கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - எட்ஜ் பிரவுசர் - முற்றிலும் புதிய அனுபவம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2016
00:00

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பின்னரும், பலர் எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா? என்ற தயக்கத்தில் உள்ளனர். விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகச் சிறந்த பயன் தரும் ஒரு செயலியாக எட்ஜ் பிரவுசர் கிடைத்துள்ளது. தேவையற்ற சந்தேகங்களால், இந்த பிரவுசர் தரும் புதிய பல வசதிகளை இழந்துவிடக் கூடாது. ஏற்கனவே இதுவரை மைக்ரோசாப்ட் தந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரிலிருந்து, எட்ஜ் முற்றிலும் மாறுபட்ட செயல்பாட்டினைக் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. எட்ஜ் பிரவுசரில் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் கடைப்பிடித்து வந்த வழக்க முறைகளை முற்றிலும் மாற்றியுள்ளது மைக்ரோசாப்ட். பிரவுசரின் கட்டமைப்பிலும் நவீன தொழில் நுட்பத்தினையும், வசதிகளையும் தந்துள்ளது. அதனால் தான், பயனாளர்கள் அதிகப் பயன்களையும் பெறுகின்றனர். ஆனால், இதுவே புதிய பயனாளர்களுக்குச் சந்தேகத்தினை உருவாக்கும் நிலையைத் தந்துள்ளது. இங்கே, எட்ஜ் பிரவுசர் குறித்த சிறப்பு அம்சங்களும், அவற்றால் கிடைக்கும் பயன்களும் பட்டியலிடப்படுகின்றன.
“அடுத்த பிரவுசரை வடிவமைப்பது ஒன்று மட்டும் எங்களின் பணியாக இல்லாமல், அனைத்து வழிகளிலும், மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினோம்” என்று எட்ஜ் பிரவுசரை வடிவமைத்த வல்லுநர் குழுவின் தலைவர் சார்லஸ் மோரிஸ் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

அனைத்தும் புதியதாக:
வழக்கமாக, மைக்ரோசாப்ட் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினை, அதன் பழைய பதிப்புகளில் உள்ள செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாகவே வெளியிடும். ஏனென்றால், பல நிறுவனங்கள் தங்கள் இணைய தளங்களை, குறிப்பிட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பின் அடிப்படையில் தயாரித்து வழங்கியிருப்பார்கள். புதியதாக வரும் ஒன்று, முற்றிலும் மாறுபட்ட செயல்பாட்டில் இருந்தால், அதற்கென அவர்களின் தளத்தினை மாற்ற வேண்டியதிருக்கும். எனவே, இந்த இணைய தளத் தயாரிப்பு நிறுவனங்கள், இணையதளங்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்குச் சிரமம் வழங்கக் கூடாதென்ற எண்ணத்தில், இது போல மரபு வழி இயக்கத்தினை மைக்ரோசாப்ட் கொண்டிருந்தது. அது. எட்ஜ் பிரவுசரில் கைவிடப்பட்டுள்ளது. பழசாகிப் போன தொழில் நுட்பத்திலிருந்து விலகி, புதிய பிரவுசர் தரப்படுகிறது. இது ஏறத்தாழ, மொஸில்லா, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வழிகளை ஒத்ததாக உள்ளது.
எட்ஜ் பிரவுசர், மைக்ரோசாப்ட் தரும் ActiveX டூல்களை சப்போர்ட் செய்யாது. அதே போல இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 11க்கென வடிவமைக்கப்பட்ட விசுவல் பேசிக் ஸ்கிரிப்ட் மற்றும் தர்ட் பார்ட்டி டூல்களும், எட்ஜ் பிரவுசரில் இயங்காது. அல்லது இயக்கத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும். ஆனால். அடோப் பிளாஷ் மற்றும் பி.டி.எப். பைல்களை சப்போர்ட் செய்திடும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, அல்லது அதனையே விரும்புபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் குறிப்பிட்ட காலத்திற்கு விண்டோஸ் 10 பிரவுசருக்கு சப்போர்ட் வழங்கி உதவிடும். இதற்கான பாதுகாப்பு பைல்கள் மட்டும் வழங்கப்படும். புதிய வசதிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.

