எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 மார்
2016
00:00

தேதி இடுகையில் புள்ளிகளைப் பயன்படுத்த: எக்ஸெல் புரோகிராம், மாறா நிலையில், அதில் தேதிகளை இடுகையில் சாய்வான கோட்டினை (/) இடுகிறது. தேதிகள் அதிக எண்ணிக்கையில் நீங்கள் அமைக்க இருந்து, அவற்றில், கோட்டுக்குப் பதிலாக, புள்ளிகள் வரவேண்டும் என விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்பட்டு அமைப்பினை மாற்றலாம்.
முதலில் மாற்ற வேண்டும் என விரும்பும் தேதிகளைக் கொண்ட செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின், அந்த செல்கள் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Format Cells” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பார்மட் செல்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Number” டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். இதில் உள்ள Category பட்டியலில் “Custom” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “m.d.yyyy” (மேற்கோள் குறிகள் இல்லாமல்) என டைப் செய்திடவும். இங்கு “mm.dd.yyyy” என உள்ளீடு செய்தால், ஒற்றை இலக்க தேதி மற்றும் மாதம் வருகையில், அந்த இலக்கத்தின் முன் ஒரு சைபர் சேர்க்கப்படும். (எ.கா. 01.04.2016) இனி, தேதிகள் இடுகையில், சாய்வு கோடுக்குப் பதிலாக, புள்ளிகள் இருப்பதைக் காணலாம். பின் நாளில், இது சரியில்லை, பழைய சாய்வு கோடே இருக்கட்டும் என விரும்பினால், இதே முறையைப் பின்பற்றி, கேடகிரி பட்டியலில், “Date” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Type” பட்டியல் பெட்டியில், நீங்கள் விருப்பப்படும் பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.

டேட்டாவின் கீழ் அடிக்கோடு: எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது. இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline என்னும் பாக்ஸ் கிடைக்கும். இதில் காட்டப்பட்டுள்ள பல்வேறு அடிக்கோடுகளிலிருந்து, நீங்கள் விரும்பும் அடிக்கோட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். Underline Type Meaning None என்று சென்றால், செல் ஒன்றில் ஏற்கனவே உள்ள கோடுகள் நீக்கப்படும். Single என்பதனைத் தேர்ந்தெடுத்தால், ஒரு வரிக்கோடு அடிக்கோடாக அமைக்கப்படும். Double என்பது இரண்டு கோடுகளைத் தரும். Single Accounting Same என்பது, கோட்டினைச் சற்றுக் கீழாக அமைக்கும். Double Accounting Same இரட்டைக் கோடுகளைச் சற்றுக் கீழாக இறக்கி அமைக்கும்.

ஒரே டேட்டா - பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யப் பட்டிருக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X