இணைய இணைப்பின்றி கூகுள் ட்ரைவ் கோப்புகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 மார்
2016
00:00

கம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர் கூகுள் ட்ரைவினைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இலவச இடம் குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பழைய அளவில் கிடைத்து வருவது, இன்னும் பல பயானளர்களை இழுத்து வருகிறது. தற்போது, கூகுள் ட்ரைவில் உள்ள நம் பைல்களை, இணைய இணைப்பில்லாமலும் பயன்படுத்தலாம். டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் இந்த வசதியைப் பயனாளர்கள் பெறலாம். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

குரோம் வழியாகப் பயன்படுத்தும் வழிகள்: நீங்கள் குரோம் பிரவுசரை உங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். பொதுவாக, நாம் தொடர்ந்து இணைய இணைப்பில் இருந்தாலும், சில வேளைகளில், டெஸ்க்டாப்பிற்கான நம் இணைய இணைப்பு விலகலாம். அதற்காக, அதில் கூகுள் ட்ரைவில் உள்ள கோப்புகளில் நாம் செயல்படுவது தடைபடக் கூடாது. இணைய இணைப்பு இல்லாத போதும், கூகுள் ட்ரைவில் உள்ள பைல்களைப் பயன்படுத்த முதலில் கூகுள் ட்ரைவினை, உங்கள் பணியுடன் ஒருங்கிணைக்க (Sync)வேண்டும்.
மொபைல் கட்டமைப்பில் இருப்பது போல் அல்லாமல், இணைய இணைப்பில்லாத நிலையில் செயல்பட, ட்ரைவ் முழுமையும் அமைத்திட வேண்டும். குறிப்பிட்ட பைலில் மட்டும் செயல்பட வேண்டும் என அமைக்க முடியாது. (இதனை அமைத்திட, முதலில் நாம் இணையம் வழியாக செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.)
கூகுள் ட்ரைவில், அமைத்திட கீழ்க்காணும் செயல்வழிகளைப் பின்பற்றவும்.
1. குரோம் பிரவுசரைத் திறக்கவும்.
2. உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் அதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து நுழையவும்.
3. இதன் பின்னர், கூகுள் ட்ரைவ் அமைப்பு வழிகள் உள்ள பிரிவிற்குச் (Google Drive Settings. ) செல்லவும்.
4. இங்கு கிடைக்கும் பாப் அப் கட்டத்தில், Offline என்ற செக் பாக்ஸில் டிக் அடிக்கவும். இப்போது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். ”கூகுள் உங்களுடைய கம்ப்யூட்டரை ஒருங்கிணைக்கிறது” என்று அதில் காட்டப்படும். இதனை அனுமதிக்கவும். இது முடிந்தவுடன், கூகுள் டாக்ஸ், ஸ்லைட்ஸ், ஷீட்ஸ் மற்றும் ட்ராயிங் பைல்களை (Google Docs, Slides, Sheets, and Drawings files.) நீங்கள் இணைய இணைப்பு இல்லாத போதும் பயன்படுத்தலாம்.
அடுத்து ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் எப்படி, இணைய இணைப்பில்லாமல் கூகுள் ட்ரைவினைப் பயன்படுத்தலாம் என்றுபார்க்கலாம்.
கூகுள் ட்ரைவிற்கான, மொபைல் அப்ளிகேஷன் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் மொபைல் போனில், கூகுள் ட்ரைவினைத் திறந்தால், ஸ்கிரீனில் இடது புற முனையிலிருந்து வலது புறமாக ஸ்வைப் செய்தால், கூகுள் ட்ரைவ் சைட் பார் (Google Drive sidebar) கிடைக்கும். இதற்குள்ளாகவே, Offline என்பதை டேப் செய்திடவும்.
கூகுள் ட்ரைவின் இந்த Offline பிரிவிலேயே, + பட்டனை டேப் செய்திடவும். இங்கு, எந்த வகை பைலை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள் எனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு folders, scans, Docs, Sheets, or Slides எனப் பலவகை ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் போன் இணைய இணைப்பில் சென்றவுடன், குறிப்பிட்ட அந்த பைல் உங்கள் அக்கவுண்ட்டுடன் இணையும். அது உங்கள் கூகுள் ட்ரைவ் அக்கவுண்ட்டில் இருக்கும்.
நீங்கள் ஏற்கனவே கூகுள் ட்ரைவில் உள்ள குறிப்பிட்ட பைலுக்கு இந்த வசதி கிடைக்க வேண்டும் எனத் திட்டமிட்டால், கீழ்க்கண்ட செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. உங்கள் மொபைல் போனில், கூகுள் ட்ரைவினைத் திறக்கவும்.
2. எந்த போல்டரில் அந்த குறிப்பிட்ட பைல் உள்ளதோ, அங்கு செல்லவும்.
3. இந்த பைலுடன் சம்பந்தப்பட்ட info பட்டனை அழுத்தவும். (இது பைல் ஐகானின் இடது மூலையில், சிறிய ஆங்கில "i" எழுத்தாகக் காட்சி அளிக்கும்.)
4. தொடர்ந்து Available Offline என்பதில் டேப் செய்திடவும்.
5. இனி, அந்த குறிப்பிட்ட பைல், ஆப்லைன் போல்டரில் இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.