பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மார்
2016
00:00

மொபைல் மாடுலர் போன் குறித்த கட்டுரை பல விந்தையான தகவல்களைத் தந்துள்ளது. மொபைல் போனில், சில செயல்களை மேற்கொள்ளும் பகுதிகள் கெட்டுப் போய், அவற்றைப் பழுது பார்க்கும் மையங்களும் 'இயலாது' எனக் கைவிடப்படுவதனால், பல நல்ல போன்களை குப்பைக்கு அனுப்பி வருகிறோம். இது போல மாடுலர் போன் வந்தால், நமக்குப் பிரச்னையே இல்லை. மிகத் தெளிவான கட்டுரை அருமையாக விளக்கம் தந்துள்ளது. நன்றி.
பேரா. சி.நமசிவாயம், கோயம்புத்தூர்.

மாடுலர் போனை மிக அருமையாகத் தமிழாக்கம் செய்து, 'கட்டகத் தொலைபேசி' என எழுதியுள்ளீர்கள். சரியான சொல் அது. சில்களைப் பொறுத்தி ஒரு மொபைல் போன் உருவாகிறது. நமக்கு வேண்டிய செயலிகளை, தேவைப்படும் திறனுடன் வாங்கிப் பொறுத்திக் கொள்ளலாம். அறிவியல் நம்மை எங்கோ அழைத்துச் செல்கிறது. இந்தியாவில் இது விற்பனைக்கு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம். தகவல்களுக்கு நன்றி.
முனைவர் இரா. தமிழரசன், மதுரை.

கூகுள் தரும் ஏ.எம்.பி. தொழில் நுட்பம் நாம் மொபைல் போன்கள் வழியாக இணைய தளங்களைப் பார்ப்பதில் புதிய அனுபவத்தினைத் தரப்போகிறது. இதனால், கிராமப் புறங்களில், இணையத்தினை இன்னும் பயன்படுத்தாதவர்கள், ஆர்வத்துடன் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். எதிர்காலத்தில், கூகுள் தரும் அறிவியல் சாதனங்களுடன் மட்டுமே நம் வாழ்க்கை அமையும் போலத் தெரிகிறது.
எஸ். மார்ட்டின் ராஜ், இராஜபாளையம்.

ஒன் ட்ரைவினைச் செயல்படுத்துவதில் உள்ள பல சந்தேகங்கள் தெளிவாகி உள்ளன. இந்தக் கட்டுரையை எழுதியவருக்கு என் நன்றி. நம் செயல்பாடுகள் தொடர்ச்சியாக அமைய எப்படி ஒன் ட்ரைவினைப் பயன்படுத்த வேண்டும் என்பது நன்றாக விளக்கப்பட்டுள்ளது.
ஆர். ஜோதிராஜன், புதுச்சேரி.

கூகுள் டாக்ஸ் தரும் புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்த எத்தகைய மைக் தேவைப்படும் என்பதனை விளக்கி டிப்ஸ் தரவும். என்னிடம் இருந்த மைக்கினைப் பயன்படுத்தினேன். ஒரே குழப்பமாக இயங்கியது.
எஸ். வளவன், செங்கல்பட்டு.

வேர்ட் பகுதியில் அளித்துள்ள, டேபிளில் நெட்டு வரிசை கூட்டல் பயன்பாடு, இந்த வார டிப்ஸைப் படித்த பின்னரே அறிந்து கொண்டேன். இதே போல, சார்ட்டிங் எனப்படும், மதிப்பின் அடிப்படையில், அகர எழுத்துகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துவது குறித்த குறிப்புகளையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கே.எல். மோகன் ராம், விழுப்புரம்.

தகவல் தொழில் நுட்பத்தில், இனி வரக்கூடிய பெரிய அளவிலான மாற்றங்கள், மொபைல் போன்களில் தான் இருக்கும் என்பதை, உலக மொபைல் கருத்தரங்கு காட்டியுள்ளது. அதற்கேற்ப அந்த மாற்றங்களுக்கு மாறிக் கொள்ள நாமும் தயாராய் இருக்க வேண்டும்.
மக்களை அதற்கென உயர்த்துவதில், கம்ப்யூட்டர் மலர் போன்ற இதழ்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
ஆர். எஸ். நசீர் அகமது, சென்னை.

'தெர்மல் கேமரா போன்' குறித்த கட்டுரை மிகவும் பயனுள்ள வகையில் பல தகவல்களைத் தருவதாய் உள்ளது. நீருக்குள் 15 அடி ஆழம் வரை சென்று இதனைப் பயன்படுத்தலாம் என்பது வியப்புக்குரிய செய்தியே. இரவின் இருட்டு, தூசிப் புயலின் நடுவே, மழை நீரின் ஊடாக என அனைத்து சூழ்நிலைகளிலும் படம் எடுக்கும் கேமராவினை, மொபைல் போன் ஒன்றில் இணைத்துத் தருவது, நம் தொழில் நுட்பத்தின் வெற்றியைக் காட்டுகிறது. அறிவியலில் எதுவும் சாத்தியமே என்பது உறுதியாகிறது.
பேரா.டாக்டர் எம். அருணாச்சலம், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X