ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 டிச
2010
00:00

டேப்ளட் பிசி வருகை தகவல் தொழில் நுட்பத்தில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணக்கூடும் என்பதற்கான அனைத்து அம்சங்களையும் அழகாகப் பட்டியலிட்டுள்ளீர்கள். மிகத் தெளிவாக, வாசகர்களாகிய எங்களுக்கு அதில் நாம் பார்க்க வேண்டிய விஷயங்களைக் கூறியுள்ளீர்கள். தொடர்ந்து இதன் பயன்பாடுகளை விவரமாகத் தரவும். அப்போதுதான் விலை குறையும் நேரம், இதனை வாங்கிப் பயன்படுத்தலாம்.
–கே. தீபா சுரேஷ், கோவை.
பிரவுசரிலேயே கால்குலேட்டர் அருமை யான வசதி. அதுவும் அனைத்து வசதி களையும் தரும் சயின்டிபிக் கால்கு லேட்டராக அமைந்திருப்பது, பல தேவை களை நிறைவேற்றுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்புகளில் இது போன்ற அதிகப் பயனுள்ளவற்றைப் பட்டியலிடவும்.
–சா. முத்தமிழ் அரசு, சிவகாசி.
எக்ஸெல் ஆக்டிவ் செல் டிப்ஸ் பல நாள் பிரச்னையைத் தீர்த்தது. இல்லை என்றால், மேலும் கீழும் சென்று, ஸ்ப்ரெட்ஷீட்டில் நாம் எங்கு இருக்கிறோம் என்று அலைய வேண்டும்.
–தி.கண்ணபிரான், செங்கல்பட்டு.
இறுதியாகப் பார்த்த வெப்சைட் திறக்க நீங்கள் கொடுத்த ஐடியா நன்றாக வேலை செய்கிறது. இப்படித்தான் நம் பிரவுசர்கள் வேலை செய்திட வேண்டும். அப்போதுதான் இன்டர்நெட் உலாவில் ஒரு தொடர்ச்சி இருக்கும். டிப்ஸுக்கு நன்றி.
–சி.சம்பந்த மூர்த்தி, திண்டுக்கல்.
எல்லாரும் இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவது மொபைல் போன் வாங்குகிறோம்.  கட்டாயமாக அதில் அனைத்து மல்ட்டிமீடியா, 3ஜி வசதிகள் தேவை இல்லை. எனவே ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையிலான போன்கள் குறித்த தகவல்கள் அளித்தால் நன்றாக இருக்கும்.
–சி.க. முருகவேல், திருவண்ணாமலை.
7ஜிபிக்கு மேல் இடம் தரும் ஜிமெயில் இன்பாக்ஸிலும் தேவையற்றதை நீக்குவது நல்லது என்ற செய்தியையும் அதற்கான வழிகளையும் காட்டியுள்ளது இந்த வார சர்ப்ரைஸ் டிப்ஸ்.
–ஜ.சம்சுதீன், புதுச்சேரி.
ஜிமெயிலில் ஷார்ட்கட் கீகள் இயங்க மறுக்கின்றன. இதற்கான வழிகளைச் சரியாகச் சுட்டிக் காட்டவும்.
–ஆ. சிவராஜ், கோ.புதூர், மதுரை.
விண்டோஸ் 7 பரவத் தொடங்கினாலும், எப்படியும் விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் பல ஆண்டுகள் பயன்படுத்தப்படும். மைக்ரோசாப்ட் 2014ல் தன் உதவியை நிறுத்தினாலும், தினமலர்  வழக்கம்போல எங்களுக்கு உதவியைத் தொடர வேண்டும்.
–சி. கிருத்திகா, மேலூர்.
இன்னும் இரண்டு ஆண்டில் விண்டோஸ் 8 தொகுப்பு வர இருக்கிறதா? ஏன் அவ்வளவு அவசரம். விண்டோஸ் 7 இன்னும் மக்கள் மனதில் பெரும்பாலான அளவில் இடம் பிடிக்க வில்லையே! இருப்பினும் புதுமைகள் இருப்பின், நிச்சயம் விண்டோஸ் 8 வரவேற்பு கிடைக்கலாம்.
–கி. தரணிபாலன், மேட்டுப் பாளையம்.
பக்க எண்ணுக்கான பீல்டினை வேர்டில் அமைப்பது புதுமையாக இருக்கிறது. மேலும் கீழுமாக மேட்டரை இணைத்து, பக்க எண் மாறுகையில் இது நல்ல உதவியாய் இருக்கிறது.
–டி.கே. நரசிம்மன், தாம்பரம்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X