21 மாநில மொழிகளை ஏற்கும் பானாசோனிக் பி66
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
00:00

பிப்ரவரி முதல் வாரத்தில், பானாசோனிக் நிறுவனத்தின் P66 Mega என்னும் ஸ்மார்ட்போன் வெளியானது. இதன் முக்கிய சிறப்பம்சம், இதில் 21 மாநில மொழிகளுக்கான சப்போர்ட் தரப்பட்டிருப்பதுதான். இதன் விலையும் அனைவரும் வாங்கும் வகையில், அதிகபட்சமாக ரூ.7,990 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம்களை (3ஜி +2ஜி) இயக்கலாம். ஹை டெபனிஷன் டிஸ்பிளே கொண்ட 5 அங்குல திரை 720x1280 பிக்ஸெல் அடர்த்தியுடன் தரப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, ஜி.பி.எஸ்., வை பி, வை பி ஹாட் ஸ்பாட், புளுடூத் 2.1, மைக்ரோ யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
போனை இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப். இதில் பானாசோனிக் நிறுவனத்தின் யூசர் இண்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் திரைக்கு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. பின்புறமாக ஆஷி ட்ரேகன் ட்ரெய்ல் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் பரிமாணம் 142.5x70.9x8.4 மிமீ. இதன் பேட்டரி 3200 mAh திறன் கொண்டது. மிக அதிகப்படியான மாநில மொழிகளுக்கு சப்போர்ட் வழங்குவதன் மூலம், இந்த போன், தற்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்தத் தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற பயனாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மொபைல் வங்கி பணப் பரிமாற்றம், வர்த்தக இணைய தளங்கள் மூலம் பொருட்கள் வாங்குதல், சமூக உறவு தொடர்புகளுடன் நட்பு வளர்த்துக் கொள்ளல் மற்றும் பொழுது போக்கு அம்சங்களை மேற்கொள்ள, இந்த மாநில மொழி இயக்கம் உதவும் என, இந்த போனை அறிமுகப்படுத்துகையில், பானாசோனிக் நிறுவன வர்த்தகப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.
சென்ற மாதம் பானாசோனிக் நிறுவனம் தன்னுடைய Panasonic Eluga Turbo மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. அதன் அதிக பட்ச விலை ரூ. 11,999. P66 Mega போனைக் காட்டிலும் அனைத்து அம்சங்களிலும் சற்று கூடுதல் திறனுடன், இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X