விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறும் முன்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 மார்
2016
00:00

இலவசமாக விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், பலர் விண்டோஸ் 10க்கு மாறுவதைத் தள்ளிப்போட விரும்பவில்லை. இருப்பினும், பலரிடம் இது குறித்து விசாரிக்கையில், பல கட்டுரைகளைப் படிக்கையில், எங்கே, இருப்பதும் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
விண்டோஸ் 7க்கான முதல்நிலை ஆதரவு நாள் முடிந்துவிட்டது. நீட்டிக்கப்பட்ட ஆதரவு, இந்த சிஸ்டத்திற்கு வரும் 2020 வரை மட்டுமே தரப்படும். எனவே, இப்போதே, விண்டோஸ் 10க்கு மாறுவது குறித்து, ஒரு நிலையான முடிவை எடுப்பது நல்லது. முடிவை எடுக்கும் முன், சில சிறிய விஷயங்களைத் தெளிவு படுத்திக் கொண்டால், எளிதாக முடிவெடுத்து, விண்டோஸ் 10 க்கு மாறிவிடலாம்.
தற்போது விண்டோஸ் 7 பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், விண்டோஸ் 10க்கு மாறும் திட்டத்தினை நிராகரிக்கலாம். இருப்பது நன்றாகத்தானே உள்ளது; பின்னர் ஏன் தெரியாத, புதிய ஒன்றுக்கு மாற வேண்டும் என்ற மனப்பான்மை பலரிடம் உள்ளது. விண்டோஸ் அறிமுகமான காலத்தில், பலர் டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே சில ஆண்டுகள் தொடர்ந்தனர். வேர்ட் ஸ்டார் போன்ற எடிட்டர் புரோகிராம்களையே பயன்படுத்தினர். அது போல இவர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்திலேயே பணிகளைத் தொடரலாம். ஆனால், விண்டோஸ் 10 க்குச் செல்வது என்பது, விண்டோஸ் சிஸ்டம் அப்கிரேட் மட்டுமல்ல. மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டம் தான், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கான, இறுதியான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறிவித்துள்ளது. இத்துடன் இன்னும் சில விஷயங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.
நிறுவனங்கள் முதலாவதாக எண்ணிப் பார்க்க வேண்டியது, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதற்கான உரிமத்திற்கான கட்டணம். விண்டோஸ் 10 சிஸ்டம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 பயன்படுத்துவோருக்கு இலவசமாகக் கிடைக்கும் என்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு. விண்டோஸ் 10 சிஸ்டம் வெளியாகி, ஓராண்டு காலத்திற்கு மட்டுமே இது இலவசமாகக் கிடைக்கும். இது மட்டுமல்ல; இதில் இன்னும் சிலவும் அடங்கியுள்ளன. சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கு, இந்த இலவச அப்கிரேட் கிடைக்காது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் 7 எண்டர்பிரைஸ், விண்டோஸ் 8 / 8.1 எண்டர்பிரைஸ், விண்டோஸ் ஆர்.டி. / ஆர்.டி. 8.1 ஆகியவை இயங்கும் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு இலவசமாக மேம்படுத்த முடியாது.
மேலும், நீங்கள் எந்த விண்டோஸ் 7 சிஸ்டம் பதிப்பினை பயன்படுத்துகிறீர்களோ, அதுவே, உங்கள் கம்ப்யூட்டரில் இலவசமாகப் பதியப்படும் சிஸ்டத்தினை உறுதி செய்திடும். விண்டோஸ் 7 ஸ்டார்டர், விண்டோஸ் 7 ஹோம் பேசிக் மற்றும் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் ஆகிய அனைத்தும் விண்டோஸ் 10 புரபஷனல் பதிப்பிற்கு மேம்படுத்தப்படும். விண்டோஸ் 7 அல்டிமேட் சிஸ்டம் விண்டோஸ் 10 அல்டிமேட் பதிப்பிற்கு மாறிக் கொள்ளும். இதில் பட்டியலிடப்படாத வேறு விண்டோஸ் 7 சிஸ்டம் பதிப்புகள் இலவச மேம்பாட்டிற்கு தகுதியானவை அல்ல. அவற்றைப் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான உரிமத்தினைக் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும்.
மேலும், விண்டோஸ் 7 பயன்படுத்தும் நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களில் இயங்கும் விண்டோஸ் 7 சிஸ்டம், மைக்ரோசாப்ட் தொடர்ந்து தந்த அனைத்து அப்கிரேட் பைல்களையும் ஏற்றுப் பதிந்தவையாக இருக்க வேண்டும். அவ்வாறு அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்து, விண்டோஸ் 7 சிஸ்டத்தினை மேம்படுத்தி இருந்தால் தான், விண்டோஸ் 10 இலவசமாக, எளிதாக, எந்தப் பிரச்னையும் இன்றி, உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும். இந்த வகையில் விண்டோஸ் 7 சர்வீஸ் பேக் 1 இயக்கப்பட்டிருந்தால் தான், Get Windows 10 app உங்கள் கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும்.
