சாம்சங் காலக்ஸி எஸ் 7 மற்றும் எஸ்7 எட்ஜ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மார்
2016
00:00

இந்தியாவில், சாம்சங் நிறுவனம், அதன் சிறப்பான அண்மைக் கால வெளியீடான, சாம்சங் காலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் ஆகிய ஸ்மார்ட் போன்களை, இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது. இவற்றை வேண்டி முன்பதிவினை மார்ச் 17 வரை செய்தவர்களுக்கு, பரிசாக சாம்சங் கியர் வி.ஆர். ஹெட்செட் தரப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்7 இந்தியாவில் ரூ.48,900 மற்றும் சாம்சங் எஸ் 7 எட்ஜ் ரூ. 56,900 அதிக பட்ச விலை என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டும் 32 ஜி.பி. கொள்ளளவு கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கான விலை. 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி கொண்ட போனுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எதிர்பார்த்தபடியே, மற்ற நாடுகளில், இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்ட ப்ராசசருக்குப் பதிலாக, இந்தியாவில், சாம்சங் நிறுவனத்தின் octa-core Exynos 8890 SoC ப்ராசசர் இணைக்கப்பட்டு கிடைக்கின்றன. மற்ற நாடுகளில் விற்பனையாகும், இந்த இரண்டு மாடல் போன்களில் quad-core Qualcomm Snapdragon 820 ப்ராசசர் உள்ளது.
இந்த இரண்டு மாடல்களிலும் காணப்படும் இன்னொரு சிறப்பம்சம் இதில் தரப்பட்டுள்ள hybrid microSD ஸ்லாட். இதனை இரண்டாவது சிம்மிற்கான இடமாக அமைத்துக் கொள்ளலாம். அல்லது 200 ஜி.பி. வரை தாங்கும் மைக்ரோ எஸ்.டி. கார்டினை இணைத்துக் கொள்ளலாம்.
மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, எஸ்7 போனில் 5.1 அங்குல QHD Super Amoled டிஸ்பிளே கொண்ட திரை, 1440 x 2560 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. எட்ஜ் போனில், இது 5.5 அங்குல அளவிலான திரையாக (1440 x 2560 பிக்ஸெல் அடர்த்தி கொண்டது) உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டும் மல்ட்டி டச் வசதியுடன் தரப்பட்டுள்ளன.
இரண்டும், 4 ஜி.பி. ராம் மெமரி கொண்டுள்ளன. டூயல் பிக்ஸெல் அமைப்பில் 12 எம்.பி. திறன்கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. முன்புறமாக, 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது.
இரண்டு போனிலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் அண்மைக் கால பதிப்பான Android 6.0 Marshmallow இயங்குகிறது. எஸ் 7 போனில் 3,000 mAh திறன் கொண்ட பேட்டரியும். எட்ஜ் போனில் 3,600 mAh திறன் கொண்ட பேட்டரியும் தரப்பட்டுள்ளன. இரண்டும் போனை விட்டு எடுக்க முடியாதவை. எட்ஜ் போனின் பரிமாணம் 150.9 x 72.6 x 7.7 மிமீ. எடை 157 கிராம்.
நெட்வொர்க் இணைப்பிற்கு வை பி, டூயல் பேண்ட், ஹாட்ஸ்பாட், புளுடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.சி. ஆகியவை இயங்குகின்றன. Fingerprint, accelerometer, gyro, proximity, compass, barometer, heart rate, SpO2 எனப் பல சென்சார்கள் தரப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள், டாகுமெண்ட் வியூவர், போட்டோ மற்றும் விடியோ எடிட்டர் ஆகிய செயலிகள் இயங்குகின்றன.
கருப்பு, வெள்ளை, தங்க நிறம் மற்றும் சில்வர் வண்ணங்களில் இது கிடைக்கிறது. காலக்ஸி எஸ் 7 திரை வேறுபாடு தவிர மற்றவை எல்லாம், எட்ஜ் போனில் உள்ளபடியே தரப்பட்டுள்ளன. பேட்டரி 3,000 mAh திறன் கொண்டதாக உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X