ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் பன்முக வளர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
00:00

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், 19 ஆம் நூற்றாண்டில், தொலைபேசியை உருவாக்கிய போது, தன் கண்டுபிடிப்பு, உலக மக்களின் வாழ்க்கையில் பெரியதொரு புரட்சியை ஏற்படுத்தப் போகிறது எனக் கொஞ்சம் கூட எண்ணியிருக்க மாட்டார். ஏன், இன்றைய மக்களும், முதன் முதலில், மொபைல் போன்கள் புழக்கத்தில் வந்த போது, இந்த மாற்றங்களை எண்ணியிருக்க மாட்டார்கள். இன்று உலக அளவில், அனைத்து நாடுகளிலும், மொபைல் போன்கள் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. 2015 ஆம் ஆண்டில், 9.5 கோடி ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. 2013 ஆம் ஆண்டில் இது 4.1 கோடியாக இருந்தது. முதல் முறையாக, ஸ்மார்ட் போன்களின் விற்பனை எண்ணிக்கை, சாதாரண போன்களின் விற்பனையைக் காட்டிலும் அதிகமாக இருக்கப் போகிறது. அண்மையில், சிஸ்கோ நிறுவனம் வெளியிட்ட “VNI Mobile Forecast 2015 - 2020” அறிக்கையில், 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 23.9 கோடி என அறிவித்துள்ளது. இந்த வகையில், முதல் முறையாக அமெரிக்க ஸ்மார்ட் போன் பயனாளர்களின் எண்ணிக்கையை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதற்குக் காரணம், பட்ஜெட் விலையில், அனைத்து மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் வெளியாகிக் கொண்டிருப்பதே காரணம். குறிப்பாக, சாம்சங் நிறுவனம் இந்த வகையில் பெரும் பங்கினைக் கொண்டுள்ளது. இதனால், வரும் 2020 ஆம் ஆண்டில், 85% மொபைல் டேட்டா பரிமாற்றம், இந்தியாவில் இயங்கும் 70.2 கோடி ஸ்மார்ட் போன் வழியாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி, இந்தியச் சந்தையில், ஸ்மார்ட்போன்களின் பெரும் வரவு, மொபைல் டேட்டா பரிமாற்றத்தினை மாற்றத்திற்கு உள்ளாக்கியது எனப் பார்க்கலாம்.
இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களில் 60% பேர், தங்கள் மொபைல் போன்கள் வழி இணையத்தை அணுகுகின்றனர். இதனால், சிஸ்கோ அறிக்கையின்படி, 2015 ஆம் ஆண்டில், இந்திய மொபைல் டேட்டா பரிமாற்றம், மாதம் ஒன்றுக்கு 148.9 பீட்டா பைட்ஸ் (Petabytes) ஆக இருந்தது. வரும் 2020 ஆம் ஆண்டில், இது 1.7 எக்ஸா பைட் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 3.7 கோடி டிவிடியில் பதியப்படும் டேட்டாவிற்குச் சமம். அல்லது, ஒவ்வொரு நொடியிலும் 41 கோடி டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவதற்குச் சமம். மேலும், 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் அமைப்புகள் அதிக அளவில் டேட்டா பரிமாற்றத்திற்கு வழி தருகின்றன. சாதாரண போன் ஒன்றின் மூலம் அனுப்பப்படும் டேட்டாவைக் காட்டிலும் 9 மடங்கு டேட்டா, ஒரு ஸ்மார்ட் போன் மூலம் அனுப்பப்படுகிறது.
இந்தியாவில், 2015 ஆம் ஆண்டில், மொபைல் இணைப்புகளில், 23.9% இணைப்புகள், ஸ்மார்ட் போன்களில் இருந்தன. மொத்த மொபைல் டேட்டா பரிமாற்றத்தில் இவை 69.1% பங்கினைக் கையாண்டன. இதற்குக் காரணம், சென்ற ஆண்டில், திடீரென, மக்களுக்குக் கட்டுபடியாகும் விலையிலும், பட்ஜெட் விலையிலும், அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்கள் வெளியானதுதான். மேலும், நம் மக்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்டிராமல், விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து, குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட போன்களை வாங்கிப் பயன்படுத்த முன் வந்ததும் ஆகும்.
