கூகுள் நீக்கிய ஆண்ட்ராய்ட் புரோகிராம்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மார்
2016
00:00

கூகுள் ப்ளே ஸ்டோரில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் கூடுதல் வசதிகளைத் தரக்கூடிய பல புரோகிராம்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. இவை, கூகுள் ஆண்ட்ராய்ட் பிரிவின் அனுமதி பெற்றே, கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம் பெற்றாலும், பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், பயனாளர்களின் போன்களைத் தங்கள் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதாகவும், தீங்கு விளைவிப்பதாகவும் மற்றும் பெர்சனல் தகவல்களைத் திருடுபவையாகவும் உள்ளன. இது பற்றி தெரியவருகையில், கூகுள் அவற்றை ஆய்வு செய்து, தன் கூகுள் ப்ளே ஸ்டோர் தளத்திலிருந்து நீக்குகிறது.
அண்மையில் இது போல 13 ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் நீக்கப்பட்டன. ஸ்மார்ட் போன்கள் இயக்கப் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் கிறிஸ், இந்த புரோகிராம்கள் பாதுகாப்பற்றவை. திருட்டுத்தனமாக செயல்படுகின்றன என்று கண்டறிந்து, கூகுள் நிறுவனத்திற்கு அறிவித்தார்.
இந்த புரோகிராம்கள், பயனாளர்களுக்குத் தெரியாமல், அவர்களின் ஆண்ட்ராய்ட் போனில் பல புரோகிராம்களைத் தேவையற்ற வகையில் பதிக்கின்றன. இந்த போன்கள் பிரச்னைக்குள்ளாகும்போது, அவற்றை “தயாரித்து வெளியிட்ட நிலைக்கு” மீண்டும் அமைத்தாலும் (Factory Default), இந்த புரோகிராம்கள் அழியாமல் போனில் தங்குகின்றன.
அண்மையில், கூகுள் நிறுவனம் நீக்கிய புரோகிராம்கள் பின்வருமாறு: Honeycomb, Just Fire, Cake Blast, Crazy Block, Drag Box, Tiny Puzzle, Jump Planet, Ninja Hook, Piggy Jump, Eat Bubble, Hit Planet, Cake Tower, மற்றும் Crazy Jelly.
பயனாளர்கள் யாரேனும், இவற்றைத் தங்களின் போனில் பதிந்திருந்தால், உடனே நீக்கிவிடவும். அத்துடன், போனைத் தயாரித்து அளித்த நிறுவனத்தின், ரீட் ஒன்லி மெமரியையும், புதிதாக அமைக்க வேண்டும்.
சென்ற ஆண்டு, Shedun என்ற பெயர் கொண்ட அப்ளிகேஷன் புரோகிராம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டது. பயனாளர்களுக்குத் தெரியாமல், இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களை போனில் பதிந்தது தெரியவந்தது. இதே போல பாதிக்கப்பட்ட மற்ற மொபைல் போன்களுடன் இந்த புரோகிராம்கள் தகவல்களைப் பகிர்ந்து வந்ததும் கண்டறியப்பட்டது. பின்னர், இந்த புரோகிராமும், அது பதிந்த மற்ற புரோகிராம்களும் நீக்கப்பட்டன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X