத் தேவை இல்லை. அப்ளிகேஷன்கள் அனைத்தும் அப்படியே கிடைக்கும். இதுவே உங்களுக்கு நான் பரிந்துரை செய்கிறேன்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, வேறு வேலையாகச் செல்ல வேண்டி இருந்தால், அதனை Hybernate நிலையில் விட்டுச் செல்கிறேன். என் நண்பர், அதனை Sleep நிலையில் விட்டுவிட்டுச் செல்லுமாறு கூறுகிறார். Sleep நிலையில் விட்டுச் சென்றால், என்ன மாற்றங்கள் ஏற்படும். ஹைபர்னேட் நிலையைக் காட்டிலும் அது நல்லதா?
எஸ். முருகேசன், பழனி.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் இரண்டு நிலைகளும், ஸ்லீப் மற்றும் ஹைபர்னேஷன் (Sleep and hibernation), ஏறத்தாழ ஒரே செயல்பாட்டினையே தருகின்றன. இவை இரண்டும் இயக்கப்படுகையில், இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன சேவ் செய்யப்படுகின்றன. மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கும்போது, எந்த நிலையில் விட்டு சென்றீர்களோ, அதே நிலைக்கு மீண்டும் வருவீர்கள். ஆனால், இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க எண்ணினால், நீங்கள் எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்திற்கேற்ப முடிவு செய்திடலாம். ஸ்லீப் நிலையை தற்காலிக நிறுத்தம் (Suspend) என்றும் கூறுவார்கள். இந்நிலையில், உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருந்த தகவல்கள் அனைத்தும் ராம் மெமரியில் சேவ் செய்யப்படுகிறது. இதற்கென குறைந்த அளவே மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குகையில், அவை உடனே கிடைக்கும். ஆனால், ஹைபர்னேட் (Hibernate) தேர்ந்தெடுக்கையில், அவை அனைத்தும், உங்கள் ஹார்ட் ட்ரைவில் சேமிக்கப்படுகிறது. சேமித்து முடித்தவுடன், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகிறது. வெகு நேரம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், ஹைபர்னேட் நிலையையும், குறைந்த நேரமே எனில், ஸ்லீப் நிலையையும் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: நான் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு என் லேப்டாப்பினை, விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து மாறிக் கொள்ள முடிவெடுத்துவிட்டேன். இருப்பினும், தற்போது செயல்படும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கு என்ன முடிவு ஏற்படும்? என்பது தெரியவில்லை. நீங்களும் இது குறித்து எந்த டிப்ஸும் தரவில்லை. இது குறித்து வழி காட்டும் வகையில் விளக்கவும்.
என். சுதந்திர மூர்த்தி, சிவகாசி.
பதில்:
உங்களுக்கு, விண்டோஸ் 10 குறித்த பாப் அப் விண்டோவில், விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) நல்ல பாதுகாப்பினைத் தருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் சந்தேகம், மைக்ரோசாப்ட், விண்டோஸ் டிபண்டர் தொகுப்பினை, மாறாநிலையில் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக அமைத்துவிட்டு, நீங்கள் ஏற்கனவே, நம்பிக்கையுடன் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை நீக்கிவிடுமோ என்பதுதான், இல்லையா?
விண்டோஸ் டிபண்டர், மைக்ரோசாப்ட் சொல்வது போல, விண் 1-0 சிஸ்டத்தின் மாறா நிலையில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்புதான். அது விண்டோஸ் 10 சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே, வாடிக்கையாளர்களுக்குத் தரப்படுகிறது. நீங்கள் விரும்பினால், அதன் இயக்கத்தினை நிறுத்திவிடலாம். நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ள தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இந்த தர்ட் பார்ட்டி புரோகிராமினைப் பதியும் போது, அது, விண்டோஸ் டிபண்டர் தொகுப்பின் இயக்கத்தினை மூடச் சொல்லிக் கேட்கும். அல்லது, தானாகவே அதன் இயக்கத்தை நிறுத்தி, தன்னைப் பதிந்து கொள்ளும். அல்லது, விண்டோஸ் டிபண்டர் இயக்கமே, தன்னை நிறுத்திவிட்டு, புதிய ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பதியும்படி கேட்டுக் கொள்ளும்.

