மெட்ரோ நகரங்களில் 4ஜி அலை வீசுகிறது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மார்
2016
00:00

அமெரிக்காவில் இயங்கும் ஆய்வு நிறுவனமான ஐ.டி.சி. (IDC), இந்தியாவில் சென்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான ஸ்மார்ட் போன் விற்பனை குறித்த தன் முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய மாநகரங்களில், 4ஜி அலைவரிசையில் இயங்கக் கூடிய ஸ்மார்ட் போன்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இணைய தளங்களில் வாங்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில், 45% போன்கள், 4ஜி அலைவரிசைத் திறன் கொண்டவையாக இருந்தன. இது ஒரு புதிய சாதனையாகும். ஆனால், கிராமப்புற மக்கள் இன்னும் 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசை போன்களையே அதிகம் வாங்குகின்றனர். நகரங்களில் வாழும் மக்கள், புதிய தொழில் நுட்பத்துடன் எந்த போன் அறிமுகமானாலும், அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர் என்பதுவும் தெரிய வந்துள்ளது.
நகரங்களில் ஸ்மார்ட் போன் வாங்கியவர்களில் 40.7% பேர் ஆப்பிள் ஐபோன் அல்லது சாம்சங் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்களையே வாங்கியிருக்கின்றனர். ஐபோனில் மேல், நகரத்துப் பயனாளர்களுக்கு, அண்மையில் மோகம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே, 30 இந்திய நகரங்களில், ஸியோமியின் போன் விற்பனையைக் காட்டிலும், ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை கூடுதலாக, ஆறாவது இடத்தில் இருந்தது. மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில், இந்த 30 நகரங்கள் 51% விற்பனையைக் கொண்டிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், மும்பையைப் பின்னுக்குத் தள்ளி, டில்லி, ஸ்மார்ட் போன் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில், முதல் இடத்தைப் பிடித்துள்ளது சாம்சங் நிறுவனப் போன்களே. அடுத்த இடங்களில், மைக்ரோமேக்ஸ், லெனோவா மற்றும் மோட்டாரோலா ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைக் கொண்டிருந்தன.
இணைய தளங்கள் வழியாக ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்ததில், மாநகரங்களே முதல் இடத்தைப் பிடித்துள்ளன. விற்பனையான 10 ஸ்மார்ட் போன்களில், 6 போன்கள் இணைய தளங்கள் மூலம் விற்பனையாயின. இவற்றில், மொத்தத்தில், 45% போன்கள் 4ஜி அலைவரிசைத் திறன் கொண்டவையாக இருந்தன. இவற்றில், கூடுதல் விலையுள்ள போன்கள் விற்பனையில், ஆப்பிள் முதல் இடத்தைப் பிடித்தது. இவற்றின் பங்களிப்பு 42.1% ஆகும்.
மற்ற நகரங்களில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் உள்ளவற்றில், 3ஜி போன்களுக்கான ஆர்வம் அதிகமாக இருந்ததைக் காண முடிகிறது. இந்நிலைகளில் உள்ள 25 நகரங்களில், மொத்த ஸ்மார்ட் போன்களில் 21.3% பங்கினைக் கொண்டிருந்தன. மொத்த விற்பனையில், 66% ஸ்மார்ட் போன்களின் விலை ரூ. 6,500க்கும் குறைவாகவே இருந்தன.
4ஜி அலைவரிசை ஸ்மார்ட் போன்களுக்குக் கிடைத்திருக்கும் ஆர்வத்தைப் பார்க்கையில், விரைவில், இந்தியாவில், 3ஜி போன் விற்பனையை இது மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவின் ஏகோபித்த வரவேற்பை இந்த 4ஜி ஸ்மார்ட் போன்கள் பெற்றுவிடும். 4ஜி ஸ்மார்ட் போன்களில் ஏற்பட்ட ஆர்வமே, லெனோவா, ஸியோமி மற்றும் மோட்டாரோலா ஆகிய நிறுவனங்களின் விற்பனைச் சந்தைப் பங்கினை அதிகரிக்கச் செய்தது.
ஆப்பிள் தந்திரமாக தன் ஐபோன் 5 எஸ், 6 மற்றும் 6 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களின் விலையைக் குறைத்ததனாலேயே, அது ஸியோமி நிறுவனத்தின் விற்பனையைப் பின்னுக்குத் தள்ளித் தான் முந்திவிட முடிந்தது. சென்ற ஆண்டில், ஸியோமி, ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையை 4ஜி வகை போன்களில் முந்தியது பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அந்த சூழ்நிலையை உணர்ந்து, ஆப்பிள் தன் போன்களின் விலையைக் குறைத்து, ஸியோமியைப் பின்னுக்குத் தள்ளியது.
மைக்ரோமேக்ஸ் தொடர்ந்து, மோட்டரோலா, லெனோவா மற்றும் இண்டெக்ஸ் நிறுவனங்களைக் காட்டிலும் அதிக ஸ்மார்ட் போன்களை விற்பனை செயதது. இதற்கான முதன்மைக் காரணம், அதன் ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.6,500க்குக் குறைவாக இருந்ததுதான்.
இந்தியாவின் அனைத்து நகரங்களிலும், 4ஜி சேவை அறிமுகமாகி வருவதனால், மக்கள் தொடர்ந்து அச்சேவையைப் பயன்படுத்தும் ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டு வருகின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன் விற்பனையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2015ல் மட்டும், இந்த வகை போன்கள், 10 கோடிக்கும் மேலாக சந்தையில் இறக்கிவிடப்பட்டன. சரியாகச் சொல்வதென்றால், இவற்றின் எண்ணிக்கை 10 கோடியே 36 லட்சமாக இருந்தது. இது 2014 ஆம் ஆண்டில் விற்பனையான ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 28.8% கூடுதலாகும். இது 2016ல், 40% கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navin - Chennai,இந்தியா
14-மார்ச்-201607:56:47 IST Report Abuse
navin யாரும் 4ஜி மொபைல் வாங்கனும்னு இந்த மொபைலை வாங்கல. லேட்டஸ்ட் மொபைல் வாங்கனும்னு வாங்கும் போது அதுல 4ஜி இருக்கு . அவ்ளோதான் . 4ஜி மேல மக்களுக்கு அவ்ளோ ஆர்வம் எல்லாம் இல்லை . 3ஜிக்கு மொபைல் நெட்வொர்க்குகள் போடற விலையே விண்ணை முட்டுது. எல்லாருமே இப்போது broadband பக்கம் திரும்பிடாங்க. வெளியே இருக்கும் போது இன்டர்நெட் தேவை அதற்கு மொபைல் நெட் உபயோகிக்க வேண்டியதா இருக்கு . இன்னொன்று எல்லாருக்கும் broadband இணைப்பு கிடைப்பதில்லை . அவர்களுக்கு வேறு வழி இல்லை . விதியை நொந்துகொண்டு 3ஜி recharge பண்ணி தொலைக்கிறாங்க. அவர்கள் இருக்கும் ஏரியாவிற்கு Broadband இணைப்பு வந்தால் அவங்களும் கண்டிப்பா Broadband இணைப்புக்கு தான் மாறுவார்கள் . அனைவருமே மொபைல் internet உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் . அப்போது தான் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு பயம் வரும் . விலையை குறைப்பார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X