நான்கு அங்குல ஐபோன் வெளியீடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 மார்
2016
00:00

சென்ற மார்ச் 22 அன்று, ஆப்பிள் நிறுவனம் தன் 4 அங்குல ஐபோனை மக்களுக்கு வெளியிட்டது. 'iPhone SE' (iPhone Special Edition) எனப் பெயர் சூட்டப்பட்ட இந்த போன், இந்தியாவில், வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வருகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. ௩௯,000 என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விலை 32 ஜி.பி. மாடலுக்குத்தான். 64 ஜி.பி. மாடல் போன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பொதுவாக, மக்கள் அதன் தொழில் நுட்பத்திற்காக, ஆப்பிள் நிறுவனப் போன்களை விரும்பினாலும், இந்தியாவில், அதன் விலையைப் பார்த்து, பெரும்பாலான மக்கள் விலகியே இருந்தனர். தற்போது வந்திருக்கும் போனை மக்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நான்கு அங்குல ஐபோன், ஐபோன் 6 எஸ் மாடலின் அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளது. அதில் உள்ள முப்பரிமான தொடுநிலை தொழில் நுட்பம் (Apple's 3D Touch) மட்டும் இதில் இல்லை. ஆனால், இதில் நெட்வொர்க் செயல்பாட்டின் திறன், வை பியில் இயங்கும் போது மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 5 எஸ் மாடலுடன் ஒப்பிடுகையில், இதன் எல்.டி.இ.செயல்பாட்டின் வேகம், 50% கூடுதலாக உள்ளது. இதில் iOS 9.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது.
மற்ற அம்சங்கள்: இதில் A9 ப்ராசசர் இயங்குகிறது. ஐபோன் 6 எஸ் போனில் உள்ள அதே ஜி.பி.யு. தரப்பட்டுள்ளது. 12 மெகா பிக்ஸெல் திறனுடன் ஒரு iSight கேமரா இயங்குகிறது. இதனால், 4கே விடியோவினைப் பதிந்து கொள்ள முடியும். NFC radio தொழில் நுட்பம் உள்ளது.
இந்த மாடல் போன் Silver, Grey, Gold, மற்றும் புதிய வண்ணமான Rose Gold ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதற்கான தோலினால் செய்யப்பட்ட கூடு, கருப்பு மற்றும் ஊதா நிறங்களில், ரூ.2,900 விலையில் கிடைக்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் இவற்றின் அறிமுகவிழா நடைபெற்றது. உலகெங்கும் மற்ற நாடுகளில், நேரலையாக இணையம் மற்றும் மொபைல் போன்கள் வழி பெறப்பட்டது. மார்ச் 31 முதல், சில நாடுகளில் (இந்தியாவில் இல்லை) இது மக்களுக்குக் கிடைக்கும். மற்ற நாடுகளில் மே மாதம் முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்குப் பின், டிம் குக் தலைமைப் பதவி ஏற்ற பின்னர், ஆப்பிள் வாட்ச் மட்டுமே, புதியதாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இப்போது, பன்னாடுகளில் மக்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், சிறிய திரை கொண்ட போனை டிம் குக் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - boston,யூ.எஸ்.ஏ
29-மார்ச்-201615:54:36 IST Report Abuse
Tamil எப்படியோ ஸ்டீவ் ஜாப்ஸ் சேர்த்து வைத்த பிராண்டு ராயல்டிய காலி செஞ்சுடுங்க. பழைய பிராஸசர், பழைய டிசைன் போட அவர் விடுவாரா, எங்க கேப்டன் மாதிரி தூக்கி அடிச்சுருவாரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X