கோப்புகளின் தொடர் செயல்பாட்டிற்கு ஒன் ட்ரைவ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மார்
2016
00:00

க்ளவ்ட் வகை தேக்ககம் தருவதில் மைக்ரோசாப்ட், 2007 முதல் தன் 'ஒன் ட்ரைவ்' வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. முதலில் இந்த வசதி Windows Live Folders என அழைக்கப்பட்டது. தற்போது ஒன் ட்ரைவ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. பயனாளர்களிடம் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற க்ளவ்ட் ஸ்டோரேஜ் சாதனமாகவும் பெயர் பெற்றுள்ளது.
அண்மையில், இதன் கட்டணமில்லா தேக்கக அளவு, 15 ஜி.பி. என்ற அளவிலிருந்து 5 ஜி.பி. ஆகக் குறைக்கப்பட்டபோது, தன் வாடிக்கையாளர்களிடமிருந்து, தொடர்ந்து கண்டனக் கணைகளைப் பெற்றது. தன் செயல்பாடு சரியல்ல என்று உணர்ந்த மைக்ரோசாப்ட், மீண்டும் தனது வாடிக்கையாளர்கள், அவர்கள் விருப்பப்பட்டால், பழைய படி, 15 ஜி.பி. அளவு தேக்கக இடத்தைப் பெறலாம் என்று அறிவித்தது.
ஒன் ட்ரைவ் குறித்த அனைத்து எதிர்ப்பு காற்றும் அடித்து ஓய்ந்து தற்போது, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதனை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த ஒன் ட்ரைவ் க்ளவ்ட் சேவையைப் பயன்படுத்துவது குறித்த சில குறிப்புகளை இங்கு காணலாம்.
முதலில் 'ஒன் ட்ரைவ்' என்பது என்ன? மற்றும் அது என்னவெல்லாம் இல்லை? என்பது குறித்து தெளிவினைப் பெறுவோம். ஒன் ட்ரைவ் என்பது, நம் பைல்களின் பேக் அப் பைல்கள் பதிந்து வைக்கப்படும் இடம் இல்லை. Backup என்று சொல்கையில், அதன் மூல கோப்புகள் தொடர்ந்து தினந்தோறும் பயன்படுத்தப்படும். அவற்றைப் பயன்படுத்தி முடித்த பின்னர், இரண்டாவதான இன்னொரு மீடியாவில் நாம் அதனைப் பதிவு செய்து கொள்கிறோம். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் ஒரிஜினல் பைலை அழித்துவிட்டால், அதனை மீண்டும் இந்த பேக் அப் மீடியாவிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், 'ஒன் ட்ரைவ்' என்பது, பைல்களை ஒருங்கிணைத்து ஒருமிக்கச் செய்திடும் ஒரு வசதிக்கான இடம் ஆகும். அதாவது, ஒன் ட்ரைவ் பைல் கட்டமைப்பில், ஏதேனும் ஒரு சாதனத்தில், பைலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், மற்ற இடத்தில் உள்ள பைலிலும் அதே மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். அதிர்ஷ்டவசமாக, இணையத்தில் கிடைக்கும் 'ஒன் ட்ரைவ்' தளத்தில், Undo செயல்பாடும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாம் இழந்த பைலை மீட்டுக் கொள்ளலாம். ஆனால், இந்த மீட்டெடுக்கும் வசதி, நாம் பைல்களை அழித்தால் மட்டுமே இயக்கப்பட்டுக் கிடைக்கும்.
