பைல்களின் வெவ்வேறு அளவுகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 டிச
2010
00:00

கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களின் அளவுகளை கிலோ பைட், மெகா பைட் என்று சொல்கிறோம். மோடம் தகவல் அனுப்பும் வேகத்தை பிட்களில் சொல்கிறோம். இவை குறிப்பாக எதைக் குறிக்கின்றன என்றும், சில அடிப்படை வேறுபாடுகளையும் இங்கு காணலாம்.
Bit:   கம்ப்யூட்டர் சார்ந்த அளவு கோலில் மிகக் குறைந்த அளவு இதுவே.  பிட்களின் அடிப்படையில் எந்த பைலின் அளவும் இருக்க முடியாது. இதனுடைய மதிப்பு 0 அல்லது 1 ஆகும். 
Byte  இது 8 பிட்கள் இணைந்த ஒரு அலகு. ஒரு பைட் அளவிலும் பைலை உருவாக்குவது கடினம். Kilobyte(KB)   கிலோ பைட். ஏறத்தாழ 1000 பைட்கள் (துல்லிதமாக என்றால் 1024 பைட்) கொண்டது ஒரு கிலோ பைட். ஒரு  சிறிய பைலை டவுண்லோட் செய்கையில் அந்த பைலின் அளவினை இந்த அலகில் தான் குறிப்பிடுவார்கள்.
Megabyte (MB)  = 1,048,576  பைட்கள் அல்லது 1,024 கிலோ பைட்கள் . Gigabyte  (GB)  கிகா பைட் 1024 மெகா பைட்.  ஹார்ட் டிஸ்க்குகளின் கொள்ளளவை இந்த அலகில் தான் குறிப்பிடுவார்கள்.   சரி, இந்த அலகுகளை சில சாதனங்களுக்குப் பொருத்திப் பார்க்கலாமா!
* ஒரு 3.25 அங்குல பிளாப்பியில் 1.44 மெகா பைட் தகவல்களைப் பதியலாம். (1,474 கிலோ பைட்)
* ஒரு சிடியில் 650 முதல் 700 மெகா பைட்கள் அளவில் தகவல்களைப் பதியலாம். ஆனாலும் முழு அளவில் எந்த சிடியும் எழுதப் படுவதில்லை. 3.25 பிளாப்பி அளவில் சொல்வதென்றால் ஒரு சிடியில் 450 பிளாப்பிகளை அடக்கலாம்.
* 20 கிகா பைட் ஹார்ட் டிரைவில் 31 சிடிக்களில் உள்ள தகவல்களை அதாவது 14,222 பிளாப்பியில் உள்ள தகவல்களை அடக்கலாம்.
 * சாதாரணமாக ஒரு பக்க அளவில் டெக்ஸ்ட் ஒன்றை உருவாக்கி அதனைப் பைலாக மாற்றினால் அது 4 கேபி அளவில் இருக்கும்.
 ஒரு பைலின் அளவு தெரிய அதன் பெயரில் மீது ரைட் கிளிக் செய்து அதன் கீழாக வரும் மெனுவில் Properties  என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
இன்னும் ஒரு சிறிய உதாரணம். பிட்  கடுகு அளவு என்றால் பைட் துவரம் பருப்பு. கிலோ பைட் தக்காளி என்றால் மெகா பைட் கத்தரிக்காய்.  கிகா பைட் ஒரு  பூசணிக்காய். 

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meyyappan - சிவகங்க,ஈராக்
12-டிச-201019:40:08 IST Report Abuse
Meyyappan டியர் தினமலர் நாழிதழ், கொள்ளளவு பற்றிய தங்களின் விளக்கம் மிகவும் எளிய,இனிய,,துல்லியமாக மற்றும் அலகுகளுக்கும் அச்சுப்பக்கங்களுக்கும் இடையே உள்ள விவரத்தை நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் உள்ளது . என்போன்ற கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்களில் கற்ற்காதவர்களுக்கு மிகவும் பனுள்ளது. என்றும் நன்றியுடன், மெ.மெ ய்யப்பன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X