பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 மார்
2016
00:00

உலக அளவில் நடத்தப்பட்ட மொபைல் கருத்தரங்கு குறித்த கட்டுரை சிறியதாக இருந்தாலும், முக்கிய தகவல்கள் அனைத்தையும் தந்துள்ளது. குறிப்பாக தலைப்பில் உள்ள படமும் சூப்பர். பாராட்டுதல்கள்.
என். ஜே. கதிரவன், தாம்பரம்.

என்னதான் நம் அறிவியல் முன்னேற்றம் அடைந்தாலும், நம் சமுதாயத்தில் ஒரு பிரிவு மக்கள் அதன் வசதிகளைப் பற்றி அறியாமலும், அவற்றை அனுபவிக்காமலும் உள்ளனர். நகரங்களில் கூட இந்நிலை உள்ளது என்ற உங்களது கட்டுரை (நகரங்களில் நிலவும் இணையப் பயன்பாட்டு இடைவெளி) வியப்பையும் வேதனையையும் தருகிறது. இதற்கான முதன்மைக் காரணங்களில் முதல் இடத்தைப் பெறுவது கல்வி அறிவுதான். அரசு முதலில் இதில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
பேரா டாக்டர். ரெ. ஆசீர்வாதம், சிவகாசி.

வைரஸ்கள் எப்படி எல்லாம் நம்மை தாக்குகின்றன என விபரமாகக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது ஒரு படிப்பினையைத் தருவதாக உள்ளது. என்ன வகையான தாக்குதல்கள் என்பதன் மூலம், அவற்றிலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்பதனையும் நாம் அறிந்து கொள்ளலாம். கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.
ஆ. சிவப்பிரகாசம், செங்கல்பட்டு.

மொபைல் போன்களின் பேட்டரியின் தடிமன் அதிகரிப்பில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா? கட்டுரையைப் படித்தவுடன், பயந்து கொண்டே, என் மொபைல் போன் பேட்டரியைப் பார்த்தேன். தடிமன் அதிகரித்தால், அதனைத் தூக்கி எறிய நிச்சயம் நம் வாசகர்கள் தயங்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விபரமாகவும், எளிமையாகவும், கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நன்றி.
ஜெ. உத்தமராஜ், பழநி.

மொபைல் போன் பேட்டரிகள் குறித்த கட்டுரையில், லித்தியம் அயன் பேட்டரி தவிர மற்ற வகை பேட்டரிகள் உள்ளனவா? அவை இது போல தடிக்கும் வாய்ப்பு உண்டா? எனக் கூறி இருக்கலாம்.
ஆர். ஜெயசீலி, கோவை.

''ஆண்ட்ராய்ட் லாலிபாப்” குறித்த கட்டுரையைப் படித்த பின்னரே, நம் ஆண்ட்ராய்ட் போனிற்கு இத்தனை ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்புகள் உள்ளன என்று தெரிந்து கொண்டேன். நன்றி.
கே. எஸ்.பிரகாஷ் மோகன், பழநி.

கேள்வி பதில் பகுதியில், எஸ்.எஸ்.டி. ஹார்ட் டிஸ்க்கில் டிபிராக் குறித்த வேறுபட்ட தகவல்கள் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை. மிக நேர்த்தியாக அதற்கான காரணங்களை வரிசைப்படுத்திக் கூறியுள்ளமை அருமை. இது குறித்து தனியே ஒரு கட்டுரை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆர். மலர்விழி, தென்காசி.

ஆண்ட்ராய்ட் இயக்கம் புதியதாக வெளியாகும்போது, ஏன் மக்களிடம் சென்றடைய அதிக நாட்கள் ஆகின்றன என்பதனை இன்னும் சற்று விளக்கமாகத் தந்திருக்கலாம். மார்ஷ்மலோ இயங்கும் போன்களை நான் இன்னும் பார்க்கவே இல்லை.
ஆர். செந்தில்நாதன், விழுப்புரம்.

ஆண்களின் ஆதிக்க மனப்பான்மை, இணையப் பயன்பாட்டில் கூட ஊறியிருப்பது வேதனைக்குரியது. இந்த பெண் அடிமைத் தனம் ஒழியாமல், எந்த பொருளாதார வளர்ச்சியும் நம் நாட்டில் ஏற்படாது.
ஆர். இராமமூர்த்தி, சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X