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இது நகல் எடுத்துப் பயன்படுத்தும் பைரேட்டட் காப்பி. கம்ப்யூட்டரை தயாரித்து கொடுத்த நபர், இந்த திருட்டு சிஸ்டம் பதித்து கொடுத்தார். இதுவரை பிரச்னை இல்லாமல் செயல்படுகிறது. மைக்ரோசாப்ட், திருட்டு சிஸ்டம் இருந்தாலும், இலவசமாக விண்டோஸ் 10 தரவிறக்கம் செய்து அமைத்துக் கொள்ள அனுமதிப்பதாகப் படித்தேன். அது உண்மையா? நான் விண் 10க்கு மாறிக் கொள்ளலாமா? பிரச்னை ஏற்படாதா?
பெயர் தராத வாசகர்.
பதில்:
இது போன்று பல கடிதங்கள் வந்ததால், இந்த பதிலைத் தருகிறேன். நீங்கள் செய்தது, செய்திட முயற்சிப்பது எல்லாமே, சட்ட விரோதமானது. அடுத்தவரின் உழைப்பினைத் திருடுவது. மைக்ரோசாப்ட் விண் 10 மேம்படுத்தல் குறித்து சீனாவில் பேசிய டெரி மையர்சன் “மைக்ரோசாப்ட், நியாயமான மற்றும் நியாயமற்ற தகுதியான அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திடும்” எனக் கூறினார். இதற்கு பொருள், உங்கள் விண்டோஸ் 7 மூலம், சட்ட ரீதியான விண்டோஸ் 10 உங்களுக்குக் கிடைக்கும் என்பதல்ல. நியாயமற்ற ஒரு விண்டோஸ் பதிப்பு, நியாயமான பதிப்பாக மேம்படுத்தப்பட மாட்டாது. விண் 10க்கு மேம்படுத்தப்பட்டாலும், “உங்கள் சிஸ்டம் சரியானது அல்ல; நியாயமானது அல்ல” என்ற பாப் அப் செய்தி தொடர்ந்து காட்டப்படும். சில வேளைகளில், கம்ப்யூட்டர் திரை கருப்பாக மாறிவிடும். தொடர்ந்து ஒரு சில பாதுகாப்பு அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டாலும், அனைத்து பைல்களும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. திருட்டு என்பது நியாயமானது அல்ல என்பதுடன் அது கடுங்குற்றமும் ஆகும். உங்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேண்டும் என்றால், லினக்ஸ் போன்ற இலவசமாக வழங்கப்படும் சிஸ்டத்தினைப் பயன்படுத்துங்கள். திருட்டு சிஸ்டம் பயன்படுத்துவது, என்றாவது ஒரு நாள், தீர்க்க முடியாத பிரச்னையில் கொண்டு போய்விடும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், எதையேனும் பேஸ்ட் செய்தால், இறுதி வரி அல்லது படத்திற்குக் கீழாக, ஒரு சிறிய ஐகான் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், சில ஆப்ஷன்கள் காட்டப்படுகின்றன. இதை லட்சியம் செய்திடாமல், தொடர்ந்து டைப் செய்தால், அது மறைந்துவிடுகிறது. பின்னர் தேடினாலும் கிடைப்பதில்லை. எதற்காக இந்த ஐகான்?
என்.சின்னச்சாமி, ஆண்டிபட்டி.
