பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மார்
2016
00:00

சில நாடுகளில் இணையத் தொடர்பு மக்களுக்கான உரிமை, அதை அரசு வழங்குவது கடமை என்று சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், பலர் இன்னும் இணையம் பக்கமே வராமல் உள்ளனர் என்று அறிவது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. பல்வேறு பிரிவுகளில், இந்தப் பிரச்னையை, மிக நன்றாக அலசி ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர். அவருக்கு என் பாராட்டுதல்கள்.
ஆர். வேலாயுதம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஆண்ட்டி வைரஸ் செயலிகளின் செயல்பாட்டினை மிக அழகாக விளக்கிய கட்டுரை பயன் உள்ளதாக அமைந்துள்ளது. எளிய முறையில், இந்த செயலிகள் ஸ்கேன் செய்திட எப்படி செயல்பட வேண்டும் என்று விளக்கியது மிக அருமை. நன்றி.
எஸ். மஞ்சுளா, புதுச்சேரி.

'ட்ரூ காலர்' செயலியைப் பலர் பயன்படுத்தப் பார்த்திருக்கிறேன். ”நமக்கு எதற்கு வம்பு?” என ஒதுங்கி இருந்தேன். தங்கள் கட்டுரையப் படித்த பின்னரே, இதில் உள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பினைப் புரிந்து கொண்டு பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். மிகவும் ஆர்வமூட்டும் புரோகிராமாக உள்ளது. நமக்கு வரும் அழைப்புகளுக்கான நபர்களின் பெயர்களைத் தெளிவாகக் கூறுவது விந்தையாகவும் உள்ளது.
ராம்குமார், ராசிபுரம்.

விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிச்சயமாக அனைத்து கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்களில் கொண்டு வந்துவிடும். எப்படியும் தன் இலக்கினை எட்டிவிடும். தங்கள் கட்டுரை மிகத் தெளிவாகப் படங்களுடன் தரப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்.
என். ஜோதி பிரகாசம், செய்யாறு.

கூகுள் தனக்குக் கிடைத்துள்ள நல்ல பெயரினைக் காத்துக் கொள்ள இது போல தன் இணைய தளத்தில் பதியப்படும் அனைத்து புரோகிராம்களையும், அடிக்கடி தணிக்கை செய்து நீக்குவது, வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். தர்ட் பார்ட்டி புரோகிராம்களுக்கு தான் பொறுப்பல்ல என்று விலகுவது சரியாக இருக்காது. எனவே, மோசமான புரோகிராம்களை நீக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதே போல ஆப்பிள் நிறுவனமும் செயல்பட்டால், பல பிரச்னைகளுக்கு வழி கிடைக்கும்.
டி.எம். கார்த்திகேயன், திண்டுக்கல்.

'பேஸ்புக்' பயன்படுத்துவது தொடர்ந்து பெருகி வந்தாலும், இதில் நேரத்தைச் செலவழித்து தங்கள் பொன்னான பொழுதை வீணடிப்பவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில், கட்டுரை ஒன்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். ஜெயலஷ்மி, ரிஷிவந்தியம்.

4ஜி அலைவரிசை பயன்பாடு வெகு வேகமாக இந்தியாவில் பரவ வேண்டும். அப்போதுதான், நாம் உலக அளவில் சிறப்பான இடத்தைப் பெறுவோம். நம் பொருளாதார நிலையும் உயரும். இப்போது நகர்ப்புற அளவில் உள்ளதனை, அரசு நினைத்தால், இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தலாம்.
எஸ். பாத்திமா, கடலூர்.

பேஸ்புக் மெசஞ்சர் வழியாக வரும் வைரஸ் தொகுப்புகள் குறித்து இன்னும் விரிவாக விளக்கம் தரும் கட்டுரையத் தரவும். ஏனென்றால், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், வைரஸே வராது எனப் பலரும் தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனைத் தெளிவாக்கி, உங்கள் வாசகர்களுக்கு உதவி செய்திடவும்.
ஆ. நல்ல தம்பி,கம்பம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X