எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் தரும் உலகின் முதல் மாடுலர் ஸ்மார்ட்போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மார்
2016
00:00

எல்.ஜி. நிறுவனம், தன்னுடைய ஜி5 ஸ்மார்ட் போனை, உலக மொபைல் கருத்தரங்கில் வெளியிட்டது. விரைவில் இது விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போன், வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்போது, உலகிலேயே சிறப்பாக வடிமைக்கப்பட்ட முதல் மாடுலர் ஸ்மார்ட் போனாக இருக்கும். அது என்ன மாடுலர் ஸ்மார்ட்போன் (Modular phone)? பலர் முயன்று தோல்வியைச் சந்தித்த போன் தயாரிப்பு திட்டம் இது. Project Ara என்ற பெயரில், கூகுள் நிறுவனம் சில காலத்திற்கு முன்பு, மாடுலர் போனைத் தயாரிக்க முயன்று தோல்வியைத் தழுவியது. இதன் பின்னணியைப் பார்த்தால், மிகவும் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பாக, வடிவமைப்பாக இருக்கும். இதன் கோட்பாட்டினை இங்கு பார்க்கலாம்.
”மாடுலர் போன்” என்பது, பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய திறனை மையமாகக் கொண்டு, மொபைல் போன் ஒன்றைத் தயாரிக்க வசதி தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட போனே 'மாடுலர் போன்.' தற்போது மொபைல் போன் ஒன்று மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கே நன்றாகச் செயல்படுகிறது. பின்னர், அதன் பல பிரிவுகளில் பிரச்னை ஏற்பட்டு, தூக்கி எறியப்படுகிறது. அதே போல, ஒருவர், இணையம் பார்ப்பதனை முன்னிறுத்தி மொபைல் போன் ஒன்றை வாங்க விரும்பலாம். இன்னொருவர், போட்டோ எடுக்கப் பயன்படும் மொபைல் போனை வாங்க விரும்பி, சிறந்த திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போனை நாடலாம்.
இதனைத் தமிழில் 'கட்டகத் தொலைபேசி' என அழைக்கலாம். கட்டகங்கள் என்றால், தொகுதிகளாக உள்ள பிரிவுகளைக் குறிக்கும். ஒரு கட்டகத் தொலைபேசியில், அடிப்படையில் சட்டக அமைப்பு தரப்பட்டிருக்கும். இந்த வகையில் அடிப்படையில் போன் செயல்பாட்டிற்கான ஒரு கட்டகம் இணைக்கப்பட்டு அது போனாக இயங்கும். இதனுடன், நாம் விரும்பும் வகையிலான திரைக்கான கட்டகத்தினை வாங்கி இணைக்கலாம். அதே போல, ரேடியோ, கேமரா, ஸ்பீக்கர் என நாம் விரும்பி எதிர்பார்க்கும் திறன் கொண்டவற்றை வாங்கி இணைத்துக் கொள்ளலாம்.
மாடுலர் மொபைல் போன் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துகையில், ஏதேனும் ஒரு பகுதி சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, அல்லது அதன் தரம் மற்றும் திறன் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என நாம் விரும்பினாலோ, இப்போதுள்ள நிலையில், நாம் அதனை குப்பையாக விட்டுவிடுகிறோம். ஏனென்றால், தனியாக ஒரு பிரிவை மட்டும் சரி செய்திட இயலாது. ஆனால், மாடுலர் போன் ஒன்றில், எந்தப் பகுதி மாற்றப்பட வேண்டும் எனத் தேவை ஏற்படுகிறதோ, அதை மட்டும் வாங்கி, பயனாளரே இணைத்துக் கொள்ளலாம்.
அது போல மொபைல் போன் ஒன்றை வாங்கும்போது, சட்டக அமைப்பினையும், அதனுடன் நமக்குத் தேவையான வசதிகளைத் தரும் பிரிவுகளை மட்டும் வாங்கி இணைத்துக் கொள்ளலாம். புகைப்படக் கலைஞர் ஒருவருக்கு, அவர் மொபைல்போனில் கேமரா தேவைப்படாது. எனவே, அது இல்லாமல் மாடுலர் மொபைல் போன் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். இந்த வகையில், ஒருவருக்கு என்ன தேவையோ, அதனை மட்டும் அவர் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
எல்.ஜி. நிறுவனம், ஏற்கனவே கூகுள் உட்பட பல நிறுவனங்கள் தோல்வியுற்ற திட்டத்தில், வெற்றி பெற்றுள்ளது. இதன்
எல்.ஜி. ஜி5 ஒரு மாடுலர் போனாக உருவாகியுள்ளது. இதில், பேட்டரி, கேமரா ஆகியவற்றை செருகி எடுத்து, இணைத்துப் பயன்படுத்தலாம். இன்னும் பல சாதனங்கள் இணைப்பினை ஏற்படுத்தி இருக்கலாம் என்றாலும், எல்.ஜி. இந்த வகையில் வெற்றி பெற்றது சிறப்பே.
