கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய தொழில் நுட்பம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மார்
2016
00:00

கூகுள் நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன்களில், இணையத்தின் வேகத்தினை அதிகப்படுத்த, புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும், குறிப்பாக ஊடகத்தில் இயங்கும் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இந்த தொழில் நுட்பத்தின் பெயர் Accelerated Mobile Pages (AMP). இத் தொழில் நுட்பம், மொபைல் போன்களில் உள்ள இணையப் பக்கங்களை, தற்போது கிடைக்கும் வேகத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக வேகத்தில் இணைக்கின்றன. இதற்கெனப் பயன்படுத்தும் டேட்டாவினை, பத்தில் ஒரு பங்காகக் குறைத்து இந்த கூடுதல் வேகத்தினை இந்த தொழில் நுட்பம் தருகிறது.
கூகுள் இந்தியாவில் தரும் இந்த தொழில் நுட்ப வசதியினை நெட்வொர்க் 18, என்.டி.டி.வி, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் வரவேற்றுள்ளன. ''கூகுளின் இலட்சியமும் நோக்கும், தகவல்களை மக்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்ப்பதுதான். துரதிருஷ்டவசமாக, இன்றைக்குப் பயனாளர்களுக்குக் கிடைக்கும், மொபைல் வழியிலான இணையம், மக்களுக்குத் தேவைப்படும் தகவல்களை, அவர்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் தருவதில்லை” என கூகுள் நிறுவனத்தின் துணைத்தலைவர் டேவிட் கூறியுள்ளார். புதிய AMP தொழில் நுட்பமானது, வாசகர்களுக்கு, ஒரே மாதிரியான கூடுதல் வேகத்தில் ஊடகங்களின் தகவல்களைக் கொண்டு சேர்க்கும்.
கூகுள் மேற்கொண்ட ஆய்வில், பயனாளர்கள், தாங்கள் எதிர்பார்க்கும் இணைய தளம், மூன்று விநாடிகளில் மொபைல் போன் வழியாகக் கிடைக்கவில்லை என்றால், தங்கள் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, குறிப்பிட்ட இணைய தளத்தினைப் பார்க்கும் முயற்சியையே நிறுத்தி விடுகின்றனர் என்று கண்டறிந்துள்ளனர். இது போன்ற பிரச்னைகளுக்கு AMP தொழில் நுட்பம் முற்றுப் புள்ளி வைக்கிறது. இதனால், பயனாளர்கள், தகவல் தள அமைப்பாளர்கள், இணைய தள விளம்பரதாரர்கள் எனப் பலர் பலன் அடைந்துள்ளனர்.
இந்த AMP தொழில் நுட்பம், சென்ற அக்டோபர் மாதத்தில் அறிமுகமானது. அனைவரிடமும் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. பல நிலைகளில், மொபைல் போன் பயன்பாடு, இணையப் பயன்பாட்டினை ஊக்குவிப்பதால், பலர், மொபைல் வழியே தங்களின் முதல் இணையப் பயன்பாட்டினை, அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வருவதால், இந்தத் தொழில்நுட்பம் அவர்களுக்கு முந்தைய காலத்தில் கிடைத்த, ஏமாற்றத்தினைத் தவிர்க்கிறது. 20 கோடிக்கும் மேலானவர்கள், மொபைல் போன் வழி இணையத்தைப் பயன்படுத்துவதால், 60% க்கும் மேலான பொருட்கள் விற்பனையை மொபைல் போன்களே மேற்கொள்கின்றன. பயணங்கள் சார்ந்த தேடுதல்கள், 50%க்கும் மேலாக, மொபைல் போன்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கூகுள் நிறுவனத்தின் யு- ட்யூப் தளம் கூட, அதன் பயனாளர்களில், 60% பேர் மொபைல் வழியாகத்தான் தங்கள் கருத்தினைத் தெரிவித்துள்ளனர். வேலை வாய்ப்புகள் கூட, மொபைல் போன்கள் வழியாகத்தான் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X