புதிய செயல்வேகமும் இணையத் தேடலும்: பழைய பிரவுசரில் இயங்கிய தளங்களுக்கான ஒத்திசைவுத் தன்மை வேண்டாம் என மைக்ரோசாப்ட் முடிவெடுத்ததால், எட்ஜ் பிரவுசர் மிகவும் குறைவான இடத்தை எடுத்துக் கொள்ளும் சிறிய இயக்க பைலைக் கொண்டுள்ளது. அதிக பட்ச பயன்பாடுகளைத் தரும் குறியீடுகளைக் கொண்டுள்ளது. எட்ஜ் பிரவுசரில் முற்றிலும் புதிய MSHTML தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பழைய பிரவுசரை சப்போர்ட் செய்திடும் எந்த டூலும் இதில் இல்லை. இதனால், இதனைச் சுருக்கிக் கையாள முடியும். இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 11 போல இரண்டு மடங்கு வேகத்தில், இயங்குகிறது.
இந்த வகையில், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களின், புதிய 64 பிட் செயல்வேகத்தைத் தூக்கியடிக்கும் வகையில் இயங்குகிறது. இன்றைய அளவில், பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பதிப்பு 11 ஐ, பல விஷயங்களில் மிஞ்சும் வகையில் எட்ஜ் அமைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, மைக்ரோசாப்ட் புதியதாக அமைக்கும், அனைத்து சாதனங்களுக்குமான இயக்கத்துடன் இணைந்து செயல்படுவதால், அனைத்து சாதனங்களிலும், ஒரே மாதிரியாக இணைய தளங்களைக் காட்டுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், மொபைல் சாதனங்களில், இணையப் பக்கங்களைக் காட்டுகையில் திணறியது. அந்த தயக்கம், குழப்பம் எட்ஜ் பிரவுசர் மொபைல் சாதனங்களில் இயங்குகையில் இருக்காது.

கூடுதல் வசதி தரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் போல் இல்லாமல், ஜாவா ஸ்கிரிப்ட் அடிப்படையில் அமைந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்கு எட்ஜ் சப்போர்ட் வழங்கிடும். தர்ட் பார்ட்டி டூல்கள் மூலம் கிடைக்கும் இணையப் பக்கங்களையும் சப்போர்ட் செய்திடும். இந்த புதிய செயல்பாடு, எட்ஜ் பிரவுசருக்குக் கூடுதல் பயன்பாட்டினை அளிக்கிறது.
குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் எக்ஸ்டன்ஷன்கள் போல, எட்ஜ் பிரவுசரின் எக்ஸ்டன்ஷன்கள் எச்.டி.எம்.எல் மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தனி ஒருவரும் தனக்காக இயக்கலாம்: எட்ஜ் பிரவுசர், அதன் பயனாளர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அனுபவத்தினைக் கொடுப்பதாக உள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'பிங்' சர்ச் சேவையுடன் இணைந்து இயங்குகிறது. பயனாளர்கள், இந்த சேவைகளைப் பயன்படுத்த விருப்பம் தெரிவிக்கையில், பிரவுசரில் நம் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இதன் மூலம், இணையத்தில் நம் தேடல் மிக எளிதாக முடிவுகளைப் பெறும்.
எட்ஜ் பிரவுசரின் முகவரிக் கட்டத்தில், ஒரு கேள்வியை டைப் செய்திடத் தொடங்கும்போதே, எட்ஜ் அதற்கு தேடல் விடைகளாக வரக்கூடியவற்றைப் பட்டியலிடத் தொடங்குகிறது. எடுத்துக் காட்டாக, இன்றைய பங்குச் சந்தை நிலவரம் குறித்து அறிய, தேடல் ஒன்றை மேற்கொண்டால், அந்தக் கேள்வியை டைப் செய்திடும்போதே, அன்றைய பங்கு விலை விபரங்கள் காட்டப்படுகின்றன. ஓர் உணவு விடுதி குறித்து கேள்வி அமையும் போதே, அங்கு செல்ல வழி, எவ்வளவு நேரம் அது இயங்கும், உங்கள் முந்தைய விருப்பங்களின் மீதான மெனு போன்றவை தயாராகப் பார்ப்பதற்கு இருக்கும்.
பிரவுசரைத் தொடங்கும்போதே, புதிய டேப் ஒன்றுடன் தொடங்கும். அதில் நீங்கள், அண்மையில் பார்த்த தளங்களின் பட்டியல் தரப்படும். அவற்றுடன், அன்றைய செய்தித் தளங்களுக்கான லிங்க்ஸ் கிடைக்கும். இதனால், பயனாளர், விரைவாக தனக்கு வேண்டியதை அணுகலாம்.

முற்றிலும் புதிய அனுபவம் தரும் வசதிகள்: பயனாளர்கள் படித்து அறியும் அனுபவத்தில், பல புதிய திருப்பங்களை எட்ஜ் பிரவுசர் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எட்ஜ் பிரவுசரில் தேவையற்ற, நம் கவனத்தைத் திருப்புகின்ற சமாச்சாரங்கள் இல்லை.
வேண்டாத மெனுக்கள், பின்னணியில் இயங்கும் சிறிய புரோகிராம்கள் ஆகியவை தரப்படவில்லை. இணைய தளத்தின் வரிகளில், பயனாளர் ஆழ்ந்து படிக்கலாம். நம் கவனம் அனைத்தும், தளம் தரும் தகவல்களில் மட்டுமே இருக்கும். இந்த வசதியுடன், ஒரு பட்டனை அழுத்தினால், நாம் பார்க்கும் இணைய தளத்தின் மேல், நம் கருத்துகளை, குறிப்புகளை எழுதி வைக்கலாம். மறுமுறை அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், நம் குறிப்புகளும் நமக்குக் காட்டப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X