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்கையில், இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அது விண் 10- ஏற்றுக் கொள்ளத் தேவையான டெஸ்க்டாப் ஹார்ட்வேர். பொதுவாக, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், நாம் விண்டோஸ் சிஸ்டத்தினைப் புதியதாக அமைக்கையில், கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் விஷயங்களையும் மேம்படுத்த வேண்டியதிருக்கும். முன்பெல்லாம், புதிய மேம்படுத்தப்பட்ட ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர்கள் வாங்கினால் தான், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையே பதிந்து இயக்க முடியும். ஆனால், விண்டோஸ் 10 ஐப் பொருத்தவரை, விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கிய கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 இயங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகிறது.
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க, கீழ்க்காணும் ஹார்ட்வேர் தேவைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை:
1) ப்ராசசர், 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது கூடுதலான வேகத்தில் இயங்க வேண்டும்.
2) ராம் மெமரி 1 ஜி.பி.யாக (32 பிட் இயக்கத்திற்கு) இருக்க வேண்டும். 64 பிட் இயக்கப் பதிப்பு எனில், 2 ஜி.பி. ராம் மெமரி கட்டாயமாக, குறைந்த அளவிலாவது தேவைப்படும்.
3) அதே போல 32 பிட் இயக்கத்திற்கு 16 ஜி.பி. ஸ்டோரேஜ் இடமும், 64 பிட் இயக்கத்திற்கு 20 ஜி.பி. இடமும் இருக்க வேண்டும்.
4) கிராபிக்ஸ் கார்ட் DirectX 9 அல்லது அதன்பின் வந்தவற்றைக் கொண்டிருக்க வேண்டும். WDDM 1.0 driver தேவைப்படும்.
5) டிஸ்பிளேயில் பிக்ஸெல் அடர்த்தித் திறன் 1024 x 600 அல்லது கூடுதலாக இருக்க வேண்டும்.
மேலே தரப்பட்டுள்ள அனைத்தும், குறைந்த பட்ச தேவைகளே. மிகச் சிறப்பாக, விண்டோஸ் 10 சிஸ்டத்தின் தன்மைகளையும் வசதிகளையும் அனுபவிக்க வேண்டும் என்றால், அனைத்தும் இன்னும் கூடுதலாகவே இருக்க வேண்டியது அவசியம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் ஹலோ (Windows Hello) இயங்க, ஒரு ஸ்பெஷல் கேமரா தேவை. அதே போல, கார்டனா ஒலி வழிக் கட்டளைகளை மேற்கொண்டு இயங்குவதால், நல்ல மைக் ஒன்று இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய அப்ளிகேஷன் தவறுகள்:
விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்கையில் நாம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம், நம் கம்ப்யூட்டரில், பழைய விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களின் பட்டியல்தான். பட்டியல் எடுத்து, அவை ஒவ்வொன்றும், விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இயங்கும் வகையில், தற்போது கிடைக்கின்றனவா அல்லது மேம்படுத்திக் கொள்ளலாமா என்பதனை, அந்த அப்ளிகேஷனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்துடன் உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், பொதுவாக அனைவரும் இரண்டு தவறுகளைச் செய்வார்கள். முதலாவது, தாங்கள் இயக்கி வரும் அப்ளிகேஷன், விண்டோஸ் 10ல் இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளாதது. இரண்டாவது, பழைய அப்ளிகேஷனை மேம்படுத்திக் கொள்ளாமலேயே, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கும் என்று எதிர்பார்த்து, அப்படியே வைத்து இயக்கிப் பார்ப்பதாகும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கிய அப்ளிகேஷன் புரோகிராம்களில் பெரும்பான்மையானவை, விண்டோஸ் 10 சிஸ்டத்திலும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு சில விதி விலக்குகள் உண்டு.
நிறுவனங்கள் சில தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கும் என்று அறிவிப்பார்கள். ஆனால், எத்தகைய ஹார்ட்வேர் தொகுப்பு கொண்ட சிஸ்டத்தில் இயங்கும் என்பதனைத் தெரிவிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நிகழ்வுகளில், ஓர் அப்ளிகேஷன் விண்டோஸ் 10ல் இயங்கிடத் தேவையான ஹார்ட்வேர் அமைப்பு இல்லை என்றால், இயங்காது.
மேலே சொல்லப்பட்டவற்றை மனதில் கொண்டு, ஒவ்வொரு நிலையையும் சோதனை செய்து பார்த்து, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், கம்ப்யூட்டர் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்கும் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, அதற்கு மாறிக் கொள்வது நல்லது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.