உலக மொபைல் கருத்தரங்கு 2016
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மார்
2016
00:00

இந்த ஆண்டு, பார்சிலோனா நகரில் நடைபெற்ற “உலக மொபைல் கருத்தரங்கு”, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நிறையவே தீனி போட்டுள்ளது. மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், தங்கள் தயாரிப்புகள் அனைத்திலும், ஏதேனும் ஒரு புதுமை மற்றும் வசதிகளைக் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். அவை குறித்து இங்கு காணலாம்.
இந்த ஆண்டு அனைவரின் உரையாடல்களிலும் காணப்பட்டது சாம்சங் மற்றும் எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களே. சாம்சங் காலக்ஸி எஸ்7 மற்றும் எஸ் 7 எட்ஜ் ஆகியன சாம்சங் நிறுவனத்தின் புகழையும், எல்.ஜி. ஜி5 மாடுலர் ஸ்மார்ட் போன், எல்.ஜி. நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லமையையும் பறை சாற்றின. சாம்சங் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, தன் புதிய ஸ்மார்ட் போன்களை, தண்ணீர் சிறிது கூட புகாமல் பாதுகாப்பு தரும் வகையில் வடிவமைத்துக் காட்டியது. எல்.ஜி. நிறுவனம், கூகுள் கூட தோற்றுப் போன ஒரு திட்டத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டு, உலகின் புதிய மாடுலர் ஸ்மார்ட் போனை, ஜி5 என்ற பெயரில் கொண்டு வந்தது. இந்த இரு நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட் போன்கள் முதலில் அமெரிக்காவிலும், தொடர்ந்து பிற நாடுகளிலும் விற்பனைக்கு வரும்.
எச்.டி.சி. மற்றும் சோனி நிறுவனங்கள், மொபைல் போன் வரிசையில், மத்தியநிலையில் சில புதிய போன்களைக் காட்டின. எச்.டி.சி. நிறுவனம் வெளியிட்ட One X9 மாடல் போன், One M9 மற்றும் A9 ஸ்மார்ட் போன்களின் மிகச் சிறந்த அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருந்தன. சோனி நிறுவனம் தன் Xperia X வரிசை போன்களில், தன் தொழில் நுட்ப வல்லமை அனைத்தையும் ஈடுபடுத்தி, அவற்றை வடிவமைத்திருந்தன. இவை சோனி போன்களுக்கு ஒரு புதிய தர வரையறையை உருவாக்கியுள்ளன.
அல்காடெல் நிறுவனம் தன் Idol வரிசை போன்களில், மாபெறும் மாற்றத்தினைக் கொண்டு வந்திருந்தது. சென்ற ஆண்டு தன் போன்களில் கொடுத்த பிளாஸ்டிக் ஷெல்களை நீக்கிவிட்டு, உலோகம் மற்றும் கண்ணாடியிலான ஷெல்களைக் கொடுத்துள்ளது. அல்கா டெல் நிறுவனத்தின் மொபைல் ஸ்மார்ட் போன், ஏறத்தாழ சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி நோட் 5 போல இருந்தாலும், அதன் விலை, சாம்சங் நிறுவனத்தின் போனில் பாதியளவு தான் உள்ளது.
ஸியோமி நிறுவனமும், தன் புதிய போனின் அம்சங்களாக, காலக்ஸி நோட் 5 போனில் தரப்பட்டுள்ள சில அம்சங்களைக் கொண்டு Mi 5 போனை வடிவமைத்திருந்தது. இந்த ஆண்டில், ஸியோமி நிறுவனத்தின் புகழ் பாடும் சிறந்த போனாக இது மக்கள் மனதில் இடம் பெறலாம். உலக மொபைல் கருத்தரங்கில், மிக அழகான தோற்றமுடைய போனாக இது கருதப்பட்டது. விரைவில் இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பானாசோனிக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்கள், தளங்களில் இறங்கி வேலை பார்ப்பவர்களை இலக்காகக் கொண்டு அமைக்கப்பட்டவையாக உள்ளன. இந்நிறுவனத்தின் ToughPad போன்கள், பானாசோனிக் லேப்டாப், டேப்ளட் பி.சி. ஆகியவற்றின் கடினமான தன்மையைக் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த போன்களில் பார்கோட் ஸ்கேனர் இணைக்கப்பட்டிருப்பது ஒரு புதிய அம்சமாகும்.
CAT நிறுவனம் இந்த ஆண்டில், முற்றிலும் புதிய மற்றும் எதிர்பாராத ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. இதன் CAT S60 மொபைல் போன், உலகிலேயே முதன் முதலாக தெர்மல் கேமரா இணைந்த ஸ்மார்ட் போனாக வெளிவந்துள்ளது.
எச்.பி. நிறுவனம், தன்னுடைய Elite x3 ஸ்மார்ட் போன் மூலம் அனைவரையும் அசத்தியது. இது ஒரு விண்டோஸ் 10 போன் மற்றும் டேப்ளட் பி.சி.ஆகும். அல்லது இதனை முழுமையான விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கலாம். இந்த மாடல் போன், வருங்காலத்தில், ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி. மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் என்ற மூன்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்திடும் என எதிர்பார்க்கலாம்.
இந்தக் கருத்தரங்கில், அனைவரின் கவனத்தைக் கவர்ந்த போன்களில், கீழ்க்குறிப்பிடப்படும் பத்து போன்கள் முதல் இடங்களைப் பெற்றிருந்தன. அவை: சாம்சங் காலக்ஸி எஸ்7, காலக்ஸி எஸ்7 எட்ஜ், எல்.ஜி. ஜி5, சோனி எக்ஸ் பெர்பார்மன்ஸ், எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏ, எச்.டி.சி. நிறுவனத்தின் ஒன் எக்ஸ்9, அல்காடெல் நிறுவனத்தின் ஐடல் 4 எஸ், ஸியோமி எம் ஐ 5, பானாசோனிக் டப் பேட் போன் மற்றும் கேட் எஸ் 60.
புதிய போன்களாக அறிமுகம் செய்யப்பட்டவை அனைத்திலும் காட்டப்பட்ட தொழில் நுட்பங்கள், யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தன. இது மொபைல் போன் தயாரிப்பில் ஒரு திருப்புமுனை என அங்கு வந்திருந்த அனைவரும் பாராட்டிச் சென்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X