ஏறத்தாழ ஏழு கோடி பேர் பயன்படுத்தும் பேஸ்புக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மார்
2016
00:00

இந்தியாவில், தினந்தோறும் தொடர்ந்து (DAU-Daily Active Users) பேஸ்புக் சமூக வலைத்தளத்தினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஏழு கோடியைத் தொட்டுள்ளது. சென்ற மாதம் இந்த எண்ணிக்கை 6.9கோடி என அறிவிக்கப்பட்டது. இவர்களில், தங்கள் மொபைல் போன்களில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 6 கோடியே 40 லட்சம் ஆகும். இதுவே மாதந்தோறும் உறுதியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், அது 14.2 கோடி எனத் தெரிய வந்துள்ளது. இவர்களில், 13.3 கோடி பேர் மொபைல் போன் வழியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பேஸ்புக் தளத்தில், விளம்பரம் செய்திடும் வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் அதிகமாகும். இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 50% கூடுதலாகும். இந்த நிறுவனங்களில், 70% நிறுவனங்கள், அமெரிக்கா அல்லாத நாடுகளைச் சேர்ந்தவை.
சிறிய நிறுவனங்களே, பேஸ்புக் தளத்தினை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றன. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருக்கின்ற தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தங்களைப் பற்றிக் கூற இயலுகிறதே என்ற வசதியே இதற்குக் காரணம் என, பேஸ்புக் நிர்வாகி கருத்து தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் தளத்தில் இயங்கும் ஒரு கோடி பேருக்கும் மேலாக, ஏதாவது ஒரு வர்த்தக நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளனர். இந்தியாவில், பேஸ்புக் பயன்படுத்துபவர்களில், 57% பேர், ஒரு சிறிய அளவிலான நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளனர். இதற்கெனவே, பேஸ்புக் 'Your Business Story' என்ற ஒரு டூலை வெளியிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் அல்லது தாங்கள் அளிக்கும் சேவைகள் குறித்து, உலக மக்களுக்குக் காட்ட முடிகிறது. தங்கள் பக்கங்களிலிருந்து போட்டோக்களை, இசையை இணைத்து அப்லோட் செய்திடும் வசதி கிடைக்கிறது.
ஒரு கோடி மக்களுக்கு மேல், நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதால், எத்தகைய நிறுவனங்கள் இந்த வகையில் முன்னணியில் உள்ளன என்று பேஸ்புக் அறிவித்துள்ளது. சேவை நிறுவனங்கள், உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் முற்றிலுமாக இணையதள வர்த்தக நிறுவனங்களாக இயங்குபவை முதலிடத்தில் உள்ளன. இந்த வசதியினை வர்த்தகர்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், பேஸ்புக் ”சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான இந்திய அமைப்பு” (SME (small and medium enterprises)) ஒன்றினை அமைத்துள்ளது. இந்த அமைப்பு வரும் மாதங்களில் கூடி, வர்த்தக செயல்பாடுகளுக்கான தீர்வுகள், வர்த்தக வழிமுறைகள், புதிய வெற்றி இலக்குகள் மற்றும், இத்தகைய வர்த்தக நடைமுறையில் சந்திக்கும் சவால்கள் ஆகியன குறித்து ஆய்வு செய்திட இருப்பதாக, பேஸ்புக் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
18-மார்ச்-201605:27:37 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> naan sila ஆண்டுகலாவே facebook லே இருக்கேன். ஆனால் எனக்கு கடந்த ஒருவாரமா இதுலே போட்டோக்களே வரதே இல்லே. என் பொட்டோ கூட வர்லே என் பிரெண்ட்ஸ் சொல்றாங்க. நான் ஷேர் பண்ணதெல்லாம் அவா முகனூலில் வர்ரதே இல்லை என்று. எதனால் ஏன் எதற்கு இந்த ப்ராப்ளம் நு தெரிலே . ப்ளீஸ் இதற்கு என்ன செய்யணும் நு யாராவது சொல்லுங்கேளேன். நன்றியுடன் skv
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X