உலகின் முதல் தெர்மல் கேமரா மொபைல் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
00:00

வலுவான, எதனையும் தாங்கும் மேல் அமைப்புடன் கூடிய மொபைல் போன்களைத் தயாரித்து வழங்குவதில் புகழ் பெற்ற Cat phones என்னும் அமெரிக்க நிறுவனம், உலகிலேயே முதன் முதலாகத், தெர்மல் கேமரா இணைக்கப்பட்ட ஸ்மார்ட் மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து, Cat S60 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி, தண்ணீர் புகாத வகையில் அதிக பாதுகாப்புடன் அமைக்கப்பட்ட மொபைல் போனும் இதுதான் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐந்து மீட்டர் ஆழ நீரில் ஒரு மணி நேரம் வரை இதனை மூழ்க வைத்துப் பயன்படுத்தலாம். எனவே, இந்த ஸ்மார்ட் போனை, நீருக்குள் படம் எடுக்கும் கேமராவாகவும் பயன்படுத்தலாம். அத்துடன் 1.8 மீட்டர் உயரத்தில் இருந்து கான்கிரீட் துண்டுகள் இதன் மீது மோதினாலும் எந்த சேதமும் ஏற்படாது. அத்துடன் தூசியும் இதனுள் போகாத வகையில் பாதுகாப்பாக வடிவமைப்பு கொண்டுள்ளது. நல்ல சூரிய வெளிச்சத்தில் கூட இதன் திரைக் காட்சியைத் தெளிவாகப் பார்க்கலாம். ஈர விரல்களாலும், கையுறை அணிந்த நிலையிலும் இதன் திரையைத் தொட்டு எளிதாக இயக்கலாம். இதன் திரைக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதன் தெர்மல் கேமரா இருள் சூழ்ந்த நிலையிலும் படங்களை எடுக்கும் தொழில் நுட்பம் கொண்டது. வெளிச்சம் இருக்கும்போதும், தெர்மல் கேமராவில் படங்களை எடுக்கலாம். வழக்கமான கேமராவும் இதில் உண்டு. தெர்மல் கேமராவில் FLIR எனப்படும் Forward Looking Infrared தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் மூலம், 50 அடி முதல் 100 அடி வரை தொலைவில் இருக்கும் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாகக் குறையும் வெப்பநிலையை அளக்கலாம். சுற்றுப் புறத்தில் உள்ள ஈரப்பதமும் கணிக்கலாம். அருகில் உள்ள மின் சாதனங்களில் ஏற்படும் வெப்பத்தினையும் அறியலாம். இருட்டிலும் எதிரில் உள்ள உருவங்களை அறியலாம். இவற்றின் மூலம், அனைத்தும் உணரப்பட்டு, எதிரில் உள்ள உருவங்கள், தெர்மல் இமேஜாகப் பதியப்படுகின்றன.
இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த கேமராக்கள், கட்டடம் கட்டும் வல்லுநர்களுக்கு அதிகம் பயன்படுகின்றன. மைதானங்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளைப் படம் எடுப்பவர்களுக்கும் இது பயன்படும். விபத்துகள் ஏற்பட்டு, தூசு, நெருப்பு, புகை பரவும் இடங்களில் இதனைப் பயன்படுத்தி படம் எடுக்கலாம். முதல் முறையாக, ஸ்மார்ட் போன் ஒன்றில் இந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்கள்:
திரை, 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடியதாக 4.7 அங்குலம் அளவில் உள்ளது. இது ஒரு ஹை டெபனிஷன் டிஸ்பிளே திரையாகும். இதன் மல்ட்டி டச் வசதியினைத் துல்லியமாகப் பயன்படுத்த முடியும். ஆக்டா கோர் ஸ்நாப் ட்ரேகன் 617 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மார்ஷலாய் என்று அழைக்கப்படும் ஆண்ட்ராய்ட் 6.0. நீரில் மூழ்கி இருந்தவாறும் படம் எடுக்கக் கூடிய, எல்.இ.டி. டூயல் ப்ளாஷ் கொண்ட 13 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட செல்பி கேமரா, MSX தொழில் நுட்பத்துடன் கூடிய FLIR தெர்மல் கேமரா, 1.8 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் அதிர்ச்சியில் பாதிப்படையாத தொழில் நுட்ப வடிவமைப்பு, நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் ஆகியவை இதில் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 3800 mAh திறனுடன் தரப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்காவிலும் பின்னர் மற்ற நாடுகளிலும் இது விற்பனைக்கு அறிமுகமாகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X