பேசுவதைக் கேட்டு கூகுள் எழுதிக் கொள்ளும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மார்
2016
00:00

கூகுள் நிறுவனம் புதியதாக ஓர் அதிசய வசதியைத் தன் ”கூகுள் டாக்ஸ்” (Google Docs) செயலியில் தந்துள்ளது. இந்த செயலியை இயக்கி, நன்றாக இணைக்கப்பட்ட மைக் வழியாகப் பேசினால், கூகுள் டாக்ஸ் புரோகிராம், அதனை டெக்ஸ்ட்டாக அமைத்துக் கொள்கிறது. உலகின் பல மொழிகளில் இது சென்ற பிப்ரவரி 24 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவைப் பொறுத்த வரை இந்த வசதியினை, கூகுள் இந்தியில் மட்டும் தந்துள்ளது. குரல் வழி பேசி, டைப் செய்து, அந்த டாகுமெண்ட்டினை எடிட் மற்றும் பார்மட் செய்திடும் வசதி தற்போது கிடைக்கிறது.
கூகுள் டாக்ஸ் செயலியில், இந்த வசதியினைப் பெற்று பயன்படுத்த, திரையின் மேலாக உள்ள "Tools" டேப் மீது கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் கீழ்விரி மெனுவில் உள்ள "Voice typing..." என்பதில் கிளிக் செய்திடவும். அப்போது, கூகுள் டாக்ஸ், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மைக்ரோபோனைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். அப்போது, "Allow" டேப்பில் கிளிக் செய்திடவும். உடன், அனைத்தும் செட்டிங்ஸ் மூலம் அமைக்கப்படும். முடித்த பின்னர், பாப் அப் ஆகி வரும் மைக்ரோபோன் ஐகானில் கிளிக் செய்து, நீங்கள் டைப் செய்திட வேண்டிய டெக்ஸ்ட்டைப் “பேசலாம்”. கூகுள் உங்கள் பேச்சினைப் புரிந்து கொண்டு, அதனை டெக்ஸ்ட்டாக மாற்றிப் பதிந்திடும். நீங்கள் பேசி, டெக்ஸ்ட் பதிக்கப்படுகையில், மைக் ஐகான் சிகப்பாக மாறும்.
மைக் உங்களின் குரலைப் புரிந்து கொண்டு செயல்படுகையில், நீங்கள் தொடர்ந்து பல கட்டளைகளைப் பயன்படுத்தலாம். அவற்றில் சில கட்டளைகளை இங்கு பார்க்கலாம்.
1. Voice typing: குரல் மூலம் டெக்ஸ்ட் டைப் செய்திடலாம். தொடர்ந்து, டெக்ஸ்ட்டில், நிறுத்தல் குறிகளை (periods, commas, question marks, or create a new paragraph) இடலாம். புதிய பாராவினை அமைக்கலாம்.
2. Select text: குறிப்பிட்ட ஒரு சொல்லை, சொல் தொகுதியை அல்லது எழுத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு வரி முழுவதும் அல்லது வாக்கியம் மற்றும் பாராவினைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்ததை ரத்து செய்திடலாம்.
3. Format Text: டெக்ஸ்ட் வரிகளை இடது, நடுவில் மற்றும் வலது என அமைக்கலாம். சொற்களை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டு, குறுக்காகக் கோடிட்டு எனப் பலவகை பார்மட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம்.
4. புல்லட் வகை பட்டியல், எண்களுடன் பட்டியல் எனவும் அமைக்கலாம். இவை அமைத்த பின்னர், தேவை இல்லை எனில் நீக்கலாம்.
5. Editing a Text: அமைத்த டெக்ஸ்ட்டை எடிட் செய்திடும் பணியையும், மைக் மூலம் பேசி மேற்கொள்ளலாம். Cut, copy, or paste மற்றும் Insert, update, or delete a table of contents ஆகிய பணிகளையும் மேற்கொள்ளலாம். புதியதாக டேபிள் ஒன்றையும் அமைக்கலாம்.
6. Moving around your document: நாம் அமைத்த டாகுமெண்ட் தொடக்கத்திற்கு அல்லது முடிவிற்குச் செல்லலாம். இவ்வாறு எடிட் செய்த பின்னர், மீண்டும் ஒலி மூலம் டெக்ஸ்ட் டைப் செய்திட, டாகுமெண்ட் இறுதியில் சென்று, "resume" எனச் சொன்னால் போதும்.
7. ஹெல்ப் விண்டோவினையும் பேசியே திறக்கலாம். அப்போது, எந்த உதவிக் குறிப்புகள், ஒலி அடிப்படையில் கிடைக்கும் என்பதற்கான பட்டியல் கிடைக்கும்.
8. கர்சரை எங்கு வைத்து செயல்பட வேண்டும் என்பதையும், கர்சர் அந்த இடத்திற்குச் சென்ற பிறகு செயல்படுவதையும் பேசியே அமைக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X