பதில்:
இந்த ஐகானில் காட்டப்படும் சில வசதிகள் நமக்காகத்தான் தரப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, இணைய தளம் ஒன்றிலிருந்து, நீங்கள் ஏற்கனவே தயாரித்துக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பேஸ்ட் செய்கிறீர்கள். அப்போது, இணைய தளத்தில் எப்படி இருந்ததோ, அந்த எழுத்து வகை, அளவு ஆகியவற்றில் இது ஒட்டப்படும். இது, ஏற்கனவே நாம் அமைத்த டாகுமெண்ட்டில் வேறுபாடான ஒன்றாகத் தெரியும். ஆனால், நம் டாகுமெண்ட்டின் ஒரு பகுதியாக, அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்டால் தான், டாகுமெண்ட் பார்க்க நன்றாக இருக்கும். இதற்காகத்தான் இந்த ஐகானும், அதில் தரப்படுகின்ற ஆப்ஷன் மெனுவும். இதில் மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். அவை: Keep Source Formatting, Match destination Formatting மற்றும் Keep Text only. நீங்கள் விரும்பியபடி அமைய, இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒட்டப்பட டெக்ஸ்ட் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட்டின் ஸ்டைலை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளும்.

கேள்வி: நான் புதியதாக ஆண்ட்ராய்ட் மொபைல் ஸ்மார்ட் போன் வாங்கியுள்ளேன். இதில் பழைய சிம்மினைப் பொறுத்தி இயக்க முடியவில்லை. பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர் மையத்தினை அணுகிய போது, “உங்கள் போனுக்கு நானோ சிம் வேண்டுமா? அல்லது மைக்ரோ சிம் வேண்டுமா?” என்று கேட்கின்றனர். இதனை எப்படி அறிவது? மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
ஆர். மலர்விழி, கோவில்பட்டி.
பதில்
: உங்களுடைய போன் குறித்த குறிப்புகளில் என்ன வகையான சிம்மினை, போன் ஏற்றுக் கொள்ளும் என தந்திருப்பார்கள். அல்லது வாங்கிய கடையில் காட்டினால் சொல்வார்கள். பின்னர், பி.எஸ்.என்.எல். நிறுவனம் சென்று, பழைய சிம் குறித்த தகவல்கள், வாங்கியவரின் பெயர் கொண்ட முகவரி அத்தாட்சியுடன் விண்ணப்பம் அளித்தால், அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, புதிய வகை சிம் தருவார்கள். இணைத்துப் பயன்படுத்தலாம்.
இனி, உங்கள் “வேறுபாடு என்ன?” என்ற கேள்விக்கு வருவோம்.
மொபைல் போனுக்கான சிம்களில், முதலில் 1991 ஆம் ஆண்டு முழு அளவிலான சிம் 85.60 மிமீ நீளத்தில் வெளி வந்தது. இதனை (1FF) என அளவு கூறுவார்கள். அடுத்து, 1996ல், (2FF) தர அளவில், 25 மிமீ நீளத்தில், மினி சிம் 1996ல் வெளியானது. மைக்ரோ சிம் (3FF), 2003 ஆம் ஆண்டில், 15 மிமீ அளவில் வெளியானது. நானோ சிம் (1FF) என்ற வரையறை அளவில், 12.30 மிமீ நீளத்தில், 2012 ஆம் ஆண்டில் வெளியானது. முதல் மூன்று சிம்களுக்கும் தடிமன் 0.76 மிமீ ஆகவும், நானோ சிம் தடிமன் 0.67 மிமீ ஆகவும் உள்ளது. இந்த தகவல் தொழில் நுட்ப உலகத்தில், ஏறத்தாழ கடந்த 25 ஆண்டுகளாக, மாறா நிலையில் உள்ளது இந்த மொபைல் சிம் தான். முதல் முதலில் வந்த (1FF) வரையறை கொண்ட சிம் ஒரு கிரெடிட் கார்ட் அளவில் இருந்தது. பின்னர், இதன் நீள, அகலம் தான் மாறி உள்ளதே தவிர, இதன் வடிவம் மாறவே இல்லை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X