2012 ஆம் ஆண்டு முதல், ஒன் ட்ரைவ் தளத்தில், Recycle Bin என்னும் அழிக்கப்பட்ட பைல்கள் தங்குமிட வசதியும் தரப்பட்டது. இதனை, எந்த சாதனத்தின் வழியாகவும், ஒன் ட்ரைவ் தளம் சென்று பெறலாம். ஒன் ட்ரைவ் ரீ சைக்கில் பின் தொட்டிக்கு அனுப்பப்பட்ட பைல்கள் குறைந்தது 3 நாட்கள் அங்கு வைக்கப்படும். அதுவரை, இந்த பைல்களுக்கான இடம், உங்களுக்கென ஒதுக்கப்பட்ட இட அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
ஒன் ட்ரைவில் உள்ள பைல்களை, உங்களுக்கென ஒதுக்கப்பட்ட அளவிற்கு மேலாக, 10% அளவினைத் தாண்டும் வகையில் நீங்கள் அழித்தால், ஒன் ட்ரைவ், தொடக்கத்தில் உள்ள அழிக்கப்பட்ட பைல்களை, அதன் ரீசைக்கிள் பின் தொட்டியிலிருந்து நீக்கிவிடும். ஆனால், அழிக்கப்பட்டு 30 நாட்களுக்குப் பின், பைல்கள் நிரந்தரமாக அழிக்கப்படும்.
அண்மையில், நான் என்னுடைய ஒன் ட்ரைவ் தேக்ககத்தில் உள்ள ரீ சைக்கிள் பின் கொண்டிருந்த அனைத்து அழிக்கப்பட்ட பைல்களையும் நீக்கினேன். மொத்தம், 5,458 பைல்கள் இருந்தன. அப்படியானால், நமக்கு எவ்வளவு தேக்ககம் மற்றும் அழித்த பைல் தொட்டி இடம் உள்ளது என நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அவசர காலத்தில், இந்த ரீசைக்கிள் பின் நமக்கு உதவிக்கு வந்தாலும், இது நம்முடைய பேக் அப் பைல்களை மீண்டும் தருவதில்லை. இதனாலேயே, ஒன் ட்ரைவ் தேக்ககத்தினை, ஹோம் பெர்சனல் கம்ப்யூட்டர்களுடன் இணைத்துப் பயன்படுத்தி வருகிறேன்.
விண்டோஸ் இயக்கத்தில் நமக்குத் தரப்படும் special folders கொண்டிருக்கும் ஒரு வசதி நமக்கு, Documents, Pictures, Video ஆகியவற்றிற்கான ஸ்டோரேஜ் இடத்தினை நாமே தேர்ந்தெடுக்கும் சலுகையை அளிக்கிறது. இதன் மூலம் நாம் பயன்படுத்தும் சாதனத்தில், அல்லது சாதனம் இணைந்த நெட்வொர்க் இணைப்பில், எந்த இடத்தையும் ஸ்டோரேஜ் இடமாக மேற்கொள்ளலாம். இதனால், நீங்கள் ஒன் ட்ரைவினைப் பயன்படுத்தினால், அது உங்கள் சாதனத்தில் (கம்ப்யூட்டரில்) லோக்கல் போல்டர் அமைப்பில் இடம்கொள்கிறது. அத்துடன், நீங்கள் தேர்ந்தெடுத்து அமைக்கும் போல்டர்கள், இதில் ஒருங்கிணைத்து அமைக்கப்படுகிறது.
எடுத்துக் காட்டாக, Documents ஒரு ஸ்பெஷல் போல்டராகும். இதே போன்ற, இதற்கு இணையான ஒன் ட்ரைவ் போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் கோப்புகளை அங்கு ஒருங்கிணைக்கச் செய்திடும் வகையில் அமைக்கலாம். இந்த அமைப்பு, ஒன் ட்ரைவுடன் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களிலும் இயக்கப்பட்டு, கோப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
Pictures, Videos போன்ற ஸ்பெஷல் போல்டர்களுக்கான தேக்ககத்திற்கு, நாம் ஒன் ட்ரைவின் உதவியை நாடாமல், வேறு ஒரு பேக் அப் போல்டரில் அமைத்துக் கொள்ளலாம். நம் பைல்களைத் தொடர்ந்து அணுகி, செயல்படுத்தி, தேக்ககத்தில் பாதுகாப்பாக வைப்பதற்கான வசதியை நமக்கு ஒன் ட்ரைவ் தருகிறது. நம்பிக்கையுடன் நாம் பயன்படுத்தும் வசதி கொண்ட ஒரு சாதனமாக ஒன் ட்ரைவ் இயங்குகிறது. கோப்புகளைப் பொறுத்தவரை, தொடர் செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X