எல்.ஜி.முடிவெடுத்தால், மற்ற நிறுவனங்கள், இந்த மாடுலர் போனுக்குத் தேவையான பிற சாதனங்களுக்கான கட்டகங்களைத் தயாரிக்கும் உரிமையினை வழங்கலாம். இந்த வகையில், இந்த ஜி5 மாடுலர் போனில் இணைக்கக் கூடிய சிறிய ரசீது பிரிண்டர், சிறந்த திறன் கொண்ட மைக், ப்ரஜக்டர், ஸ்பீக்கர், யு.எஸ்.பி.போர்ட், எஸ்.டி. கார்ட் ரீடர் எனப் பல சாதனங்களைக் கட்டகங்களாகத் தயாரித்து வழங்கும்
உரிமையைக் கொடுக்கலாம். பயனாளர்கள், தங்களுக்குத் தேவையானதை வாங்கி, அதனைத் தாங்களாகவே இணைத்துப் பயன்படுத்தலாம். இப்போது எப்படி சிம் கார்டுகளை எடுத்து இணைத்துப் பயன்படுத்துகிறார்களோ, அதே போல தேவையான சாதனங்களையும் இணைத்துப் பயன்படுத்தலாம்.
இதுவரை பிக்ஸெல்களில் அடர்த்தி, கூடுதல் சிம், ஓரங்களில் வளைவு, வளைவுகளில் சதுர முனை, கார்பன் பைபர் ஷெல்கள், உலோகக்கவசம், கிளாஸ் திரை என மட்டுமே மாற்றங்களைச் சந்தித்து வந்த மொபைல் ஸ்மார்ட் போன் தயாரிப்பு, முற்றிலும் மாற்றாக, தற்போது புதிய மாற்றமாக 'மாடுலர் போனைச்' சந்தித்துள்ளது. இனி, மாடுலர் போன் மட்டுமே தரவரையறையாக அமையும் காலம் விரைவில் ஏற்படும்.
எல்.ஜி.ஜி5 ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்: இதன் திரை 5.3 அங்குல அளவில், 2560 x 1440 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. இதன் டிஸ்பிளே Quad HD IPS Quantum Display தன்மை கொண்டதாக உள்ளது. அண்மைக் காலத்தில் வெளியான Qualcomm Snapdragon 820 ப்ராசசர் இதனை இயக்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மார்ஷ்மலாய்.
இந்த ஸ்மார்ட் போனின் ராம் மெமரி 4 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் இடம் 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி.கார்ட் கொண்டு 2 டெரா பைட் அளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம். பின்புறக் கேமரா 16 எம்.பி.திறனுடனும், முன்புறக் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடனும் தரப்பட்டுள்ளது. பின்புறக் கேமரா, 135 டிகிரி கோணத்தில் அகலப் பார்வை தோற்றத்தினைப் பெறும் வகையில் லென்ஸ் பெற்றுள்ளது. எல்.ஜி. நிறுவனம் வெளியிட்டுள்ள CAM Plus என்னும் கேமரா கட்டகத்தினை இணைத்துச் செயல்படுத்தலாம்.
ஸ்மார்ட் போன், இதனுடன் சிறந்த டிஜிட்டல் கேமராவாக மாறிச் செயல்படும். இதில் பவர், ஷட்டர், ரெகார்ட், ஸூம் எனப் பல வசதிகளுக்கான பட்டன்கள் தரப்பட்டுள்ளன. இதனை, ஜி5 ஸ்மார்ட் போனுடன் இணைக்கையில், கூடுதலாக 1200 mAh பேட்டரி திறன் கிடைக்கிறது. ஜி5 போனில், செருகிப் பயன்படுத்தும் வகையில், 2800 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. எல்.ஜி.ஜி5 ஸ்மார்ட் போனின் பரிமாணம் 49.4 x 73.9 x 7.7 மிமீ. வேகமாக சார்ஜ் செய்வதற்கென யு.எஸ்.பி. சி வகை போர்ட் தரப்பட்டுள்ளது. சில்வர், டைட்டன், கோல்ட் மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில், இந்த போன் கிடைக்கிறது. மாடுலர் போன் என்பது நம் தேவை மட்டுமல்ல. அனைத்து நிறுவனங்களும் வெற்றி பெறக்கூடிய ஒரு சாதனமாகும் என எல்.ஜி. நிரூபித்துள்ளது. 2016ன் இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு வரும்போது, இதன் விலை தெரியவரும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X