சிஸ்கோ அறிக்கையில் தரப்பட்டுள்ள சில கணிப்புகள், மொபைல் போன் பயன்பாடு குறித்த பல ஆர்வமூட்டும் தகவல்களைத் தெரிவிக்கின்றன. அவற்றை இங்கு காணலாம். 2020 ஆம் ஆண்டில், ஒவ்வொரு மொபைல் போன் பயனாளரும், மாதம் ஒன்றுக்கு 1,704 மெகா பைட்ஸ் டேட்டாவினைப் பரிமாறிக் கொள்வார்கள். இது சென்ற 2015ல், 185 மெகா பைட் ஆக இருந்தது என்பதை ஒப்பிடுகையில், எவ்வளவு வேகமாக மொபைல் போன் மூலம் டேட்டா பரிமாற்றம் உயரும் என்பது தெளிவாகிறது.
ஸ்மார்ட்போன்களில் மட்டும் மேற்கொள்ளப்படும் டேட்டா பரிமாற்றத் தகவல் இன்னும் வியப்பினை அளிக்கிறது. 2015 ஆம் ஆண்டில், சராசரியாக ஒரு ஸ்மார்ட் போன் வழியாக, 430 மெகா பைட் டேட்டா சென்ற ஆண்டில் கையாளப்பட்டது. இது 2014ல், 299 மெகா பைட்டாக இருந்தது. இதுவே, 2020ல், 2,082 மெகா பைட் (2 ஜி.பி.) ஆக உயரும். வரும் 2017 ஆம் ஆண்டில், மொபைல் போன்கள் வழி பரிமாறப்படும் விடியோ டேட்டா, மொத்த மொபைல் டேட்டாவில் பாதியளவு இருக்கும். இது, 2020ஆம் ஆண்டில், 72% ஆக உயரும்.
2020ஆம் ஆண்டில், இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 70.2 கோடியைத் தொடும். அணிந்து கொண்டு இயக்கப்படும் சாதனங்களின் எண்ணிக்கை, அப்போது 41 லட்சமாக உயர்ந்திருக்கும்.
மொபைல் நெட்வொர்க் இணைப்பின் வேகத்தைப் பொறுத்தவரை, இந்தியா, மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகவும் பின் தங்கியே இருப்பதனைப் பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். உலக அளவில், 2015 ஆம் ஆண்டில், மொபைல் நெட்வொர்க் இணைப்பின் வேகம், விநாடிக்கு 2.0 மெகா பிட்ஸ் ஆக இருந்தது. 2020 ஆம் ஆண்டில், இது, 6.5 மெகா பிட்ஸ் ஆக இருக்கும். இந்தியாவில், 2015ல் இணைப்பு வேகம், 1,016 கிலோ பிட்ஸ் ஆக இருந்தது. இது, 2020 ஆம் ஆண்டில், 3.1 பங்கு உயர்ந்து, 3,122 கிலோ பிட்ஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை மிகவும் கவலைக்குரியதாகும். எனவே, தகவல் தொழில் நுட்ப பிரிவில் இயங்கும் நிறுவனங்கள், தங்கள் நெட்வொர்க்கில் போதுமான கூடுதல் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும். தேவையற்ற மூலதனச் செலவினையும் குறைக்க வேண்டும்.
இந்திய பயனாளர்கள், விலை அடிப்படையிலேயே தங்கள் சாதனங்களை வாங்கும் எண்ணம் கொண்டிருப்பதால், ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள், ரூ.10,000க்கும் குறைவான விலையில், அதிக 4ஜி ஸ்மார்ட் போன்களை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X