வோடபோன் சூப்பர்நெட் 4ஜி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 மார்
2016
00:00

வோடபோன் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் தொடர்பில் இருக்கும் வகையில் இணைப்பினைத் தரும் என்ற உறுதியை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், ”சூப்பர்நெட் 4ஜி” என்னும் திட்டத்தை முன் மொழிந்துள்ளது. அதன் பழைய அடையாளச் சின்னமான 'சீக்கா' (Cheeka the pug) நாய் குட்டியினை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் வோடபோன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
1. எந்த நேரமும் டவர் கவரேஜ்: வோடபோன் நிறுவனம் 30 ஆயிரம் (2ஜி/3ஜி/4ஜி) தொடர்பு இடங்களை உருவாக்கியுள்ளது. இவற்றின் மூலம், குரல் வழி மற்றும் டேட்டா தொடர்பு இரண்டும் மேற்கொள்ளப்படும்.
2. இந்தியாவில், உலகிலேயே மிகப் பெரிய 4ஜி நெட்வொர்க்: வோடபோன் பன்னாட்டளவில், 20 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்தியாவில், 1800 MHz அலைவரிசையில், 4ஜி சேவைகளை, கேரளா, கர்நாடகா, டில்லி மற்றும் சுற்றுப்புறம் மற்றும் கொல்கத்தா என ஐந்து மண்டலங்களில் அறிமுகம் செய்துள்ளது.
3. பன்னாட்டளவில் 4ஜி ரோமிங்: பன்னாட்டளவில் 4ஜி ரோமிங் சேவையினை வழங்கும் ஒரே இந்திய நிறுவனமாக வோடபோன் பெயரெடுத்துள்ளது.
4. விரைவான சிறப்பான மொபைல் இணையத் தொடர்பு: அண்மையில், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மேற்கு மற்றும் அஸ்ஸாம் மற்றும் வட கிழக்குப் புறங்களில், புதியதாக 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 16 மண்டலங்களில் தன் சேவையை விரிவு படுத்தி, மொபைல் வழி இணையத் தொடர்பினை விரைவானதாக உறுதி செய்துள்ளது.
5. எதிர்கால தொழில் நுட்பம்: தன் ரேடியோ நெட்வொர்க்கினை, ஐ.பி. தொழில் நுட்பத்திற்கு விரிவு படுத்தியதன் மூலம், வர இருக்கும் 5ஜி தொழில் நுட்பத்தினையும் மேற்கொள்ளும் அளவிற்கு இதன் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.
6. அதிக தூரத்திற்கு பைபர் நெட்: மிகப் பெரிய அளவில், 1,60,000 கிமீ தூரத்திற்கு பைபர் நெட்வொர்க்கினை ஏற்படுத்தி, மொபைல் வழி இணையத் தொடர்பிற்கு தடையற்ற வழி ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சிஸ்கோ நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தியுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X